தன் நம்பிக்கை
நட்சத்திரக் கூட்டங்களுக்கு குறி வையுங்கள். அப்போது தான் வானின் உச்சியையாவது நிச்சயம் தொட முடியும்.
பிரம்மாண்டமாகத் திட்டமிடுங்கள்….துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்…உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன
Don’t be Ever Rest.
Be an Everest.
தோல்வியை எருவாக்கு;
வெற்றியை உருவாக்கு.
சுற்றவே பிறந்தது பூமி
சுடரவே பிறந்தது கதிர்
உலவப் பிறந்தது காற்று
உழைக்கப் பிறந்தவன் நீ.
When you Rest, You Rust.
வீசும் காற்றும் எழும் அலையும் எப்போதும் மிகத் திறமையான மாலுமியின் பக்கமே இருக்கும்.
வீரியத்தோடு விடாது முயற்சி செய்! தயங்கிப் பின் வாங்காதே! தளர்ந்து தடம் புரண்டு விடாதே! தொடர்ந்து செய்! துணிந்து செய்! ஊக்கத்தோடு பாடுபடு! உறுதியோடு பாடுபடு! அப்போது காலங்கனிந்து கைகூடி வரும். வெற்றி தேவதை உன்னை வாழ்த்தி வரவேற்பாள்!
விழாமையன்று நம் பெருமை…விழுந்தொரும் எழுவதே!
சுறுசுறுப்பாயிருங்கள்…ஓடிக் கொண்டிருக்கும் நீரில் தான் ஆக்சிஜன் அதிகம்.
தீப்பொறியாக ஒரு கணம் இருந்து விட்டு மறைந்து விடுங்கள். காலமெல்லாம் புகைந்து கொண்டிருப்பதை விட…
தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல; தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி. மறந்து விடாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உங்கள் சரித்திரத்தில் ஒவ்வொரு பக்கமாகும்..
மனசை இரும்பாக்கனும்; மலையை துரும்பாக்கனும்.
Even the word Impossible says I’m Possible.
No comments:
Post a Comment