Tuesday, December 16, 2014

வளரிளம் பருவத்தில் மன ரீதியான மாற்றங்கள்

வளரிளம் பருவத்தில் மன ரீதியான மாற்றங்கள்
|
வாழ்க்கையில் பணத்தை இழந்தவள் ஒன்றையும் இழக்கவில்லை !

வாழ்க்கையில் உடல் ஆரோக்கியத்தை இழந்தவள் வாழ்க்கையில் ஒரு பகுதியை இழக்கிறாள் ! !

வாழ்க்கையில் நல்ல குண நலங்களை இழந்தவள் முழு வாழ்க்கையும் இழக்கிறாள் ! !

3.1 மனரீதியான மாற்றம்:

உடல் ரீதியான மாற்றங்கள் வளரிளம் பருவத்தில் கண்கூடாகத் தெரியும். மன ரீதியான மாற்றங்களும் வளரிளம் பருவத்தினரிடையே காணப்படும். ஆனால், அது வெளியே தெரியாது.

3.2 மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தல்:

தன்னை மிகவும் அழகாக வெளிப்படுத்திக் கொள்ள விரும்புதல், பலவகை அலங்காரங்கள் செய்து கொள்ள ஆசைப்படுதல் மற்றும் விதவிதமாக ஆடை அணிந்து கொள்வதற்க்கும் அதன் மூலம் ம்ற்றவர்களின் கவனத்தினை ஈர்க்க முயல்வதும், உடன் அவர்களின் பாராட்டுதலுக்காக காத்திருப்பதும், இப்பருவத்தில் வளரிளம் பெண்களிடையே இயல்பாக இருக்கக்கூடிய சுபாவங்கள் எனக் கூறலாம். 

3.3 மனம் ஒரு குரங்கு:

மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு
அதை தாவ விட்டால் - தப்பி ஓட விட்டால்....

எனக் கவிஞர் பாடியுள்ளார்.

ஆம் ! இந்த பாட்டில் 100% உண்மை உள்ளது. குறிப்பாக வளரிளம் பருவத்தில் இம்மனக் குரங்குகளின் சேட்டை அதிகமாகக் காணப்படும். அச்சமயத்தில் அப்பருவ எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், இலக்குகள் ஆகியவற்றினை வகைப்படுத்தியும், வ்ழிப்படித்துவதற்க்கும் ஊக்குவித்தால் வளரிளம் பெண்ணின் வாழ்க்கை, முன்னேற்றப் பாதையில் பயணிக்க வழி வகுக்கலாம்.

3.4 வெளி ஈர்ப்பு:

வளரிளம் ஒவ்வொரு இளம் பருவப் பெண்ணும், தனக்குப் பிடித்த நபர்கள் (நடிகையர், ஆசிரியை உட்பட), நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் நடை, உடை, பாவனைகளால் ஈர்க்கப்ப்ட்டு, அவர்களை கற்பனை நாயகிகளாக பாவித்து அதே போன்று தாமும் இருக்க விரும்புவர். முயற்சி செய்வர். இது இயல்பு.

3.5 சூழ்நிலை:

இந்த வளரிளம் பருவத்தில் நல்ல மதிப்பு, சுய கெளரவம், உண்மை, முயற்சி, இலக்குகள் போன்ற வாழ்வில் முன்னேற வேண்டியதற்காக நற்பண்புகளையும், குணங்களையும் உடைய மனிதர்களுக்கு நடுவில் வளர்ந்தால் அத்தகைய நற்பண்புகளும், குணங்களும் வளரிளம் பெண்ணிடம் அமைந்து விடுவதற்க்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.

3.6 காந்தியின் குரங்கு:

வளரிளம் பெண்ணே, இந்த கால கட்டத்தில் மன சஞ்சலத்திற்க்கு ஆளாகாதே ! மன குழப்பத்திற்க்கு ஆளாகாதே !

நல்லனவற்றைப் பார் ! 
நல்லனவற்றைப் கேள் !
நல்லனவற்றைப் பேசு !

காந்தியின் மூன்று குரங்கு சொல்லும் செய்தியை நம் வாழ்க்கையின் தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு வாழ முயற்சி செய்ய வேண்டிய பருவம் தான் 15.19 வயது வரையிலான வளரிளம் பருவம்.

3.7 நல்லதை தேடு:

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஆயிரம் மைல் தொலைக்கான பயணம், முதல் அடியில் தான் உள்ளது. அந்த முதல் அடியும் சரியான பாதையில், சரியான கோணத்தில் அமைய வேண்டும். இந்த கூற்று வளரிளம் பெண்கள் புரிந்து கொண்டு. வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒரு கூற்று. நீங்கள் பயணம் செய்ய வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. இலக்கை சரியாக நிர்ணயித்து, உங்கள் இலக்கு நோக்கிய பயணத்தில் தெளிவாக முன்னேறுங்கள்.

3.7.1 செய்தித்தாள்:

செய்தித்தாள்கள், வார மற்றும் மாதாந்தர பத்திரிக்கைகளில் நல்ல செய்திகளைத் தேர்ந்தெடுத்து படிப்பது, அறிவை வளர்க்கும் செயல், சிந்தனையை வளர்க்கும் செயல், இன்று நல்ல நூல்களைப் படிப்பவர்களே, நாளைய தலைவர்களாக உருவெடுக்கிறார்கள்.

3.7.2 வானொலி.....தொலைக்காட்சி

வானொலியில் நல்ல நிகிழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து கேட்பது மற்றும் தொலைக்காட்சியில் நல்லனவற்றை தேர்ந்தெடுத்து பார்ப்பது என்று தன்னை வள்ர்த்துக் கொள்ளும் வழியினை வளரிளம் பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.

3.8 நல்லதை படி

அதோடு மட்டுமின்றி செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சியைத் தாண்டி அறிவை விசாலமாக மாற்றி கொள்ள வளரிளம் பெண்களுக்கு உள்ள அருமையான வழி தான் புத்தகங்கள்.

புத்தகங்கள் என்றால், இந்த வளரிளம் வயதில் கதை புத்தகம் படிக்கத்தான் ஆவல் அதிகம் இருக்கும். அந்த மன சலனத்தை தாண்டி தன்னம்பிக்கை ஊட்டும், தன்னம்பிக்கை வளர்க்கும் மற்றும் காலத்தால் அழியாத கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை படிக்க வளரிளம் பெண்கள் முயல வேண்டும்.

நல்வழி காட்டும் புத்தகங்களை தேர்ந்தெடுத்துப் படிப்பது மற்றும் சாதனை படைத்த பல பெண்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வது ஆகியவை வாழ்வில் உயர வழிவகுத்துத் தரக் கூடிய கூடுதல் அம்சங்கள்.

3.9 நல்ல மார்க்கம்:

துர்குணங்களும், தீய பண்புகளுடனும் கூடிய பெற்றோர், நண்பர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களின் பாதிப்புகளுக்கு ஆளாகி எதிர்மறையான குணங்கள் மற்றும் பண்புகள் அடங்கிய தனி நபராக வளர்வதற்க்கு சாத்தியங்கள் ஏராளம்.

இருப்பினும் இத்தகைய தீய குணங்களை இனம் காணப்பட்டு, தேவையில்லை என ஏற்றுக் கொள்ளக் கூடிய மனம் இருந்தால் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வதற்க்கும், நல்ல குணங்களை அடைவதற்க்கும் மார்க்கமுண்டு.

3.10 வழிகாட்டுதல்களுடன் மனித மன வளர்ச்சி:

மனித மனமானது நேர்மறை எண்ணங்கள் மற்றும் சரியான வழிகாட்டுதல்களுடன் ஒரு குறிப்பிட்ட காலம், பின்னர் தொடர்ந்து தானாக தனது வழ்க்கைப் பாதையின் ஓடுகளத்தினை அமைத்துக் கொள்ளும். அக்களமானது அந்த நபரின் தேவைக்கேற்ப விருப்பத்திற்கேற்ப, இலக்குகளுக்கு ஏற்ப அமைக்கப் பெறுவதால் இந்த பருவத்திலேயே வளரிளம் பெண்ணின் எதிர்கால வெற்றி நிச்சயிக்கப்பட்டு விடும்.

3.11 ஜெயித்துக் காட்டலாம்:

இப்பருவத்தில் ஒழுங்காக பள்ளி செல்லுதல், விருப்பத்துடன் கல்வி கற்றல், பொறுப்புணர்ந்து படித்தல், அதில் சிறந்து விளங்கக்கூடிய உழைப்பு மற்றும் விடாமுயற்சி, அவை சம்மந்தமான விஷயங்களில் அதிக அக்கறை காட்டுதல், தன் மூலம் கிடைக்கக்கூடிய விளைவுகளினால் பெற்றோரை மகிழ்வித்தல், தன் சுத்தம் கடைபிடித்தல், உண்மை பேசுதல், பெற்றோருக்கு கீழ்படிதல், ஆசிரியர் - ஆசிரியர்களை மதித்தல், அவர்கண் சொல் கேளுதல் மற்றும் அவர்களின் வழிகாட்டுதல்களைப் புரிந்து கொண்டு பின்பற்றுதல் ஆகிய மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தினையும் மனதிற்குணவாக அளித்து வந்தால் வழக்கமான் இப்பருவத்தில் ஏற்படும் மன ரீதியான மாற்றங்களை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி வாழ்க்கையில் ஜெயிக்கலாம்.

3 .12 வளரிளம் பருவத்தின் இரு கண்கள்

ஒழுக்கம், தன்னை மதித்தல் ஆகிய இரு குணங்களும் நம் இரு கண்களை போல, எப்போதும் இப்பருவத்தில் பயன்படுத்த வேண்டிய கருவிகள் எனக் கூறலாம்.

காண்பானவற்றை எல்லாம் கண்டு - அது போல நாமும் என துடிக்கும் இப்பருவத்தின் அலைபாயும் மனத்தினை "குதிரையின் கடிவாளம்" போல தேவைக்கேற்ப செயல்படச் செய்ய வேண்டும்.

எது சரி, எது தவறு, நமக்குத் தேவையா? இல்லையா, நமக்குப் பொருந்துமா? இல்லையா என நம்மையே வரையறுத்துக் கொண்டு சிந்தித்து செயல்பட வேண்டிய பருவம்தான் வளரிளம் பருவம்.

3 .13 வாழ்க்கை வெற்றி... தோல்வி

ஒழுக்கத்தை கடைபிடித்தால் முன்னேற்றம், மகிழ்ச்சி, வெற்றி உண்டாகும். அதே நேரத்தில் ஒழுக்கமின்மையால் அவமானம், வருத்தம், தோல்வி நேரிடும். பெண்ணே... உன் வாழ்க்கை உன் கையில்.

3 .14 ஒழுக்கம்

ஒழக்கம் என்பதனை ஒரு வெள்ளைத் தாளுடன் ஒப்பிடலாம். மாசு மருவற்று தூய்மையான இருப்பதனால் அதை "கறை" படாமல் பாதுகாப்பாக வைத்திருக்கத் தோன்றும். பொக்கிஷமாக வைத்திருக்கத் தோன்றும். எப்பொழுதும் மதிப்பு வாய்ந்ததாகும்.
இப்படித்தான் நாமும் இருக்க வேண்டும். வெள்ளைத்தாளில் ஒரு சிறு கரும்புள்ளி பட்டாலும் அது மாசுபடுத்தப்பட்டதாகும்.

3 .15 ஒழுக்க அம்சங்கள்

பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல் கேளுதல், படிப்பில் ஆர்வம், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகுதல், அவர்களுடன் நல்ல விஷயங்கள் குறித்து உரையாடுதல், அவர்களிடையே காணப்படும் நல்ல குணங்களையும் பழக்க வழக்களையும் கற்றுக் கொள்ளுதல் ஆகியவை ஒழுக்கதித்ற்கான அம்சங்கள்.

3 .16 ஒழுக்கமின்மையின் அம்சங்கள்

பெற்றோர் சொல் கேளாமை, படிப்பில் ஆர்வமின்மை, பொய் பேசுதல், தீய நண்பர்கள், ஆத்திரப்படுதல், பொறாமை, மூர்க்க குணம், கிழ்படியாமை, தூய்மையின்மை போன்றவை ஒழுக்கமின்மைக்கான சில அம்சங்கள்.

3 .17 நிதானமும்... விடாமுயற்சியும்...

ஒழுக்கம், சுய மதிப்பு (தன்னை மதித்தல்) போலவே நிதானமும், விடா முயற்சியும், வாழ்க்கையில் முன்னேற உதவக்கூடிய இரு கருவிகள்.
இந்த வளரிளம் பருவத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய கடமைகள், பொறுப்புகள், அவைமீது ஆற்ற வேண்டிய செயல்கள் செயல்கள் மற்றும் அதற்குண்டான செயல் திட்டங்களை வடிவமைக்க நிதானம் தேவை.

நிதான குணத்தினை வளர்த்துக் கொண்டால், நம்முடன் காணப்படும் விஷங்களை ஆராய்ந்தறிந்து, சரியானதைத்
தேர்ந்தெடுத்து அதைப் பின்பற்ற இப்பருவத்தினர் மனதளவிலான மாற்றங்களை நல்ல முறையில் கையாண்டு எளிதாக வென்று விடலாம்.

3 .18 கண்டதே காட்சி... கொண்டதே கோலம்.

இதற்கு எதிர்மாறாக "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என விளைவுகளின் ஆழம் அறியாது கால் வைத்தால், சரிசெய்து கொள்ள முடியாத துன்ப வலையில் வீழ்ந்து அடிபட்டு, வாழ்க்கையின் தோல்வியினை சுமந்தவாறே காலம் முழுவதும் வாழ நேரிடம். தெரிந்தெடுக்கப்பட வேண்டிய வைப்பு, உங்களிடம் தரப்பட்டுள்ளது! அதனை நீங்களே முடிவு செய்யுங்கள் ! முன்னேறுவதற்கான பாதையினைத் தேர்ந்தெடுக்க உங்கள் மனம் விரும்புகிறது அல்லவா,

வளரிளம் பெண்கள் ஒவ்வொருவரும் வளர்ந்துக் கொள்ள வேண்டிய நற்குணங்கள் மற்றும் பண்புகள்.
பெற்றோர் சொல் கேட்டல்.
பெரியவர்களை மதித்தல்
படிப்பில் கவனம்
ஆர்வம்
மதிப்பு
உண்மை
மதிப்பு
இலக்கு நிர்ணயித்தல்
உழைப்பு
விடா முயற்சி
நல்ல எண்ணங்கள்.

No comments:

Post a Comment