நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
1. அழுத்திவிடப்பட்ட சுருள் கம்பியில் ஏற்படும் மாற்றம் - கால ஒழுங்கற்ற மாற்றம்
2. உண்வு கெட்டுப்போதல் என்பது - விரும்பத்தகாத மாற்றம்.
3. சலவை சோடா நீரில் கரைவது - விரும்பத்தகாத மாற்றம்
4. இரவுபகல் தோன்றுதல் - கால ஒழுங்கற்ற மாற்றம்
5. சில மணிநேரம், நாள்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் என நீண்ட நேரம் நிகவும் மாற்றமே - மெதுவான மாற்றம்.
6. வெப்பம் உமிழ் மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டு - குளூக்கோஸ், அமோனியம் குளோரைடு நீரில் கரைதல்
7. முறையான கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் மாற்றம் - கால ஒழுங்கு முறை மாற்றம்
8. குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறாத மாற்றம் - கால ஒழுங்கற்ற மாற்றம்
9. சில மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் உமிழப்படும் மாற்றம் - வெப்பம் உமிழ் மாற்றங்கள்
10. சில மாற்றங்கள் நிகழும் போது வெப்பம் உறிஞ்சப்படுவது - வெப்பம் கொள் மாற்றங்கள்
11. ஊகித்து அறிய இயலாதது - நிலநடுக்கம். இவை கால ஒழுங்கற்ற மாற்றங்கள்.
12. ஊகித்து அறிய இயலக் கூடியது - பருவ நிலை. இவை கால ஒழுங்கு மாற்றங்கள்.
13. நல்ல பயன்களைத் தராத மாற்றங்கள் - விரும்பத்தகாத மாற்றங்கள்
14. நல்ல பயன்களைத் தரும் மாற்றங்கள் - விரும்பத்தக்க மாற்றங்கள்
15. அமாவாசைக்கும் பெளர்ணமிக்கும் இடைப்பட்ட நாள்கள் -15
16. ஒவ்வொரு மாதமும் அமாவாசையும், பெளர்ணமியும் இதே கால இடைவெளியில் நி்கழ்கிறதா? - ஆம்
17. மீளா மாற்றங்கள் - சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப இயலாது.
18. மீள் மாற்றங்கள் - சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பும்.
19. நிலக்கரி - சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட மரங்கள் பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலக்கரியாக மாறுகிறது.
20. விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி - கல்பனா சாவ்லா.
21. கல்பனா சாவ்லா அமெரிக்காவின் கொலம்பியா விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற ஆண்டு - 1997
22. மீள் மாற்றம் - பனிக்கட்டி உருகுதல், நீர் ஆவியாதல்.
23. மீளா மாற்றம் - பால் தயிராகுதல், விறகு எரிதல், மாவு இட்லியாதல், முடி நரைத்தல்.
24. வெல்க்ரோ(Velcro) கண்டுபிட்த்தவர் - ஜார்ஜ் மெஸ்ட்ரல் 1948 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
25. வெல்க்ரோ - பைகள், காலணிகள், உடைகள் எனப் பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
26. காற்றை தூய்மைப் படுத்துவது - மரங்கள்.
27. நமது வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல், நாற்காலி போன்ற பெரும்பாலான பொருள்கள் செய்ய தேவைப்படுவது - மரக்கட்டைகள்.
28. இரயில் படுக்கைகள், படகுகள் செய்யப் பயன்படும் மரம் - பைன் மரம்.
29. மாட்டு வண்டியின் பாகங்கள் செய்யப் பயன்படும் மரம் - கருவேல மரம்
30. தைலம், காகிதம் செய்யப் பயன்படும் மரம் - யூகலிப்டஸ்
31. தீப்பெட்டி, தீக்குச்சி, சிறுபொம்மைகள், பஞ்சு மெத்தைகள், தலையணை செய்யப் பயன்படும் மரம் - இலவம் மரம்.
32. விளையாட்டுச் சாமான்கள் ,கிரிக்கெட் மட்டைகள் செய்யப் பயன்படும் மரம் - வில்லோ
33. டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள் செய்யப் பயன்படும் மரம் - மல்பரி.
34. விவசாயம் என்பது - ஓர் அறிவியலாகும்.
35. ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களுக்கு விடைக்காண மேற்கொள்ளும் அனைத்து வகைச் செயல்பாடுகளும் - அறிவியல் ஆகும்.
36. பூமி, விண்வெளி, அதில் உள்ள கோள்கள், விண்மீன்கள், அவற்றின் இயக்கம், வெளிச்சம், ஓசை என விரிவடையும் அறிவியல் - இயற்பியல்.
37. விலங்குகளைப் பற்றி படிப்பது - விலங்கியல்.
38. நாம் பயன்படுத்தும் பொருள்கள் உலோகமா? அலோகமா? அதன் தன்மை? சுவை? அமிலமா? காரமா?, நெடிகள் என்ன? என்று ஆராய்வது - வேதியியல்
39. உயிருள்ளவைப் பற்றி அதாவது செடி, கொடி, மரம், வீட்டு விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் போன்றவற்றைப் பற்றி படிப்பது - உயிரியல்.
40. செடி கொடிகள், மரங்கள் பற்றி படிப்பது - தாவரவியல்.
41. ஆடைகள், பயன்படுத்தும் கயிறு, சாக்குப் பைகள் போன்றவற்றை வழங்குவது - தாவரங்கள்.
42. நாம் உடுத்தும் ஆடைகள் யார் தந்த பரிசு - பருத்தி
43. மெத்தை, தலையணை, பாய், விரிப்புகள் போன்றவற்றை உருவாக்க பயன்படும் தாவரம் - நார்த்தாவரங்கள்.
44. உணவு தொடர்பான தொழில்கள் அனைத்தும் எதை நம்பி உள்ளன - தாவரம்
45. மருத்துவ குணம் நிறைந்த தாவரங்களை - மூலிகைகள் என்கிறோம்.
46. கிருமி நாசினி், உடல் அழகுக்காக பயன்படும் மூலிகை - மஞ்சள்.
47. பசியைத் தூண்டுவதற்கும், செரிமாமின்மையை மீக்குவதற்கும் பயன்படும் மூலிகை - பிரண்டை.
48. தொண்டைக் கரகரப்பை நீக்க பயன்படும் மூலிகை - மிளகு.
49. செரிமானக் கோளாறுகளை நீக்கும் மூலிகை - இஞ்சி.
50. வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கும் மூலிகை - வசம்பு
51. சளி, காய்ச்சல், கோழை போன்றவற்றை நீக்கும் மூலிகை - துளசி.
52. கிருமி் நாசினி, உடலுக்கு குளிர்ச்சியையும், வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை - வேம்பு.
53. மார்புச்சளி, கோழை, சளித்தொல்லைகளை நீக்கி உடலுக்கு பலன் தரும் மூலிகை - தூதுவளை.
54. மஞ்சள் காமாலை நீக்கும் மூலிகை - கீழாநெல்லி.
55. வியர்வை பெருக்கும், கோழையை அகற்றும், காய்ச்சலை நீக்கும் மூலிகை - ஓமவல்லி.
56. வாய்ப் புண்ணை நீக்கவும், உடம்பிற்கு குளிர்ச்சியையும் தரும் மூலிகை - நெல்லிக்காய்.
57. இரத்தம் தூய்மையடைய நாம் உண்ண வேண்டிய காய் - நெல்லி
58. குளியல் சோப்பு, மூகப் பவுடர், பூச்சு, வாசனைத் திரவியம் போன்ற அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது - மலர்கள்.
59. எந்தத் தாவரத்தின் விதைப் பகுதி உணவாகப் பயன்படுவது - துவரை.
60. ஒரு தர்ப்பூசணிப் பழத்திலிருந்து எத்தனை தர்ப்பூசணிகச் செடிகளை உற்பத்தி செய்து, 180 டன் எடையுள்ள தர்ப்பூசணிகளைப் பெறலாம் - 6,00,000
61. தீப்பற்றாத ரெட்வுட் மரம் - செம்மரம்.
62. மிகப் பெரிய பூப்பூக்கும் தாவரம் - ராஃப்லேசியா. இவை ஒரு மீட்டர் விட்டம் கொண்டது.
63. ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள போபாப் என்னும் மரங்களின் தண்டுப்பகுதி மிகவும் அகலமானவை.
64. ஜிம்பாப்வே நாட்டில் பேருந்து நிறுத்தமாக எந்த மரத்தின் தண்டுப் பகுதிகள் அமைந்துள்ளன - போபாப்.
65. பழம் வகை மரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தரும் மரம் - ஆரஞ்சு மரம் (400 ஆண்டுகள்)
66. வெற்றிலைக்கு புகழ் பெயர் ஊர் - கும்பகோணம்.
67. மதுரைக்கு புகழ் பெற்ற மலர் - மல்லிகை
68. தஞ்சைக்கு அதிகம் விளையும் பயிர் - நெல்
69. இந்தியாவின் நறுமணப் பொருள்களின் தோட்டம் என்று அழைக்கப்படுவது - கேரளா.
70. தாவரத்தண்டின் கருநிறமான மையப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - வன்கட்டை
71. தாவரத்தண்டின் மென்மையான வெளிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - மென்கட்டை
72. மென்கட்டை தாவரத்தின் நீரினைக் கடத்த உதவுகிறது.
73. தாவரங்களுக்கு வலிமையையும், கடினத்தன்மையையும் உறுதியையும் அளிப்பது - வன்கட்டை
74. மென்கட்டையை விட அதிக உறுதியானது - வன்கட்டை
75. வன்கட்டையை எவையெல்லாம் சிதைப்பதில்லை - பூஞ்சைகள், கரையான்கள், துளையிடும் பூச்சிகள்.
76. வன்கட்டையில் காணப்படுவது - பிசின், அரக்கு, ரெஸின் மற்றும் எண்ணெய்
77. வன்கட்டை - கடினத் தன்மையும், பூஞ்சைகளை எதிர்க்கும் தன்மையும் கொண்டது.
78. அதிக மெருகேறும் தன்மையும், கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுவது - வன்கட்டை.
79. நார் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட மெல்லிய உறுதியான இழையாகும்.
80. மேற்புற நார்களுக்கு எடுத்துக்காட்டு - பருத்தி, தேங்காய் இலவம் பஞ்சு (விதையின் மேற்புறத்தில் இருந்து பெறப்படுகிறது)
81. இலைகளில் இருந்து பெறப்படும் நார்கள் - இலை நார்கள் (அன்னாச்சி, கற்றாழை)
82. தாவரத்தின் தண்டுப் பகுதியிலிருந்து பெறப்படும் நார்கள் - தண்டு நார்கள் ( சணல்)
83. நாருக்காக மட்டுமின்றி வேறு சில பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படும் தாவரம் - ஹெம்ப் என்ற சணல் தாவரம்.
84. ஹெம்ப் என்ற சணல் தாவரத்தில் 85 சதவிகிதம் செல்லுலோஸ் உள்ளதால் உயிரி பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
85. மண்ணில் மக்கும் தன்மையுடையது - உயிரி பிளாஸ்டிக்.
86. இஞ்சி, மஞ்சள் போன்ற தாவரங்கள் தண்டுப் பகுதி தரைக்குக் கீழ் உள்ளவை. இவையே உணவைச் சேமிக்கும் வேலையைச் செய்கிறது.
87. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 50,000 முதல் 75,000 டன் மாம்பழக்கூழ் (Mango pulp) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment