Tuesday, May 5, 2015

தன்னடக்கம் மிகவும் அவசியம்

தன்னடக்கம் மிகவும் அவசியம்


● உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமையில் இருந்து சற்றும் விலகி நடக்காமல் அதனுள் ஒன்றி செயல்படுங்கள். அதற்காக நீங்கள் துன்பப்பட வேண்டிய சூழல் வந்தாலும் அதனை அன்பாக ஏற்றுக் கொள்ளுங்கள். துன்பத்தையும் சந்தோஷமாக எண்ணுங்கள். அதிலும் ஒரு சுகம் தெரியும்.

● நீங்கள் செய்யவேண்டிய பொறுப்பு முழுவடையும் உங்களது தோள் மீது நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் விதி, வேறு எங்கேயோ இருப்பதாக நினைக்காதீர்கள். அது உங்களிடம்தான் இருக்கிறது.

● எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடந்தாலும் அதற்காக அதிக சந்தோஷம் கொள்ளாதீர்கள். எப்போதும் தன்னடக்கத்துடன் இருங்கள். யார் உங்களை என்ன சொன்னாலும் அதுகுறித்து கவலை கொள்ளாதீர்கள். அவர்கள் சொல்வதை பொறுத்துக் கொள்ளுங்கள். மாறாக கோபம் கொள்ளாதீர்கள். உங்களுக்கு சரியென தோன்றிய நல்ல செயல்களை சிறப்பாக செய்து முடியுங்கள்.

No comments:

Post a Comment