Thursday, August 1, 2013

பொறுப்புக்களை என்ன செய்வது ?

பொறுப்புக்களை தட்டி கழிக்காதீர்கள்,  தப்பி ஓடப் பார்க்காதீர்கள் . அப்படிச் செய்தால் உங்களுக்கு மன அமைதி கிட்டாது.. அதிகமான கவலைகள் தான் உங்களைச் சேரும்.. ஏனெனில் உங்களது கடமைகளை நீங்கள் தட்டி கழிக்க பார்க்கிறீர்கள் என்ற எண்ணமே உங்கள் மனதை அரித்து ஏற்கனவே உங்களிடம் இருந்த கொஞ்சம் அமைதியையும் இல்லாதாக்கிவிடும்.. இதைவிட உங்களால் முடி ந்த மட்டும் திறமையுடன் உங்களது பொறுப்புக்களை நிறைவேற்ற பாருங்கள்.. ஆனால், ஒன்றை முக்கியமாக இங்கே மனதில் கொள்ள வேண்டும்.. 'நான் செய்கிறேன் ' என்ற ஆணவத்துடன் தினமும் மேலும் மேலும் புதிய பொறுப்புக்களை கூட்டிக் கொண்டு போகக் கூ டாது.. சாதாரண நடைமுறை பாசையில் இது தான் வம்பை விலைக்கு வாங்குவது என பொருள்படும்.. இதற்கு மாறாக உங்களது  பொறுப்புகளுக்கேற்ப உங்கள் புற வேலைகளை  மேன்மேலும் குறைத்துக் கொள்ளுங்கள்..அதிக நேரத்தை பிரார்த்தனை, சிந்தனை மற்றும் தியானத்தில் செலவிட விருப்பம் கொள்ளுங்கள்..மனமே இல்லாதாகும் பொழுது தான் பூரண திருப்தி கிட்டுகிறது. மனம் எனபது எண்ணங்களின் குவியலே . எண்ணங்கள் என்றால் சலனம்.செயல் குறையக் குறைய எண்ணங்களும் குறையும்..எவ்வளவுக்கெவ்வளவு எண்ணங்கள் குறைகின்றனவோ அந்த அளவு மன அமைதி அதிகரிக்கும்.. எண்ணமின்மை தான் பூரண அமைதி  நிலவும் மிக உயர்ந்த நிலையாகும்.. 

No comments:

Post a Comment