Tuesday, December 16, 2014

வெற்றிச் சூத்திரம்

வெற்றிச் சூத்திரம்
|
6 .1 எதிர் நீச்சல்

வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் இது ஒரு தமிழ்பட பாடல் வரி மட்டும் அல்ல, ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் இருக்க வேண்டிய மனநிலை.

ஒவ்வொரு தொழில் பிரச்சனைகளையும் வாழ்க்கை வெற்றிக்கான தடைக்கல்லாக நினைத்து படிக்கல்லாக மாற்றும் மனோ நிலை தொழில் முனைவோருக்கு மிக மிக அவசியம்.!!

6 .2 இலட்சத்தில் ஒருவர்

இந்த உலகில் உள்ள சுமார் 672 கோடி மக்களுக்கும் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அனால், அவர்களில் எத்தனை பேர் வெற்றி பெறுகிறார்கள்? ஒரு வெற்றி கணக்கு பார்ப்போம்.
10 லட்சம் பேர், இந்த உலகில் வெற்றி பெற வேண்டுமா என்று கனவு காண்கிறார்கள். அவர்கள் அனைவருமே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தை மனது அளவில் ஓட விடுகிறார்கள்.

அத்தகைய 10 இலட்சம் பேரில், 1000 பேர், எண்ண ஓட்டத்தில் ஓடிய ஓடுகின்ற பல்வேறு எண்ணத்திலே, ஓரிரு எண்ணத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.
அத்தகைய 1000 பேரில், 100 பேர், அவர்களின் எண்ணத்தில் கொண்ட நம்பிக்கையின் பேரில், கனவை நனவாக மாற்ற செயலில் இறங்குகிறார்கள்.
அவ்வாறு தொழில் செய்ய புறப்பட 100 பேரில், 10 பேர் முழுமையாக செயல்பட்டு தொழில் ஆரம்பிக்கிறார்கள்.

6 .3 வெற்றிக் கனி

அவ்வாறு தொழில் ஆரம்பித்த, 10 நபர்களில் முதல் ஒரு வருடத்தில் பல்வேறு காரணத்தினால் 4 அல்லது 5 பேர் தான் நிலைக்க முடியும் அடுத்த இரண்டு வருடத்தில் மீதம் உள்ள 5 அல்லது 6 நபரில், 3 அல்லது 4 நபர் தொழிலை விட்டு விட்டு இருப்பார்கள் அல்லது தொழிலுக்கு முழுக்கு போட்டு இருப்பார்கள், ஆம், மூன்றாம் ஆண்டு இறுதியில் ஒருவரோ அல்லது இருவரோ தொழிலில், உயரிய நிலையை அடைகிறார்கள்.

6 .4 மனக்கண்ணில் வெற்றி

இந்த உலகத்தை சாதாரணமாக கண்களை, கொண்டு பார்பவர்கள் பலர். அனால், இந்த உலகத்தில் மனக்கண் கொண்டு பார்பவர்கள் சிலர். அவர்களிலும் தொலை நோக்கு பார்வையை கொண்டு, இந்த உலக மறுமலர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் மிகச்சிலரே.

சாதாரண கண்ணைக் கொண்டு இந்த உலகத்தை பார்ப்பவர்கள் சாதாரண வாழ்க்கையை பெற முடிகிறது. அதே சமயம், மனக்கண் மற்றும் அகக்கண் கொண்டு இந்த உலகத்தை பார்ப்பவர்கள் அசாதாரண வாழ்க்கையை பெற முடிகிறது.

முற்போக்கு எண்ணத்தோடு, அககண்ணில், கண்டு அதை நிஜத்தில் சாதித்து, இந்த உலகத்தில் காலத்தால் அழிக்க முடியாத சாதனையை செய்தவர்கள் மிகச்சிலரே முடிகிறது.

6 .5 பச்சை நிற கண்ணாடி

பச்சை நிற கண்ணாடி அணிந்து ஒருவன் இந்த உலகத்தை பார்த்தால், இந்த உலகம் அவனுக்கு பச்சை நிறமாகத்தான் தெரியும்.

6 . 6 கருப்பு நிற கண்ணாடி

ஆனால், கருப்பு நிற கண்ணாடி அணிந்து அதே மனிதன், இந்த உலகத்தை பார்த்தல், இந்த உலகமே கருப்பு நிறமாகத்தான் தெரியும்.

6 . 7 சிகப்பு நிற கண்ணாடி

அதே மனிதன், சிவப்பு நிற கண்ணாடி அணிந்து இந்த உலகத்தை பார்த்தல், இந்த உலகம் முழவதும் சிவப்பு நிறமாகத்தான் தெரியும்.
தவறு எங்கே கண்ணடியிலா அல்லது இந்த உலகத்திலா?

6 .8 புதிய சந்தை வாய்ப்புகள்

உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. மாறுகின்ற உலகத்தில் புதிய புதிய பொருள்கள் சந்தைக்கு தினம், தினம் வந்து கொண்டே இருக்கிறது. யார் இந்த பொருள்களை சந்தைக்கு கொண்டு வருகிறார்கள்? எப்படி அவர்களுக்கு மட்டும் அந்த எண்ணம் மற்றும் வாய்ப்பு வந்தது?

6 .9 மிளகாய்.... மசாலா....

மிளகாய் மட்டும் ஒரு வியாபாரி விற்று வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னால், குடும்ப தலைவி மிளகாயை வாங்கி, சுத்தம் செய்து பொடியாக்கி, சேகரித்து வைத்து, சாம்பாருக்கு பயன்படுத்தினர். பிறகு, 30 ஆண்டுகளுக்கு முன்னால், மிளகாய் போடி ஒரு கிலோ, அரை கிலோ என்று பாக்கெட்டில் வந்தது. அதை வாங்கி குடும்ப தலைவி சாம்பார் செய்தார். பின்னாளில் அதாவது, 20 ஆண்டுகளுக்கு முன்னால், சிறிய அளவில் சாம்பார் மசாலா பொடி விற்பனைக்கு வந்தது. இன்று எத்தனை எத்தனை நிறுவனங்கள் நம்மை சுற்றி, சக்தி மசாலா ஆச்சி மசாலா, சின்னீஸ் மசாலா, இன்னும் எத்தனையோ மசாலா கம்பெனிகள்.

தொழில் தொடங்க நினைத்தால், தொழிலா இல்லை இந்த பூமியில். சொந்த காலில் வாழ நினைத்தால் வாழலாம். தேவை மாறுபட்ட எண்ணம் மற்றும் தொழிலில் வெற்றி பெற்றே தீருவேன் என்ற அசாத்திய நம்பிக்கை.

No comments:

Post a Comment