காசிக்கு நிகரான தலம் தமிழகத்தில் எங்கிருக்கிறது?
"சுவேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜுனம்!
சாயாவனம்ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்ர ஸமான ஷட்!!
என்று ஒரு ஸ்லோகம் உள்ளது. இதன்படி, திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்) திருவையாறு, திருவிடைமருதூர், (தஞ்சாவூர் மாவட்டம்) மயிலாடுதுறை, பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம்(நாகை மாவட்டம்) ஸ்ரீவாஞ்சியம் (திருவாரூர் மாவட்டம்) ஆகிய ஆறு தலங்கள் காசிக்குச் சமமான க்ஷேத்திரங்களாகக் கூறப்படுகின்றன. அவிநாசி, தென்காசியும் காசிக்குச் சமமானவை.
** பரிகாரம் செய்தும் பலன் கிடைக்காவிட்டால் என்ன செய்வது?
நம்பிக்கை தான் எல்லாவற்றிற்கும் சிறந்த பரிகாரம். பொறுத்திருங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
* இரட்டைத்திரி போட்டுத் தான் விளக்கேற்ற வேண்டுமா?
அப்படி ஒன்றும் விதி கிடையாது. விளக்கின் அளவிற்கு ஏற்றாற்போல் ஒரே திரியாகப் போட்டு ஏற்றினால் போதுமானது.
* குளித்து விட்டு ஈரத்துணியுடன் வழிபாடு செய்யலாமா?
ஈரத்துணியுடன் எந்த நல்ல செயல்களும் செய்யக்கூடாது. துவைத்துக் காய்ந்த தூய்மையான ஆடைகளை அணிந்தே வழிபாடு செய்ய வேண்டும்.
* நாம சங்கீர்த்தனம் சிறப்பானது என்று சொல்வது ஏன்?
பகவான் நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பதையே நாம சங்கீர்த்தனம் என்பர். கலியுகத்தில் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் கஷ்டங்கள் ஏற்படத்தான் செய்கிறது. இதிலிருந்து ஓரளவாவது நம்மைக் காப்பாற்றக் கூடியது இதுதான்.
No comments:
Post a Comment