Monday, March 18, 2013

27 நட்சத்திரங்களுடைய பொதுவான பலன்கள்


1.அசுவினி 

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல புத்திசாலியாகவும், பலராலும், விரும்பி நேசிக்கப்பட்டவராகவும், செல்வந்தராகவும், நன்கு வளர்க்கப்பட்டவராகவும் விளங்குவீர்கள். அத்துடன் பிறருக்கு மரியாதை காட்டும் பண்பாடும் உண்மைபேசும் குணமும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதான சுபாவமும் உங்களிடம் காணப்படும். நீங்கள் உங்கள் தொழிலில், பயிற்சி பெற்றவராக விளங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், நீங்கள் நல்ல உறவுகளைப் பராமரித்து வருவீர்கள். நீங்கள் நல்ல உடையுடுத்திடுவதிலும் ஆபரணங்களிலும் ஆசை கொண்டவர். உங்களுக்கு பருமனான உடல் கட்டிருந்தாலும், பலவீனமான கல்லீரல் இருக்கும். உங்களுடைய 20 - வது வயதிலிருந்து, நீங்கள் நல்ல அதிருஷ்டசாலியாக இருப்பீர்கள். குந்த் முல நகூஷத்திரத்தில் நீங்கள் பிறந்திருப்பதால், பூஜைகளைச் செய்திடவேண்டும்.

2.பரணி

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், உங்களைப் பற்றிய அபாண்டமான வதந்திகளுக்கு, நீங்கள் இலக்காவீர்கள். உபயோகமற்ற முயற்சிகளில், நீங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். அன்றாடப் பணிகளில், நீங்கள் ஒழுங்காகச் செயல்படமாட்டீர்கள் வழக்கத்துக்கு விரோதமான செயல்களில் நீங்கள் நாட்டம் காட்டுவீர்கள்.

3.கார்த்திகை

இந்த நகூஷத்திரத்தில் நீங்கள் பிறந்தவராதலால், நீங்கள் கஞ்சத்தனமாகவும், நன்றிகெட்டவராகவும், எப்போதுமே பதட்டம் மிகுந்த, மனக் கவலையுடையவராகவும் இருப்பீர்கள். உங்கள் பண நிலைமை, சிறப்பாக இராது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு நல்லுறவு நிலவாது. உணவு மற்றும் லவங்க சாமான்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு பளிச்சென்ற நல்ல தோற்றமிருக்கும் நீங்கள் பரவலாகப் புகழ்பெற்று விளங்குவீர்கள். யாருமே, உங்களை நம்ப முடியாது நியாயமற்ற வழிகளில் நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள். ஆனால். உங்களுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை முடித்துக் கொடுக்கும் திறமை, உங்களுக்கு இருக்கிறது.

4.ரோகிணி

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் மதத்தில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு விவசாயம் முலமாகத்தான், முக்கியமாக வருமானம் கிடைக்கும். நீங்கள், நல்ல அழகிய தோற்றமுடையவராகவும், புத்திசாலியாகவும், புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதில் மிகுந்த சாமர்த்தியசாலியாகவும் விளங்குவீர்கள்.

5.மிருகசீரிசம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், போரிலும், போர்சார்ந்த உத்திகளிலும், தந்திரங்களிலும் வெற்றி காண்பீர்கள். மற்றவர்களிடம் மரியாதையோடும் பண்போடும் பழகுவீர்கள் உணர்ச்சி வெறியுடைய உங்களுக்கு, அரசு உயர் அதிகாரிகள் நல்ல மதிப்பும் மரியாதையும் அளிப்பார்கள். நேர்த்தியானவற்றை நன்கு உணர்ந்து பாராட்டக்கூடிய நீங்கள் எப்போதுமே, சரியான பாதையைத்தான் தெரிந்தெடுப்பீர்கள்.

6.திருவாதிரை

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், உண்மைக்குப் புறம்பாக இருப்பதுடன், மிகவும் மோசமான கோப சுபாவம் கொண்டவராகவும் இருப்பீர்கள். ஆயினும்கூட, நீங்கள் அறிவுத் திறன்பெற்ற புத்திசாலியாக இருப்பீர்கள். பிறருக்கு கொடுமை விளைவித்து, அதில் மகிழ்ச்சிகாண முயலும் நீங்கள், பல சமயங்களில், நன்றிகெட்டவராகவும், வருங்காலத்தில் நல்ல நம்பிக்கை கொண்ட தைரியசாலியாகவும் விளங்குவீர்கள். உங்கள் வாழ்க்கையில், சாதாரணமாக பல வசதிகளும் சுகபோகங்களும் இராது நீங்கள் கடினமான வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கலாம் நீங்கள் செலவாளியாக இருப்பதுடன், துன்பங்கள் நேரிடும்போதும், மனம் கலங்காமல் இருப்பவர். உங்கள் உடல்வாகு, சீரானதாக இராது 25 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் வெற்றி காண்பீர்கள்

7.புனர்பூசம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் பொறுமைசாலியாகவும், அமைதியான சுபாவமுடையவராகவும் இருப்பீர்கள் நல்ல குணத்துடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அன்புக்கும், பிரியத்துக்கும் பாத்திரமானவராக விளங்குவீர்கள். உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் நீங்கள் தாராள சிந்தையுடையவராக இருப்பீர்கள். குழந்தைகள் முலம் மன நிறைவு பெற்று, நல்ல செல்வந்தராக விளங்குவீர்கள். மதிப்பு வாய்ந்த ரத்தினக் கற்களில் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும் சொந்தத்தில் சொத்துக்களும் இருக்கும். நீங்கள் விரிவாக, பல இடங்களில் பயணம் செய்வீர்கள் 24 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.

8.பூசம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், உங்கள் விருப்பங்கள்மீது, உங்களுக்குக் கட்டுப்பாடு இருக்கும் பொதுவாக பலரும் உங்களை விரும்பி நேசிப்பார்கள் சமய ஈடுபாடும், தாராள சிந்தையும், மற்றவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையும், உங்களிடம் காணப்படும். நீங்கள், நன்கு படித்த புத்திசாலியாகவும், தெய்வ நம்பிக்கையுடன், உண்மையில் உறுதி கொண்டவராகவும் இருந்து, வசதியான வாழ்க்கை நடத்துவீர்கள். நீங்கள் மிகுந்த அதிருஷ்டசாலியாகவும், செல்வந்தராகவும், நல்ல உடல்கட்டு அமைந்தவராகவும் விளங்குவீர்கள். 35 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

9.ஆயில்யம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் பணக்காரராக இருப்பீர்கள் அதனால் உங்கள் குடும்பத்துக்கு, பெரிய அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள் ஆனால், நீங்கள் பணத்தை விரயம் செய்வீர்கள். உங்கள் தந்தை, தாய் அல்லது உங்கள் வயதுடைய மற்றவர்களுக்கு, நீங்கள் தீங்கு விளைவிப்பவராக மாறக்கூடும். நீங்கள், ஒரு குறிக்கோளே இல்லாமல், இங்குமங்கும் திரிபவர் பாவகாரியங்களைச் செய்பவர் நன்றிகெட்டவர் சுயநலவாதி. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு மோசமான உறவுகள் இருந்துவரும். சந்தேகத்துக்குரிய கள்ள நடவடிக்கைகளிலும், பயனற்ற முயற்சிகளிலும், நீங்கள், உங்கள் ஆற்றலை செலவிடுவதுடன், மற்றவர்களை ஏமாற்றமும் செய்வீர்கள். மதுபானம் அருந்துவதிலும் சாப்பாடு சாப்பிடுவதிலும் பேரவா கொண்ட உங்களுக்கு, பெரிய குடும்பம் இருக்கும். உங்களுக்கு பலவீனமான கல்லீரல் இருக்கும் 33 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.

10.மகம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல செல்வந்தராகவும், புத்திசாலியாகவும், பிறரிடம் கருணை காட்டி உதவி செய்பவராகவும் இருப்பீர்கள். நீங்கள் வியாபாரத்தில் வெற்றி காண்பதுடன், சுகபோகமான வாழ்க்கையொன்றும் நடத்துவீர்கள். உங்களுக்கு பல பணியாட்கள் இருப்பார்கள் மதகாரியங்களில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கும். உங்கள் மனைவியுடன் சுமுகமான உறவுகளை கொண்டிருப்பீர்கள். உங்கள் பெற்றோர்களிடம், கடமைப் பற்றுடன் நடந்து கொண்டாலும், எதிலும் கண்டிப்பாக இருக்கக்கூடிய, ஒரு கடும் சுபாவம், உங்களிடம் குடிகொண்டிருக்கும். உங்கள் எண்ணமும் செயலும், தெளிவானதாய், திட்டவட்டமானதாக அமைந்திருக்கும். உங்கள் கல்லீரல் பலவீனமடைந்ததாய் இருக்கும். குந்த் முல நகூஷத்திரத்தில் நீங்கள் பிறந்திருப்பதால், பூஜைகள் செய்யவேண்டும் 25 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.

11.பூரம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், மென்மையாக பேசும் குணம் உடையவராகவும், சமயப்பற்றும், துணிச்சலும், தாராள சிந்தையும், பகைவர்களை வெற்றி கொள்ளும் சாதுர்யமும், தந்திரபுத்தியும் கொண்டவராக இருப்பீர்கள். நீங்கள், காமவெறி உணர்ச்சியும், கர்வமும் கொண்டிருப்பீர்கள். நிதிநிலை, அவ்வளவு வசதியாக இராது 33 லிருந்து 38 வயது வரையான காலம், உங்களுக்கு அதிருஷ்டமானதாக இருக்கும்.

12.உத்திரம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள், கருணை உள்ளம் நிறைந்தவராகவும், பொறுமை மிக்கவராகவும், நல்ல பண்பாடான நடத்தை கொண்டவராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் விளங்குவீர்கள். நீங்கள், உங்கள் சொந்த சம்பாதிப்புடன், சுகபோகமாக வாழ்க்கை நடத்துவீர்கள். உங்கள் உடல் எடை அதிகரித்திடலாம் 28 லிருந்து 31 வயது வரையான காலத்தில், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.

13.அஸ்தம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், மிகுந்த விவேகியாகவும், தாராள மனம் கொண்டவராகவும், செல்வந்தராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் விளங்குவீர்கள். துறவிகளிடம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும். 30 லிருந்து 32 வயது வரையான காலத்தில் நீங்கள் முன்னேறுவீர்கள்.

14.சித்திரை

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், பல்வேறான வண்ணங்களிலான துணிகளிலும் உடைகளிலும், உங்களுக்குக் கொள்ளை ஆசை இருக்கும். மலர்களை, நீங்கள் மிகவும் விரும்புவீர்கள். போர், உத்திகள் பற்றிய பல விஷயங்கள், உங்களுக்குத் தெரிந்திருக்கும். படிப்பும், அறிவும், பணமும் படைத்தவரான நீங்கள், சத்திய வாதியாக விளங்குவீர்கள். உங்கள் மனைவியும் குழந்தைகளும், உங்களுக்கு மன மகிழ்ச்சி தருவார்கள். நல்ல வசதியான வாழ்க்கை நடத்தப்போகும் நீங்கள் கடின உழைப்பாளியாகவும், துணிச்சல் மிக்கவராகவும், பொருள் ஆர்வம் கொண்டவராகவும் விளங்குவீர்கள். கட்டிடங்கள் கட்டுவது, வைத்தியம், ஜோதிடம் ஆகியவற்றில், உங்களுக்கு நல்ல அறிவாற்றல் இருக்கும். நீங்கள் சமயப்பற்றும், தெய்வ பக்தியும் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பணம் சம்பாதித்தாலும் பணம் சேர்த்து வைத்திட முடியாது. நீங்கள் பொதுவாக, பருமனாக இருப்பீர்கள். 30 லிருந்து 35 வயது வரையான காலத்தில் உங்களுக்கு நல்ல அதிருஷ்டங்கள் கிடைக்கும்.

15.சுவாதி

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல அழகிய தோற்றத்துடனும், மகிழ்ச்சியான சுபாவத்துடனும், விளங்குவீர்கள் உங்களுக்கு சமயப்பற்று இருக்கும் தர்ம காரியங்களுக்காக நன்கொடை அளிப்பீர்கள். நீங்கள், உங்கள் உணர்ச்சிவெறிகளை கட்டுப்படுத்தி வைத்திடும் ஆற்றல் பெறுவீர்கள் ஆனால் விரகதாபத்தைப் (உணர்ச்சி வேட்கையை) பொறுத்துக்கொள்ள, உங்களால் இயலாது. வியாபாரத்தில் தேர்ச்சி பெற்றவராக விளங்குவதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் நல்லுறவுகளைப் பராமரிப்பீர்கள். 30 லிருந்து 35 வயது வரையான காலத்தில், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.

16.விசாகம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், சமயப் பற்றும், தெய்வ பக்தியும் கொண்டவராக இருப்பீர்கள் ஆனால் பொறாமையும், நட்பில்லாத பகைமை உணர்வும் உங்களிடம் காணப்படும். உங்கள் உடல்நிலை, ஒன்று, மிக ஆரோக்கியமானதாக இருக்கலாம் அல்லது மிக மோசமானதாய் இருக்கும். 21, 28 மற்றும் 34 ஆம் வயதை எட்டும்போது, நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.

17.அனுஷம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல செல்வந்தராகவும், பெரும்பாலும் அயல் நாட்டில் வசிக்கக் கூடியவராகவும் இருப்பீர்கள். உங்களால் பசியைப் பொறுத்துக் கொள்ள இயலாது பயணம் செய்வதில் உங்களுக்கு நல்ல விருப்பமிருக்கும். நீங்கள் நன்கு படித்துத் தேர்ச்சி பெற்றவராகவும், பணம் ஈட்டுவதில் படுசாமர்த்தியசாலியாகவும் இருப்பதுடன், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், உதவியும் செய்வீர்கள். 39 வது வயதில்தான், உங்கள் வாழ்க்கையின் அதிருஷ்டவசமான காலகட்டம் துவங்குகிறது.

18.கேட்டை

பொதுவாக கேட்டை நட்சத்திரக்காரர்கள் இளகிய மனதும், நன்றாகப் பழகும் குணமும் உடையவர்களாக இருப்பதால் அடுத்தவர்களின் மனக்கோட்டையையும் இவர்கள் ஆள்வார்கள். எதையும் ஆட்சி செய்யும் தன்மையைப் பெற்றிருந்தாலும், கொடுங்கோல் ஆட்சி செய்ய இவர்கள் விரும்பமாட்டார்கள். உபசரிக்கும் குணம், சரித்துப் பேசும் குணம் இவர்களுக்கு இருப்பதால் எப்போதும் அவர்களைச் சுற்று ஒரு நட்பு வட்டம் இருந்து கொண்டே இருக்கும். எனவே, கேட்டை நட்சத்திரம் கோட்டையை ஆள்வது உறுதி. அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த ஜாதகருக்கு புதன் நீச்சம் பெறாமல், பகை வீட்டில் அமராமல், பகைக் கோளுடன் சேராமல், 6/8க்கு உரியவனுடன் சேராமல், நல்ல ஆதிபத்யம் பெற்ற கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் கோட்டையைப் பிடிப்பார்/ஆள்வார். 

19.மூலம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் பணக்காரராகவும், மகிழ்ச்சி நிறைந்தவராகவும் இருப்பீர்கள். நீங்கள், மற்றவர்களுக்கு தீங்கு விளைவித்திடமாட்டீர்கள் மிகவும் உறுதியான கருத்துக்களைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள், தாராள சிந்தை கொண்டிருப்பீர்கள். பிறரால் விரும்பி நேசிக்கப்படுவீர்கள் நண்பர்களும் உறவினர்களும், உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் தருவார்கள். டாம்பீகமான சொகுசு வாழ்க்கையை நீங்கள் வாழ்வதுடன், பதட்டப்படாத அமைதியான சுபாவம் ஒன்றையும் கொண்டிருப்பீர்கள். உங்கள் வயதை ஒத்தவர்கள் அல்லது உங்கள் தந்தை, சகோதரர் போன்றவர்களுக்கு, நீங்கள் கேடு விளைவித்திடலாம். உங்களுக்கு கல்லீரல் கோளாறு ஏற்படும். உங்கள் வாழ்க்கையின் 27 அல்லது 31 வது வயதில், நீங்கள் செழிப்பைக் காண்பீர்கள்.

20.பூராடம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், நீங்கள், புத்திசாலியாகவும், கர்வமுடையவராகவும், மற்றவர்களுக்கு உதவியளித்து, நண்பர்களிடம் மிகுந்த ஒட்டுதலாகவும் இருப்பீர்கள். உங்கள் விருப்பத்துக்கு இசைவான மனைவியும் உங்களுக்கு கிடைப்பாள் நீங்கள் உறுதியான கருத்துக்களைக் கொண்டிருப்பீர்கள். குழந்தைகள் மற்றும் நண்பர்கள் முலம் உங்களுக்கு மன மகிழ்ச்சி கிட்டும். உங்கள் 28 வது வயதில், அதிருஷ்டவசமான காலம் ஆரம்பமாகும்.

21.உத்திராடம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், கடமைப்பற்றுடன் கீழ்ப்படிந்தும், நல்ல குணம் படைத்தவராகவும், பல நண்பர்களைக் கொண்டவராகவும் விளங்குவீர்கள். நீங்கள் நன்றியுடையவராகவும், அன்புள்ளம் நிறைந்தவராகவும் இருப்பதுடன், உங்களுக்கு கிடைத்த உதவிக்கு நன்றிக் கடனும் செலுத்துவீர்கள். நீங்கள், மிகுந்த தந்திர புத்தியுடைய சாமர்த்தியசாலியாகவும், முயற்சியில் வெற்றி காண்பவராகவும் விளங்குவீர்கள். உங்களுக்கு பல செல்வந்தர்களைத் தெரிந்திருக்கும் உங்கள் முதலாளிகள் உங்களை மதித்து மதிப்புக் கொடுப்பார்கள். இசையிலும் நடனத்திலும் உங்களுக்கு அபார ஆசை இருக்கும். உங்கள் 31 வது வயதுக்குப் பின், மிகுந்த அதிருஷ்டசாலியாக இருப்பீர்கள்.

22.திருவோணம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நல்ல சுபிட்சத்தோடும், படித்தவராகவும், புத்திசாலியாகவும் விளங்குவீர்கள். இசை, ஜோதிடம், கணிதம் - ஆகியவற்றில் உங்கள் மிகுந்த ஆர்வம் இருக்கும். உங்கள், அதீதமான, நல்ல சக்திவாய்ந்த உள்ளுணர்வு ஒன்று இருக்கும். உங்களுக்கு கவர்ச்சிமிக்க, தாராள மனம் படைத்த மனைவி/கணவன் கிடைப்பார். உங்கள் வாழ்க்கையில், 9 வது மற்றும் 24 வது வயதில், நல்ல அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

23.அவிட்டம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால் இசையில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருப்பீர்கள். தாராள சிந்தையும், செல்வவளமும், நல்ல தீர உணர்வும் கொண்டவராக நீங்கள் விளங்குவீர்கள். பிறர் உங்களை மதித்து மரியாதை, தருவார்கள் உங்கள் கணவன்/மனைவி உங்களை மிகவும் விரும்பி நேசிப்பார். நீங்கள் தைரியமானவராக இருப்பீர்கள் உங்கள் சகோதரர்கள் மற்றும் உறவினர்களை, நீங்கள் மிகவும் விரும்பி அன்பு காட்டுவீர்கள். உங்களின் 15 வது, 23 வது மற்றும் 29 வது வயதுகளில்தான், மிக அதிருஷ்டமான காலத்தைப் பார்க்க முடியும்.

24.சதயம்

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், தர்மசிந்தை உடையவராகவும், செல்வவளமும், தாராள மனமும், சுயேச்சையான கருத்தும், புத்திசாலித்தனமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும் விளங்குவீர்கள். உங்கள் பகைவர்களை ஒடுக்கி வெற்றி காண்பீர்கள். உங்களைப் பலரும், மதித்து மரியாதை காட்டுவார்கள் உங்களுக்கு நல்ல அந்தஸ்தும் அதிகாரமும் இருக்கும். நீங்கள் எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகச் சொல்லிவிடக் கூடியவர் ஆனால் உண்மை பேசுபவர்/ நீங்கள் கஷ்டங்களை அனுபவிப்பீர்கள் உங்கள் வாழ்க்கையில், 22 வது வயதில்தான், உங்களுக்கு பிரமாதமான நல்ல அதிருஷ்டம் ஏற்படும்.

25.பூரட்டாதி

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், பணம் சம்பாதிப்பதில் வெற்றி காண்பீர்கள் அதிகமாகப் பேசக்கூடிய நீங்கள், நன்கு படித்தவர் தேர்ச்சிபெற்றவர். நண்பர்களுடன் உங்களுக்கு நல்ல உறவுகள் இருந்து வரும். நீங்கள் தெளிவாகப் பேசுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை, பெரும்பாலும் ஒரு பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவராக இருப்பார். நீங்கள், வெகு எளிதில், எதிர்பாலைச் சேர்ந்தவர்களால் ஈக்கப்படுகிறீர்கள். குழந்தைகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். உங்களுக்கு, நல்ல, உடல்கட்டு இருக்கும் உங்கள் வாழ்க்கையில் 19 வது மற்றும் 21 வது வயதில்தான் மிகவும் அதிருஷ்டமான காலத்தை எட்டுவீர்கள்.

26.உத்ரட்டாதி

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், ஒரு சிறந்த மேடைப் பேச்சாளராகவும், மகிழ்ச்சி நிறைந்தவராகவும், நற்குணமும், எதிரிகளை ஒடுக்கி வெற்றி கொள்ளும் திறனும் மிக்கவராகவும் விளங்குவீர்கள். நீங்கள், தாராள சிந்தையுடையவராகவும், செல்வவளமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும் இருப்பீர்கள். உங்களுக்கு கவர்ச்சிகரமான, வசீகர உடற்கட்டு இருக்கும். உங்களுக்கு குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையில், 27, 31 ஆம் வயதில்தான், நல்ல அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள்.

27.ரேவதி

நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நல்ல சுபாவம் உடையவராகவும், பணக்காரராகவும், நன்னம்பிக்கையும், அறிவாற்றலும் படைத்தவராகவும், நியாயமான வழிகளில் பணம் சம்பாதிப்பவராகவும் நீங்கள் விளங்குவீர்கள். நீங்கள், வயதில் பெரியவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பணிந்து நடப்பதுடன், மரியாதையும் அளிக்கிறீர்கள். நீங்கள் இந்த குந்த் முல நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், பூஜை செய்திடவேண்டும். உங்கள் 17, 21, மற்றும் 24 ஆம் வயதை எட்டும்போது ,நல்ல அதிருஷ்டத்தைப் பாக்கலாம்

No comments:

Post a Comment