Wednesday, August 14, 2013

ரொம்ப யோசிக்காதீங்கப்பு ….. SOLUTIONS ARE VERY SIMPLE !

அது ஜெர்மனியில் உள்ள ஒரு உயர் தர பெர்ஃப்யூம்  தயாரிக்கும் நிறுவனம். தினமும் ஆயிரக்கணக்கான யூனிட்டுகளை தயாரித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனைக்கு அனுப்புவார்கள்.

ஒரு முறை, தான் வாங்கிய பேக்கில் பெர்ஃப்யூம் இல்லையெனவும், வெறும் பாக்ஸ் தான் இருந்தது எனவும் கஸ்டமர் ஒருவர் புகார் கூறினார். அடுத்தடுத்து நாட்களில் மேலும் சிலர் இதே போல புகார் கூறவே… காலி பாக்ஸ்கள் எப்படியோ விற்பனைக்கு சென்ற யூனிட்டுகளில் கலந்துவிட்டதை கண்டுபிடித்தார்கள். கம்பெனி நிர்வாகம் இந்த பிரச்னையை அசெம்ப்ளி செக்ஷனுக்கு கொண்டு சென்றது. அவர்கள் தீவிரமாக ஆராய்ந்து பேக்கேஜிங்கின் போது தான் இந்த தவறு நடக்கிறது என்று கண்டறிந்தார்கள்.

நிறுவனம் அதன் முதன்மை என்ஜீனியர்களை அழைத்து பிரச்னையை உடனே தீர்க்கும்படியும் இல்லையேல் கம்பெனியின் பெயர் மார்கெட்டில் ரிப்பேராகிவிடும் என்று கூறி பணியை முடுக்கிவிட்டனர்.

என்ஜினீயர்கள் மூன்று நாட்கள் தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு ஒரு எக்ஸ்-ரே மிஷினை நிர்மாணித்து அதுனுடன் இரண்டு மானிட்டர்களை இணைத்து கன்வேயர் பெல்ட் வழியாக எக்ஸ் ரே மிஷினுக்குள் யூனிட்டுகள் சென்று வரும் என்றும் அப்போது பெட்டி காலியாக இருந்தால் மானிட்டரில் கண்டுபிடித்து அவற்றை அப்புறப்படுத்திவிடுவார்கள் என்றும் கூறினார்கள்.

ஒரு வழியாக பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததே என்று கம்பெனி நிர்வாகம் இதை ஒப்புக்கொள்ள, லட்சக்கணக்கில் செலவு செய்து இதற்கென பிரத்யேக எக்ஸ்-ரே மெஷின் ஒன்றை இம்போர்ட் செய்து, தனி அறை வைத்து அனைத்தையும் நிர்மாணித்தது. இந்த புதிய செக்யூரிட்டி சிஸ்டத்தை கவனிப்பதற்கு என்றே மூன்று பேர் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டனர்.

ஓரிரு நாட்கள் சென்றது… அந்தக் கம்பெனியின் கடை நிலை ஊழியர் ஒருவர் சுத்தம் செய்வதற்காக அந்த புதிய டிப்பார்ட்மெண்ட்டுக்கு  வந்தபோது, எதற்கு இந்த ஏற்பாடு என்று அங்கிருந்த என்ஜீனியர்களை கேட்க, அவர்கள் நடந்ததை கூறினார்கள்.

“இப்ப்பூ….. இவ்ளோ தானா? இதுக்கு போயா இவ்ளோ செலவு பண்ணீங்க? கன்வேயர் பெல்ட்டில் யூனிட் பேக் ஆகி வரும்போது அதுக்கு முன்னால ஒரு பெரிய இண்டஸ்ட்ரியல் ஃபேனை ஓடவிடுங்க… காலியா வர்ற சென்ட் பாட்டில் தானா காத்துல பறந்து அந்தப் பக்கம் போய் விழுந்துடும்…. சரக்கு இருக்குற யூனிட் மட்டும் அப்படியே பாஸ் ஆகிப் போகும்… அவ்ளோ தான்… ப்ராப்ளம் சால்வ்ட்.!” என்று கூற அதை கேட்ட என்ஜீனியர்கள் மயக்கம் போட்டு விழுந்ததை சொல்லவும் வேண்டுமா என்ன?

ஆங்கிலத்தில் இதை ‘Thinking out of the box’ என்பார்கள். அதாவது எதையும் (குறிப்பாக எந்தப் பிரச்னையையும்) வித்தியாசமான, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் – எவரும் சிந்திக்காத வகையில் – சிந்திப்பது.

இதைத் தான் ஷிவ் கேரா சற்று மாற்றி WINNERS DON’T DO DIFFERENT THINGS. BUT THEY DO THINGS DIFFERENTLY என்று சொன்னார்.

ஒ.கே. – கதை பிடிச்சிருந்ததா?

இந்த சின்னக் கதைல ஒரு கார்பரேட் கம்பெனிக்கு தேவையான நீதிகள் முதல் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் வரை நிறைய நீதிகள இருக்கு…..!

உங்களுக்கு தெரிஞ்ச நீதியை கொஞ்சம் சொல்லுங்க பார்க்கலாம்!

No comments:

Post a Comment