* ஐந்து விஷயங்களை, ஐந்து விஷயங்களுக்கு முன் அரிதாகக் கருதுங்கள். முதுமைக்கு முன் இளமையையும், நோய்க்கு முன் உடல் நலத்தையும், வறுமைக்கு முன் செல்வத்தையும், வேலையில் ஈடுபடும் முன் ஓய்வையும், மரணம் வரும் முன் வாழ்க்கையையும் அரிதாகக் கருதி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
*இறைக்கட்டளைகளை எடுத்துரைக்க மட்டுமே உரிமை உண்டு. ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கட்டாயப் படுத்துவது, மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். சுதந்திரம் வழங்கப்பட்ட மனிதனையே இறைவன் மறுமையில் அவனது செயல்களுக்கு பொறுப்பாளிஆக்கி விசாரணைக்குட்படுத்தி தீர்ப்பு வழங்க முடியும்.
*ஒரு இறைநம்பிக்கையாளர் விவசாயம் செய்கிறார் அல்லது செடிகளை நடுகிறார்; அதிலிருந்து பறவைகள், மனிதர்கள், பிராணிகள் ஏதாவது சாப்பிட்டால் அந்த மனிதருடைய கணக்கில் அது ஒரு அறச்செயலாக கணக்கிடப்படுகிறது.
*ஏழைகளுக்கு தானம் வழங்கினால் ஒரு நன்மை கிட்டும். உறவினர்களுக்கு தானம் வழங்கினால் இரண்டு நன்மைகள் கிட்டும். ஒன்று, தானம் வழங்கியதற்காக; மற்றொன்று உறவுகளை இணைத்ததற்காக!
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)
No comments:
Post a Comment