உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உங்கள் மனதை மாற்றுங்கள்...
இந்த உலகில் வெற்றியை நோக்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சோதனைகள் ஏற்படும். அப்படி சோதனை செய்வதில் முக்கியமான ஒன்று தான், மனம். ஏனெனில் அந்த மனம் எப்போதுமே முதலில் நெகட்டிவ்வைத் தான் நினைக்கும். அவ்வாறு நினைப்பதால், யாராலும் வாழ்வில் நிச்சயம் முன்னேற முடியாது.
எப்போதும் மனதில் பாசிட்டிவ்வாக யோசித்தால், எந்த ஒரு செயலையும் துணிந்து செய்யலாம். உதாரணமாக, நமது மனம் நெகட்டிவ்வாக நினைக்கும் போது, ஏதாவது ஒரு தோல்வி நடந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் மறக்காமல் இருக்கும். இதனால் எந்த செயலை செய்யும் போதும் எங்கு தோல்வி கிடைக்குமோ என்று பயந்து ஈஸியானவற்றைக் கூட இழக்க நேரிடுகிறது. ஆகவே வாழ்வில் வெற்றியை நோக்கி முன்னேற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
வாழ்வில் முன்னேறும் போது நிறைய பேர் என்னென்னவோ சொல்வார்கள். இதில் அதிகம் நம்மைப் பற்றி சொல்பவர்கள் யார் என்று பார்த்தால், குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது ஆசிரியர்கள் தான். இவர்கள் சொல்வது நமது நலத்திற்காகவே இருக்கட்டும். ஏன் நாம் எதை விருப்பப்பட்டு செய்தாலும் மூக்கை அறுப்பது போல் நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் மனதை தளர விடாமல், தன் எண்ணத்தில் மட்டும் முழு கவனத்தைக் கொண்டு வாழ்வை மேற்கொண்டால், வெற்றியை நிச்சயம் அடையலாம்.
எப்போதும் மற்றவர்கள் கூறுவதை கேட்காமல், உங்கள் உள்ளம் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் உள்ளம் என்ன சொல்கிறதோ, அதை செய்யுங்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதால், வெற்றியை அடைய முடியாது. ஆகவே உங்கள் மனம் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு, அதன் படி நடக்க வேண்டும். உதாரணமாக, உங்களுக்கு ஏதேனும் ஒரு புதிய விஷயங்களை செய்யும் போது, மற்றவர்கள் முடியாது என்று நினைப்பதை கூட, நீங்கள் முழு கவனத்தோடு, செய்து முடிப்பீர்கள்.
எந்த நேரத்திலும் நீங்களே முடிவெடுங்கள். இதுவரை சிறுவயதில் உங்களுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் முடிவெடுப்பார்கள். இப்போது நீங்கள் வளர்ந்து விட்டீர்கள். இந்த நேரம் தான் நீங்கள் சுயமாக உங்கள் முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம். எப்போதும் எதையும் செய்ய முடியவில்லை என்று மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்காமல், பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், நினைத்தால் மட்டும் போதாது, சுயமாக முடிவு எடுக்க தெரிந்திருக்க வேண்டும்.
இது தான் மிகவும் முக்கியமான ஒன்று. மேலே சொன்னது போல், வாழ்க்கையில் முன்னேறும் போது தோல்விகளை சந்தித்து தான் ஆக வேண்டும். அதற்காக அந்த தோல்விகளையே மனதில் வைத்துக் கொண்டு வாழ்க்கையில் இருக்க கூடாது. "தோல்வி தான் வெற்றியின் முதல் படி". தோல்விகளை சந்திக்க சந்திக்க தான் மனம் தெம்பாக, அனைத்தையும் எதிர்த்து நின்று, தைரியமாக செல்ல முடியும். இதனால் வெற்றியையும் எளிதில் அடைய முடியும். * இன்றைய காலத்தில் நிறைய மக்கள் சோம்பேறித்தனத்துடன், கவனகுறைவோடு, எதைப் பற்றியும் கவலை இல்லாமல் இருக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்கு எந்த ஒரு நினைப்பும் இல்லை. இதனால் அவர்கள் எந்த ஒரு பெரிய பாராட்டையும் பெறப் போவதில்லை. ஆனால் தோல்வியடைந்து விட்டால் மட்டும், அதை நினைத்து மனதை தளரவிட்டு, வாழ்க்கையை வீணாக்குவது. ஆகவே அவ்வாறு இல்லாமல், மனதை எப்போதும் சுறுசுறுப்பாக வைப்பதோடு, அடைய வேண்டிய இலக்கை மனத்தில் கொண்டு சுறுசுறுப்பாக செயல் பட வேண்டும்.
மேற்கூறியவாறெல்லாம் நடந்து வந்தால், வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைவதோடு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கும் வரலாம்.
No comments:
Post a Comment