எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன.
வெற்றி, மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறது.
கடின முயற்சி ஒன்றே நாம் அந்த உயரத்தை சென்றடைய வழி.
உழைத்தால் மட்டுமே முயற்சி திருவினையாகும்.
மனித வாழ்ககைப் பயணம்.
|
நோய்.........நோய்.........
இந்த உலகில் விஞ்ஞான வள்ர்ச்சியால் பொருள் மற்றும் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் போது நமது வுடல், மனம், மற்றும் ஆன்ம ஆரோக்கியம் அதிகரிக்க வேண்டுமே !
ஆனால், மருந்துகள் மற்றும் மருத்துவமனகள் வள்ர்ந்த அளவில், உடல், மனம், மற்றும் ஆன்ம ஆரோக்கியம் அதிகரிக்க வில்லையே. அது ஏன்?. நம்மை சுற்றி எங்கு பார்த்தாலும் வியாதி மற்றும் மனச்சோர்வு கொண்ட மனிதர்களே அதிக அளவில் தென்படுகிறார்கள் காரண்ம் என்ன?.
1 வயது....20 வயது வாழ்க்கை:
வாழ்க்கையில் முதல் 20 ஆண்டுகளுக்கு மனிதன், கல்வியைத் தேடி அலைகிறான், பல்கலைகழகப் பட்டமும் பெறுகிறான். அந்த காலக் கட்டத்தில் உடலைப் பற்றியோ, உடற் பயிற்சியைப் பற்றியோ, மனஈடுபாடு கொண்டு சிந்திக்க 5 முதல் 10 சதவீத இளைஞர் மற்றும் இளைஞிகளுக்கு மட்டுமே நேரம் உள்ளது.
மற்றவர்கள் இளமை முறுக்கில், இனிமையான ஆரம்ப கால வாழ்க்கையைச் சரியாக நேரத்தைப் பயன்படுத்தாமல் தொலைக்கின்றனர்.
ஐந்தில் உடற்பயிற்சிக்கு வளையாதது.........
ஐம்பதில் உடற்பயிற்சிக்கு வளையாது.............
ஆரோக்கியப் பாப்பா:
முண்டாசு கவிஞன் பாரதி அன்று பாடினான் 'ஓடி விளையாடு பாப்பா........ஓய்ந்து இருக்கலாகாது பாப்பா.......'என்று ஆனால், இன்று, அத்தகைய காலம் மாறி போய், ஒட்டகத்தை மற்றும் விளையாட்டை தொலைக்காட்சிப் பெட்டியின் முன் உட்கார்ந்து பார்ப்பதுதான் இன்றைய நவீன கால பாப்பாகளின் வாழ்க்கை நடை முறை.
இன்றைய பாப்பாகளில் அதிகமான பேர் ஓட்டம் மற்றும் விளையாட்டு பற்றி தொலைக்காட்சி மூலமே தெரிந்து கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
ஊளச் சதை.........குண்டு பாப்பா............
இத்தகைய, ஆரோக்கியமற்ற சூழ்நிலைதான், விஞ்ஞான முன்னேற்றமா? அல்லது நமது அறியாமையா? விளைவு. நம்மைச் சுற்றி பல கொழு கொழு குழந்தை மற்றும் குண்டு குண்டு பாப்பாக்கள் பெருத்துவிட்டனர்.
தொலைக் காட்சி மற்றும் இண்டர்நெட்டின் மோகத்தில் நேரத்தைத் தொலைத்த பாப்பாக்களுக்கு, விளையாட்டு மைதனத்துக்கு சென்று விளையாட நேரம் ஒதுக்க முடியவில்லை, என்ன மடமை !!
விளைவு, இளைமையிலேயே உடற் சோர்வு, மற்றும் மனச் சோர்வு கொண்ட பாப்பாக்கள் இந்த சமுதாயத்தில் அதிகமாகிவிட்டனர், மற்றும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளனர்.
உறுதிகொண்டநெஞ்சினாய்............
பாரதி கண்ட இந்திய இளைஞன் கனவு 'ஒளி படைத்த கண்ணினாய் வா...வா....உறுதி கொண்ட நெஞ்சினாய் வா....வா..' இன்று நம்மில் நூற்றில் எத்தனை பேருக்கு ஒளி படைத்த கண் உள்ளது? புறக்கண்ணில் தேஜஸ் உள்ளது? அகக்கண்ணில் தொலை நோக்குப் பார்வை உள்ளது?
நம்மைச் சுற்றி தொலைக்காட்சியை அதிகம் பார்த்து அதன் விளைவாக கலை இழந்த சோடா பாட்டில் கண்ணாடிக் கண்தான், இல்லை....இல்லை...காட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்த கண்கள் தான் அதிகம் தென்படுகிறது. இன்றைய இளைஞர்களிடம் அரோக்கியமான நெஞ்சம் இருக்கிறதா? அதை மனநல மருத்துவரிடம்தான் கேட்கவேண்டும்.
21 வயது........40 வயது வாழ்க்கை:
வாழ்க்கையில். 21 வயது முதல் 40 வயது வரையான காலகட்டத்தில் மனிதன் பணம், பதவி மற்றும் புகழை தேடி அலைகிறான். அதில் பல போராட்டங்கள் மன உளைச்சல் மற்றும் மன சலிப்பு.
இந்த காலக் கட்டத்தில், பலருக்கு உடலை பற்றியோ, மனதை பற்றியோ சிந்திக்கவே நேரம் கிடைப்பது இல்லை விளைவு, விலை மதிக்க முடியாத தன் உடம்பை மருத்துவர் கையில் நிரந்தரமாக தாரை வார்த்து கொடுக்க பலர் தன்னைத் தானே தயாராக்கிக் கொள்கின்றனர்.
என்ன அறியாமை? இதுதான் விஞ்ஞான முன்னேற்றமா?.
41 வயது........60 வயது வாழ்க்கை:
41 வயது முதல் 60 வயது வரையான காலகட்டத்தில் பணத்தில், பதவியில் மற்றும் புகழில் மனிதனுக்கு நிறைவி ஏற்படுகிறது. ஆனால், அந்த நிறைவை அனுபவிக்க உடல் ஆரோக்கியம் மன (உள்ள) ஆரோக்கியம் மற்றும் ஆன்ம (உயிர்) ஆரோக்கியம் நம்மில் பலருக்கு இருப்பது இல்லை. அது ஏன் ?
மரபி வழியில் வந்த பல நோய்கள் உடலில் தொற்றிக் கொள்கிறது. அது தவிர, பிறந்தது முதல் தனி மனிதன் வாழ்ந்த முறையற்ற வாழ்க்கை முறையின் பலனாக வந்த பல நோய்களின் பாதிப்பு உடல் மற்றும் மனதில் நிரந்தரமாக குடிகொள்கிறது.
ஆரோக்கியமே பணம்.........
'உடல் ஆரோக்கியத்தை வைத்து இந்த உலகில் பணம் பண்ண முடியும். ஆனால், பணத்தை வைத்து இந்த உலகில் உடல் ஆரோக்கியத்தை விலைக்கு வாங்க முடியாது', என்ற உண்மை மனிதனுக்க்கு உடல் கெட்ட பிறகு, அகக் கண்ணுக்குப் புலப்படுகிறது.
மனித வாழ்க்கையில் ஏறுமுகப் பயணம்..............
ஒவ்வொருமனிதனின் வாழ்க்கைப் பயணமும் ஒரு பரமபத விளையாட்டுத்தான். வியாழ்க்கை விளையாட்டில் ஏணியில் ஏறும்போது மனமகிழ்ச்சி.....
மனித வாழ்க்கையில் இறங்குமுகப் பயணம்..............
மனித வாழ்க்கை விளையாட்டில், பாம்பு கடிக்கும் போது, நோய் தொற்றிக் கொள்ளும் பொது, மனஸ்சோர்வு...........
மனித வாழ்க்கையில் ஏற்ற, இறக்கம் பயணம்.............
வாழ்கை என்ற பரமபத விளையாட்டில், முன்னேற்றம் என்ற ஏணியில் ஏறும் நாம் ஒவ்வொருவரும், பாம்பு கடிக்காமல் (வியாதிவராமல்) முன் எச்சரிக்கையாக இருப்போம்.
No comments:
Post a Comment