Tuesday, December 16, 2014

வெற்றியே வா... வா...

வெற்றியே வா... வா...
|
5.1 வெற்றிக்கு மூலக்கூறு:

இன்றைய வேகமாக மாறிவரும் சமுதாய அமைப்பில் குறிப்பாக 21ஆம் நூற்றாண்டில் தொழில் வெற்றி அடைய தேவையான குணாதிசயங்கள் என்ன?

தொழில் வெற்றிக்கு தேவையான குணாதிசயங்கள், இரண்டே இரண்டு குணம்தான்.

1. மாறுபட்ட எண்ணம் (Creativity)
ரிஸ்க் எடுக்கும் தைரியமான வாழ்க்கை
(Risk Taking Capability)
ஆனால், நம் பள்ளி மற்றும் கல்லூரி கல்வி நிறுவனங்கள் போதிப்பது எதை?
1 . ஒத்த எண்ணம் (Standardization)
2. ரிஸ்க் எடுக்காத வாழ்க்கை (Risk Avertion)

5.2 ஒத்த எண்ணம்

ஒத்த எண்ணம் என்றால் என்ன?
ஊரோடு ஒத்து வாழ்!,
தனி மரம் தோப்பாகாது!
அளவோடு செல்வம் பெற்று வளமோடு வாழ்
என்று திரும்ப திரும்ப பள்ளி, மற்றும் கல்லூரிகளில், குடும்ப அமைப்பில் பலர் சொன்ன வார்த்தைகள் நமது அடிமனதில் பசு மரத்து ஆணியாக நம்மில் பலரிடம் வேரூன்றி விட்டது. விளைவு, மற்றொருவர் செய்வதையே நாமும் பின்பற்றி, மிகமிக சாதாரண வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருகின்றோம்.

5 .3 மாறுபட்ட எண்ணம்

ஆனால் வாழ்வில் வெற்றி பெற துடிக்கும் ஒருவருக்கு முதலில் தேவை மாறுபட்ட கிழ்கண்ட எண்ணங்கள்,
ஊரோடு வெட்டி வாழ்!
தனிமரம் தோப்பாகும்!
அளவில்லாமல் செல்வம் பெற்று வளமோடும், நலமோடும் வாழ்!!!
போதும் என்ற மனமே, புண் செய்யும் மருந்து இருப்பது போதாது என்ற மனமே, பொன் செய்யும் மருந்து, பெருக கட்டி பெருக வாழ் என்ற மாறுபட்ட, முற்போக்கான சிந்தனை மற்றும் மாறுபட்ட எண்ணங்கள்.

இத்தகைய முற்போக்கான சிந்தனை எண்ணங்களை இங்கிலாந்து, மற்றும் அமெரிக்க இளைஞர்களுக்கு சென்ற நுற்றாண்டில் விதைத்ததன் பலனை அந்த நாடுகள் இன்று வளர்ந்த நாடாக உலக அளவில் தொழில் மற்றும் செல்வசெழிப்பில் வளர்ச்சி அடைந்து அறுவடை செய்கின்றன. ஆகையால், வலிமையான பாரத்திற்கு தேவை மாறுபட்ட எண்ணம் கொண்ட இளைஞர்கள்.

5.4 ரிஸ்க் எடுக்காத வாழ்க்கை

ரிஸ்க் எடுக்காத வாழ்க்கை என்பது ஒரு நிறுவனத்தில் இணைந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உழைப்பது. அந்த நேரத்தில் தான் சார்ந்து உள்ள வேலை செய்யும் நிறுவனத்தைப் பற்றிய சிந்தனை, அந்த நிறுவனம் சார்ந்த பிரச்சனை, அதற்கு விடை என்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருத்தல், மற்ற நேரத்தில் சம்பாதித்த பணத்தை கொண்டு, பொழுது போக்குக்கு செலவு செய்யும் எண்ணம் கொண்டவர். 

5.5 வெற்றி நேரம்

வெற்றி என்பது ஒரு தனிமனிதன், குறிப்பாக வேலை செய்பவர் எப்படி காலை 9 மணி முதல் 5 மணி வரை செலவு செய்கிறார். என்பதில் இல்லை. மாறாக எப்படி மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை தனது நேரத்தை ஆக்க வழியிலே செலவழிக்கிறார் என்பதை பொறுத்தே உள்ளது.

5 .6 சாதனையாளர்

இந்த உலகில், வாழ்ந்தவர் கோடி, வீழ்ந்தவர் கோடி, அவர்களில் காலத்தால் அழியாமல், மக்கள் மனதில் பதிந்தவர் யார்?
சமுதாய நன்மைக்காக, தன்னுடைய ஒவ்வொரு சிந்தனை மற்றும் செயல்களையும் ஆக்க வழியில் அமைத்துக் கொண்டு, தொலை நோக்குப் பார்வையோடு, எதிர்கொண்ட சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர்கள். இவர்களை சாதனையாளர்கள் என்று வரலாறு சொல்கிறது.

பிரமாண்டமாக சிந்தியுங்கள், வித்தியாசமாக சிந்தியுங்கள், வேகமாக சிந்தியுங்கள், மற்றவர்கள் சிந்திக்கத்துவங்கும் முன் சிந்தியுங்கள், மகத்தான நிலையை அடைந்தே தீருவேன் என்ற குறிக்கோளுடன் சிந்தியுங்கள், சிந்தனை உறுதியை செயலிலும் இணைந்துவிடுங்கள் வெற்றி உங்களுக்கே.
-திருபாய் அம்பானி

5 .7 இயற்கையோடு இணைந்த வாழ்க்கை

சுற்றிலும் பச்சை வயல்வெளி, அருகில் ஓங்கிநிற்கும் மாலை என்று அழகாக இருக்கிறது பூங்கொடியின் வீடு. 'இயற்கையோடு வாழற சுகம் கோடி ரூபா கொடுத்தாலும் வேற எதுலயும் கிடைக்காது' என்று மகிழும் பூங்கொடி, ஈரோடு மாவட்டம் தளவமலை கிராமத்தை சேர்ந்தவர்.

5 .8 சரியான வியாபார தேர்வு

வீட்டிலேயே மண்புழு உற்பத்தி, இயற்கை உர தயாரிப்பு தொழில் செய்கிறார். இவரைத் தெரியாத இயற்கை விவசாயி கிடையாது என்று சொல்லுமளவு ஏரியாவில் பிரபலம்.

5 .9 வியாபார முதலீடு

இருபதாயிரம் முதலீட்டில் ' மனோன்மணி மண்புழு பண்ணை' தொடங்கியவர் கடனடைத்து, நிலம் வாங்கி அமோக லாபம் பார்த்திருக்கிறார். இரண்டு ஆண்டு அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்ளும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. பூங்கொடி பயோடேட்டா இதோ,

5 .10 பூங்கொடி-பிறப்பு, படிப்பு, வேலை,

சொந்த ஊர் சேலம் பூலாம்பட்டி, அப்பா குமாரசாமி, அம்மா முத்தாயம்மா, நான், தம்பினு குடும்பம், விவசாயம் குலத்தொழில் , ஆனா படிப்பும் விடுதி வாழ்க்கையும் நிலத்துல கால் வைக்க விடல, ஈரோடு கல்லூரியில பி.ஸ்.சி கெமிஸ்ட்ரி முடிச்சுட்டு மெட்ரிகுலேஷன் பள்ளியில் டீச்சரா சேர்ந்தப்போ அப்பா அம்மாவுக்கு பெருமை. எனக்கும் சந்தொஷம்.

5 .11 பூங்கொடிக்கு திருமணம்

தளவமலை செல்வம், பெண் கேட்டு வந்தார். பிடிச்சுருந்தது . கல்யாணம் முடிஞ்சுது. பூமி, பயிர், மழை மாடு என்று நெருக்கமா விவசாயம் அறிமுகமானது புகுந்த வீட்டுலதான். கல்யாணமான புதுசுல டீச்சர் வேலைய தொடரணும்னு விரும்புனேன். அப்போ அவர் பஞ்சாயத்து யூனியன்ல ஜூனியர் அசிஸ்டன்ட் வேலைய ராஜினாமா செஞ்சுட்டு நுண்ணுயிர் கலவைகள் தொழிற்சாலை தொடங்கினார் . வெளி வேலைக்கு போனா மாசம் ரூபாய் 2000 தான் கிடைக்கும், தொழிற்சாலையை ரெண்டு பேருமா பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சோம். பிரகிருதி, முகிழ்னு ரெண்டு குழந்தைகள் அதுங்கள் கவனிச்சுக்கவே நேரம் இருந்துச்சு.

5 .12 தனிமனித மாற்றம்

அவர் நஞ்சில்லா உணவு உற்பத்த்யாளர் சங்க உறப்பினர். இயற்கை உரங்கள், விவசாயம் பத்தி தேடி தேடி படிச்ச விஷயங்கள் பகிர்ந்துக்குவார். இயற்கைய அழிக்காத விவசாயத்த பெண்களால்தான் செய்யமுடியும்னு சொல்வார். வயல்ல கயித்து கட்டில் போட்டு நேரம் போறது தெரியாம அதைப் பத்தி பேசிட்டு இருப்போம்.

5 .13 இயற்கை விஞ்ஞானியின் சிந்தனை விதை
பசுமை புரசிங்க்ற பேர்ல மண்ணோட வளங்களை அழிச்சு இயற்கைக்கும் மண்ணுக்கும் துரோகம் செய்றோம்னு இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் சொன்னது மனசுல பதிஞ்சுடுச்சு.

5 .14 தொழிற்சாலையில் இருந்து விவசாயம்
நாங்களே இயற்கை விவசாயம் செய்ய முடிவு பண்ணினோம். தொழிற்சாலையை மூடிட்டு, ஒன்னேகால் ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தோம். அப்பதான் முதல்முதலா விவசாயத்துக்க்குள்ள் வந்தேன்.

5 .15 மகசூலுக்கு மண்புழு உரம்

மண்புழு உரம், மாட்டோட அஞ்சு பொருள்கள் வச்சு பண்ற பஞ்ச கவ்யம், எருக்கன், ஊமத்தை , சோற்றுகற்றாழை, வேப்பங் கொட்டை வச்சு தயாரிக்கிற மூலிகைச்சாருனு இயற்கை உரங்களையும் பூச்சி விரட்டிகளையும் பயன்படுத்துனோம். நம்ப மாட்டீங்க, 34 மூட்டை மகசூல். ஒரு மூட்டை 65 கிலோ நெல்லு. செலவு செஞ்ச ஏழாயிரம் போக பத்தாயிரம் லாபம்.

லாபகரமாக விவசாயம் செஞ்சப்பவும் கணவர் வீட்டு பெரியவங்களுக்கு அதுல உடன்பாடு இல்ல. பூட்சிகொல்லி, ரசாயன உரம் போடாம விவசாயமாவது, விளைச்சலாவதுங்கற எண்ணம். பழகினவங்கலள மாத்துறது சிரமம். தேவையில்லாத மனஸ்தாபந்தான் மிச்சம்.

5.16 மண்புழு பண்ணை உருவானது......

தொழில் தொடங்க ஆர்வமாக இருந்த எங்ககிட்ட நிலமில்ல. குத்தகை நிலத்துல ரொம்ப நாளைக்கு விவசாயம் பார்க்க முடியல. தொழிற்சாலைய மூடிட்டதால, செலவுக்கே கஷ்டமாச்சு. படிப்பு, குடும்ப செலவுகளை சமாளிக்க நகைகளை அடமானம்வச்சோம். ஏதவது தொழில் ஆரம்ச்சாக வேண்டிய கட்டாயம்.

எது செய்றதுனாலும் முதல் போட்டகனுமே. யோசிச்சோம், வழி தெரியுல. ரெண்டு வருஷம் முன்னாடி, திருச்சியில் இயற்ககை தொடர்பான ஒரு கூட்டம் நடந்தது. அங்கே மண் புழு உரத்தில் நிறைய வருமானம் வரும், மார்க்கெட்ல வரவேற்பு இருக்குன்னு சொன்னாங்க. நாம ஏன் பண்ணக்கூடாதுனு யோசிச்சேன். அவருக்கும் சம்மதம். ஆனா முழுக்க நாந்தான் பார்த்துக்கணும்னு சொல்லிட்டார்.

5.17 தொழில் முதல் அடி....

தெரிஞ்ச நண்பர் பண்ணைல ஐயாயிரம் மண்புழு வாங்கினேன். காசு இப்ப தரமுடியாது; தொழில்ல நின்னதும் செட்டில் பண்றேன்னு சொன்னேன். சம்மாதிச்சார்.

5.18 பேங்ல லோன்:

மண்புழு வளர்ககறதுக்கு, தொட்டி கட்டணும், செட் போடணும். பணம் வேணும்ல. கனரா பேங்ல லோன் கேட்டேன். ஜாமின் இல்லாம் தரமுடியாதுனாங்க. தொழில் செய்றோம்னு ஆர்வமா வர்றவங்களுக்கு, கடன் குடுங்கனு சண்டை போட்டு, கிடைச்ச இருபதாயிரத்த வச்சு தொட்டி, செட் போட்டு வேலையை ஆரம்பிச்சேன்.

5.19 மண்புழு - உழவர்களின் நண்பன்:

இயற்கை விவசாயத்தோட ஜீவநாடி மண்புழு தான். மண்புழு உழவர்களின் நண்பன்னு படிச்சிருக்கோம். களைகள் குப்பைகளைத்த்ங்கிற மண்புழுவோட கழிவுல நுண்ணுயிரிகள் நிறைய இருக்கு. காத்துலயும், மண்ணுல்யும் இருக்கிற சத்துகளை பயிருக்கு எடுத்து தருவது நண்ணுயிரிகளோட வேலை. பயிர் செலிப்பாவள்ர்றதுக்கு மட்டுமில்லாம், சுவைக்கும் கெடாத்தன்மைக்கும் ம்ண்ப்ழு உரம் காரணமாக இருக்கும். மண்புழு உரம் போட்டு வள்ர்ந்த தக்களியை 13 நாள் வெளியில வச்சிருந்தோம். ஃபிரஷ்ஷா இருந்தது. 

நிலத்தை துளைச்சு மண்புழு போற இடைவெளி வழியா மழைத்தண்ணி நேரடியா நிலத்துல இறங்கும். அதனால நிலத்தடி நீரும் அதிகரிக்கும். இப்படி விவசாயத்துல மண்புழுவோட பங்கு அதிகம். மண்புழு வளர்ந்து அதோட கழிவ உரமா போட்டு இயற்கை விவசாயம் செஞ்சவங்க நல்ல நிலைமைல இருக்காங்க.

5.20 மண்புழு உரம் தயாரிப்பது எப்படி?.

இதுக்கு மூணடி நீளம், மூணடி அகலம், ரெண்டரை அடி ஆழத்துல ஒரு தொட்டி கட்டணும். அதுல மக்கும் தன்மையுள்ள குப்பைகள், இலை, தழை போட்டு நிரப்புங்க. சாணத்தை தண்ணியில் கலந்து தெளிக்கணும். சாணத்துல இருக்க நுண்ணுயிரிகள் குப்பைய வெளியேத்தும். அதுதான் உரம்.

5 .21 மண்புழு உரம் - வியாபார கணக்கு

முதல் வருஷத்துல எட்டு தடவ உரம் எடுக்கலாம். ரெண்டாம் வருஷத்துல இருந்து மாசத்துக்கு ஒரு தடவ உரம் எடுக்கலாம். ஒவ்வொரு முறையும் 350 கிலோ கிடைக்கும். இன்னைக்கு கணக்குப்படி ஒரு டன் மண்புழு உரம் பத்தாயிரம் ரூபாய். ஒரு தொட்டி இருந்தா ஒரு ஏக்கர் நிலத்துல விவசாயம் பண்றதுக்கு காலத்துக்கும் ரசாயன உரம் வாங்க வேண்டாம். எவ்ளோ லாபம்னு பாருங்க.

5 .22 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

தொட்டி கட்ட முடியாதவங்களுக்காக நானே புதுசா ஒரு முறைய கண்டுபிடிச்சேன். திறந்த வெளியில மூணுக்கு மூணு அளவுல குப்பைகள் நிரப்பி, சாணமிட்டு மண்புழு வளர்க்கலாம். வெயில் படாம பாத்துக்கணும். இது ரொம்ப சுலபம். மண்புழு உரத்துல அதுக்கு உணவா நாம கொடுக்கறதை விட 6 மடங்கு நைட்ரஜன்., 9 மடங்கு பாஸ்பரஸ், 11 மடங்கு பொட்டாஸியம் இருக்கு,

5 .23 மார்க்கெட்

குன்னூர் கொடைக்கானல் மாதிரியான மலைப்பிரதேசங்களுக்கு நுண்ணுயிரி உரங்களை கலந்து விற்பனை செய்றேன். தேயிலை, காபி எஸ்டேட்டுகளுக்கு அனுப்புறேன்.

உரம் தவிர, மன்புழுவுக்கும் நல்ல வரவேற்பு இருக்கு. மீன் இறால் பண்ணைகளுக்கும் விக்கலாம்.மண்புழுவுல சுமார் 3000 வகை இருக்கு. விளைநிலத்துல விடுறதுக்கு, உரம் எடுக்குறதுக்கு தனிதனி வகை இருக்கு. ஐரோப்பிய, ஆப்ரிக்க வகை மண்புழு பண்ணைக் கழுவுகளை சீக்கிரமா எருவாக்கும். நிலத்தில்விட உள்ளூர் ரகம் போதும் மண்புழுக்களை நிலத்தில் விட்டால் ஒரு வருஷத்துல மண் உயிர்ப்படையும். அப்படி நடந்தா மண்ணுல தானாவே நட்டுப்புழுக்கள் வந்துடும். தீனி போட்ட பெருக ஆரமிச்சுடும். 45 நாளைக்கு ஒரு தடவ இனபெருக்கம் செய்யும். ஒரு முட்டையில ஆறேழு புழுக்கள் வரும்ங்கறதால, மண் புழுக்கள் ஒரு தடவ வாங்கினா போதும்.

5 .24 20,000 ரூபாய்... இரண்டு வருடத்தில்

நான் அப்படித்தான், ஆரம்பத்துல போட்ட பணத்துக்கு மேல அஞ்சு பைசா செலவில்லை. ஆனா ரெண்டு வருஷத்துல 20 லட்சம்கிட்ட சம்பாதிச்சுட்டேன். விவசாயிகள் தவிர வனத்துறை அதிகாரிகள், மற்ற பண்ணைகள்ல இருந்து வந்து வாங்கிட்டு போறாங்க. பீஸ் ரேட்விற்பனைதான்.

ஒரு மண்புழு ஒரு ரூபா, போன மாசம் மட்டும் 18 லட்சம் மண்புழுக்களுக்கு ஆர்டர் கிடைச்சது. என்கிட்ட அவ்வளவு இல்லாததுனால வெளியில வாங்கி கொடுத்தேன். நல்ல டிமான்ட் இருக்கறதால தொழிலை விரிவுபடுத்திற திட்டம் இருக்கு. லட்சக்கணக்குல வேணும்னாலும் கஸ்டமர் கண் முன்னாடி ஒவ்வொரு புழுவா எண்ணி எடுத்து வைக்கிறோம். இல்லன்னா பிரச்சனையாயிடும்.

தமிழ்நாட்டில் பல ஊர்களிலுருந்து பூங்கொடியே தேடி வந்து வாங்கிட்டு போறாங்கனா அதுக்கு ஒரே காரணம், நம்மாழ்வார் ஐயா தான். அவர் நடத்துற கூட்டங்கள்ல பண்ணை பற்றி பேசவும் விவசாய பத்திரிகைகள்ல போட்டி எடுத்தாங்க. அதுதான் விவசாயிகள் மத்தியிலே என்னை பிரபலமக்குச்சு.

5 .25 தொழில் விரிவாக்கம்

மண்புழு தவிர, மூலிகைச்சாரு, பூச்சி விரட்டி, பயிரோட வளர்ச்சிக்கு உதவுற பஞ்சகவ்யம் எல்லாத்தையும் தயார் பண்றேன். விவசாயிகள், இயற்கை விவசாய விஞ்ஞானிகள் தவிர புத்தங்கள்னு தேடி கத்துக்கிட்டேன்.

5 .26 மண்ணுதான் பொன்னு

ஒவ்வொரு தடவையும் மண்புழு உரம் வாங்க விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது. அதனால அவங்களே மண்புழு வளர்க்கவும், உரம் தயாரிக்கவும் தெரிஞ்சுக்கணும். இயற்கை விவசாயம், நோய் தடுப்பு முறைகள் பற்றி மாசத்துக்கு ஒரு தடவ 30 பேருக்கு பயிற்சி நடத்துறேன். இதுவரைக்கும் 300 பேர் பயனடைஞ்சுருகாங்க . பண்ணை வச்சதுக்கப்புறம் எல்லா கடனையும் அடைச்சுடேன். அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன். அங்கயே வீடும்கட்டறதா இருக்கோம். இந்த தொழிலை தொடங்குறப்போ எனக்கே தெரியாது, இவ்ளோ கொட்டிக் கொடுக்கும்னு.

5 .27 மெசேஜ் சொல்லுங்க...

நோய்கள் பெருகிடுச்சு. சாப்பிடுறதும் சுவாசிக்கறதும் விஷாமயிடுச்சு. நமக்கென்ன போச்சுன்னு எல்லாரும் இருந்துட்டா எப்படி? என்னை மாதிரி விவசாயக் குடும்பத்துல பிறந்தவங்களாவது அக்கறைப்படனும்ல? விவசாயக் குடும்ப பெண்கள் மட்டுமில்ல, வீட்டுல இடமிருக்கிற எந்த பொண்ணும் மண்புழு பண்ணைய வெற்றிகரமா நடத்தலாம். இயற்கையை நம்புன, அதை சரியா பராமரிக்கிற யாரும் கைவிடப்படார், இதுதான் என் வாழ்க்கை அனுபவமும், தொழில் ரகசியமும்.

No comments:

Post a Comment