தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர். மஞ்சள் நிறச் சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர். நீல நிறச் சேலை அணிந்தும் தீபமிடலாம்.
அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது. மற்ற நாட்களில் நீலநிறச் சேலை அணிந்தால் நோய்கள் குணமாகும். பேய், பிசாசுத் தொல்லைகள் நீங்கும். சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம்.
சிவப்புச் சேலை அணிவதால் திருமணத் தடை நீங்கி இல்லறச் சுகம் கிட்டும். மலட்டுத் தன்மை அடியோடு ஒழியும். போய், பிசாசு தொல்லைகள் விலகும். செய்வினை அழியும். வெள்ளைச் சேலையைச் சுமங்கலிப் பெண்கள் தவிர மற்றவர்கள் அணியலாம்.
வெள்ளைச் சேலை புதியதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும். வெள்ளைச் சேலை அணிந்தால் உத்தமமான பலன்கள் வாழ்வில் உண்டாகும். திருவிளக்கும், தீபமும் அன்னையின் அம்சங்கள் என்றாலும் அனைத்தும் தெய்வங்களையும் திருவிளக்கிட்டு தீபமேற்றியே நாம் காலம் காலமாய் வழிபட்டு வருகின்றோம்.
அவ்வாறு வழிபடுகையில் இன்னின்ன தெய்வங்களுக்கு இன்னின்ன தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளனர். தேவி கருமாரியை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணை, இலுப்பை எண்ணை என ஐந்து எண்ணை கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.
No comments:
Post a Comment