Wednesday, December 10, 2014

தினம் ஒரு சிந்தனை

தினம் ஒரு சிந்தனை 

தன்னம்பிக்கை !!!

எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. 

வெற்றி, மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறது. 

கடின முயற்சி ஒன்றே நாம் அந்த உயரத்தை சென்றடைய வழி. 

உழைத்தால் மட்டுமே முயற்சி திருவினையாகும். 
நேற்றைய, இன்றைய மனித வாழ்க்கை.
|
நேற்றைய மனித வாழ்கை 

ஒரு சராசரி மனிதனின் வாழ்நாள் 120 வருடம். நேற்றைய மனிதர்கள் 120 வருடம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், இன்றைய சூழ்நிலையில், 100 வயது வரை வாழ்பவரை காண்பதே மிக அரிதாகி விட்டது.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தால் ஒரு தொண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

120 வருட மனித வாழ்க்கை நிலைகள்:

தனி மனிதனின் 120 வருட வாழ்க்கையை 3 நிலைகளாகப் பிரிக்கலாம்.....................

முதல் நிலை 0-40 வயது : வளர்ச்சி
இரண்டாம் நிலை,41-80 வயது: பராமரிப்பு
மூன்றாம் நிலை, 81-120 வயது: தளர்ச்சி

இன்றைய இந்தியனின் வாழ்க்கை...........65 வருடம்

ஒரு இந்தியனின் சராசரி வயது 65 வருடம். அதற்க்கு மேல் இந்தியன் வாழ்வது இயற்க்கைத் தனி மனிதனுக்கு 'அளித்த போனஸ்' நாட்கள்.

அரை....குரை....வாழ்க்கை

120 வருடம் ஆரோக்கியமாக வாழ வேண்டிய இந்திய மனிதனின் வாழ்க்கை, ..........பாதியிலேயே முடிந்து விடுகிறது.
சராசரி இந்திய மனிதனின் வாழ்க்கை.........65 வருடம்.........

இயற்கை

நேற்றைய மனிதன்.....இயற்க்கையோடு ஒன்றி
ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வாழ்ந்தான்.
வாழ்க்கை இனிமையாக இருந்தது.
இன்றைய மனிதன்....செயற்கையோடு ஒன்றி வாழ்கிறான்.
ஆரோக்கியம் காற்றில் பறந்து விட்டது...ஆனந்தம் சந்திர மண்டலத்திற்கு சென்றுவிட்டது. வாழ்க்கையின் இனிமையை தேடி தேடி இந்த பூமியில் கிடைக்காமல் சந்திர மண்டலத்திற்கு பொழுது போக்காக மனிதன் பயணம் செய்ய ஆயத்தமாகிறான். என்ன மடமை.

இந்தியனின் வாழ்க்கை

உடல் பராமரிப்பு மற்றும் உள்ள பராமரிப்பு இல்லாத இந்தியனின் வாழ்வில் 45 வயதில் வாழ்க்கையின் முதல் எச்சரிக்கை மணி, இதயத்தில் முதல் அடைப்பு மூலம் வெளிப்படுகிறது.

55 வயதில் வாழ்க்கையின் இரண்டாம் எச்சரிக்கை மணி, இதயத்தில் இரண்டாம் அடைப்பு மூலம் வெளிப்படுகிறது.

65 வயதில் வாழ்க்கையின் மூன்றாவது கடைசி மணி, இதயத்தில் மூன்றாவது அடைப்பு மூலம் வெளிப்படுகிறது. இதயத்தை காப்போம், உடற்பயிற்சி மற்றும் மனப் பயிற்சி கொண்டு !!


இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து இருந்தால் முதல் இரண்டு எச்சரிக்கையை சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கை முறையை சீரமைத்து இருந்தால், மூன்றாவது கடைசி மணியை 100 வயதுக்கு மேல் தள்ளிப் போட்டு இருக்கலாம். ஆம் விதியை மதியால் வெல்லலாம். மன உறுதியோடு உடற்பயிற்சி மற்றும் மனப்பயிற்சி செய்தால்.

No comments:

Post a Comment