மகனே... நீ எனக்கு உதவும் பட்சத்தில், நாம் நமது நிலத்தில் மிக சிறப்பாக விவசாயம் செய்து செழித்து வாழ முடியும். ஆனால், நீ உன்னுடைய கண்டுபிடிப்புக்காக உழைக்க போவதாய் சொல்கிறாய். உனது வெற்றி அவ்வளவு எளிதும் அல்ல, நிச்சயமும் அல்ல என்பதை மறவாதே!"
"அப்பா, நான் வெற்றி பேறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் என்னை பார்த்து பெருமைப்பட போகும் நேரம் வரும். என்னை ஆசிர்வதியுங்கள் தந்தையே!"
அறை மனதுடன் அவனை ஆசிர்வதித்த தந்தைக்கு தெரியாது, அமெரிக்க சரித்தரத்தின் அழிக்க முடியாத சக்தியாக இவன் உருவெடுக்க போகிறான் என்று.அவர் தான்... "நீ நினைக்கிறாய் உன்னால் முடியும், நீ நினைக்கிறாய் உன்னால் முடியாது, இரண்டும் சாத்தியமே - உன் எண்ணங்கள் உன் வெற்றிக்கு உந்து சக்தி," என்று கூறியவர்.
அவருக்கு பிசினஸ் என்றால் என்னவென்று தெரியாது, ஆனால் தன்னால் அவற்றைக் கற்று கொள்ள முடியும் என்று தெரியும்.
அவருடன் படித்த இளைஞர்கள் கை நிறைய சம்பாதித்தபோது, அவரால் சம்பாதிக்க முடியவில்லை. ஆனால் ஒரு நாள் அவர்களை வேலைக்கு அமர்த்தும் அளவுக்கு, தன்னால் பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது.
அவர் தான் Ford கம்பெனியை நிறுவிய ஹென்றி போர்ட்.
உலகில் மிக குறைந்த விலையுடைய காரை எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் நான் தயாரிக்கிறேன் என்று சொல்லி, 1903 ஆம் ஆண்டு மாடல் டீ19 காரை வெறும் 280 டாலருக்கு விற்றார்.
உலகமே வியந்தது. அதன் விற்பனை எவ்வளவு தெரியுமா?
ஒரு கோடியே ஐம்பைதைந்து லட்சம்!
வெறும் அமெரிக்காவில் மட்டுமே இந்த விற்பனை சதவீதம் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
அவர் வாழ்க்கையில் இருந்து நாம் கற்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இதுவே...
1. என்னால் முடியும்... என்னால் முடியும்...
2. யார் என்னை ஏசினாலும் என்னுடைய முயற்சியில் இருந்து நான் பின் வாங்க மாட்டேன்.
3. தோல்வியை நான் பாடமாக மட்டுமே கருதுகிறேன். அனைவரின் சிறந்த கருத்துக்களை நான் பொறுமையாக கேட்கிறேன். அவற்றில் சிறந்தனவற்றை மட்டுமே எடுத்து கொள்கிறேன்.
4. தோற்றவுடன் விட்டுவிடாதீர்கள் இன்னும் வெறியுடன் வெற்றி கிடைக்கும் என்று போராடுங்கள்.
5. ஒரு சிறந்த நிறுவனத்தை நடத்த முக்கிய தேவை - தற்போதைய உலகின் தேவை என்ன என்பதை கண்டறிய வேண்டும். அதற்கானதாக இருக்க வேண்டும் நம் அடுத்த தயாரிப்பு!
நம்மால் முடியும்... நம்மால் முடியும்... மற்றவை, நம் காதில் விழாது விழக்கூடாது!
No comments:
Post a Comment