Saturday, February 1, 2014

பதட்டத்தை தனிப்பது எப்படி ?

பதட்டத்தை தனிப்பது எப்படி ?

டென்சன் என்ற வார்த்தை மழலை பேசும் வாய்களில் இருந்து கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது நவீன காலத்தில் மனித மனங்களில் இந்த பதட்டம் அபரிமிதமாக பெருகி வளர்கிறது. பதட்டம்,டென்சன் என்றால் என்ன  என்பது பலருக்கு சொல்ல தெரியாது ஆனால் தினம் தினம் அதை அனுபவித்து அல்லல் படுகிறார்கள். பதட்டம் என்பது பயம் என்ற நெருப்பின் புகையே பயம் ஏன்வருகிறது? அது எதிர்மறை எண்ணங்களின் விளைவு.                                                                                                                                                         எதிர்மறை எண்ண‌ங்கள் என்றால் என்ன?

நாம் நினைப்பது நடக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் அல்லது எதிர்பாராத தீமை நடந்து விடுமோ என்ற பயம் இந்த இரண்டு எண்ணங்களுமே, ந‌மது கடந்த கால அனுபவங்கள் துயரமாக இருந்தால் ஏற்படுகிறது ஆனால் சிலருக்கு காரணமே இல்லாமல் ஏற்படுகிறது. பதறின பொருள் சிதறும் என்பார்கள், நிச்சயமாக பதட்டம் நமது செயல் திறனை உடல் செயல்பாட்டை பாதிக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.   ஒரு தோல்வி,அதைத் தொடர்ந்த துயரம்,மறுபடியும் தோற்போமே என்ற தயக்கம்,பயம்,என்ற விதையாகும். நேரம் நெருங்கும் போது அது பதட்டம் என்று படமெடுத்து ஆடும். அதனால் தான் இடுக்கண் வருங்கால் நகுக என்றான். துன்பம் வரும் போது துவண்டால் சுனாமியில்துரும்புபோலமூழ்கிப்போவோம், துணிச்சலாக விரைத்து நின்றால் நிச்சயம் வெற்றி பெறுவோம்,

ஆனால்
        மனித இயல்பும்,
        மனித நரம்பு மண்ட‌லமும்,
        மனித நரம்பியல் அனிச்சை மண்டலம் அனைத்தும்,

வலியை தவிர்க்கவே விரும்பும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது.

தீயைக் கண்டால் ஓடிவிடு,பகையைக் கண்டால் ஓடிவிடு என்பதே உடல் அமைப்பு.

ஆனால் நிமிர்ந்து நில் எதிர்த்து போராடு,செய் அல்லது செத்து மடி என்பதுவே மனித குலத்தின் கோட்பாடு. அது அப்படியிருக்கவே துன்பம் வந்த போது துவள்பவ‌ன்கோழைஅல்லவோ. வருவது வரட்டும் நடப்பது நடக்கட்டும் என்ற துணிவு உடலுக்கும் மனதுக்கும் ஒரு தயார் நிலையைத் தருகிறது. வாளோ துப்பாக்கியோ நடுங்கிய,துவண்ட,தடுமாறும் கைகளில் இருந்து என்ன பயன்.அதனால் தானே அவன் நகுக என்றானோ? சிரிக்கவோ சொன்னான்?இல்லை துணியத்தானே சொன்னான். துவண்டு வளைந்து நெளிந்து ஓடும் பாம்பு படம் எடுத்து எழுந்து நிற்பதும் ஒரு தயார் நிலைதானே. ஆரவாரம் ஆர்ப்பாட்டம்,ஆக்ரோசம் இவை தேவைவையில்லை அது மிருக குணங்கள் தானே.
            துணிவு,
            அமைதி,
            பொறுமை,
            அச்சமின்மை,
            தெளிவு இவை போன்ற
மன தயார் நிலைகள் தானே பதட்டத்தை தணிக்கும்பயிற்சிநிலைககளாகும்.
தோல்விக்கும் அவமானத்துக்கும் அதீத முக்யத்துவம் கொடுக்க வேண்டாமே.
நாம் நமது முயற்சியை ஒழுங்காக செய்வோம்.
கடவுள் பார்த்து கொள்வான் நிச்சயம் வெற்றிதான்
தோல்வி வந்தாலும் வருத்தமில்லை
மறுபடி மறுபடி முயற்சிப்போம் வெல்வோம் என்ற வீர வசனங்கள் துவண்ட மனத்தை தூக்கி நிறுத்தும்
வாள் பிடித்த கைகள் உறுதியானால் குறிதவறாது
துப்பாக்கி தூக்கிய தோள் நிமிர்ந்தால் தோட்டா குறிதவறாது.
இதுதானே பயத்தை பதட்டத்தை தவிர்க்க வழி.
முதலில்
கடந்த கால தோல்விகளை அதை பற்றிய எண்ணங்களை மூட்டை கட்டி குப்பையில் போட்டு எரித்து விடுவோம்.
அதில் ஏதாவது பாடங்கள்,எதைசெய்ய கூடாது என்று ஏதாவது தெரிந்திருந்தால் மட்டும் நினைவில் வைத்து கொள்வோம்.
அந்த தோல்விக்கு அறிவு பூர்வமாகஏதேனும்காரணம்இடம்,சூழ்நிலை,எதிரிகள் நமது குற்றம் குறைகள் இருந்தால் அதை கண்டறிந்து மாற்றிகொள்வோம்.

ஆனால் அதிகமான பழைய நினைவுகள் பதட்டத்தை அதிகமாக்கும் கடந்த கால தோல்விகளை இறந்த காலமாக இறந்த பிணமாக கடந்த கனவாக புதைத்து விட வேண்டும்.
புதிதாக புதிய துணிவுடன் அனுபவமுள்ள தயாரான மன நிலையில் தெளிவாக பதட்டமில்லாமல் அணுக வேண்டும்.
பலருக்கு கடந்த காலத்தை விட எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகி பதட்டம் ஏற்படுகிறது.
தோற்று விட்டால் எதிர்காலம் இருண்டு விடும் என்று அச்சப்பட்டு பலர் பதட்டபடுவார்கள்
குறிப்பாக வாலிபபருவம்,இளைஞர்கள்தேர்வு,நேர்முகதேர்வு,காதல்,உடலுறவு,
புதிய பயிற்சிகள் இவற்றில் அதிகமாக பயப்படுவார்கள்.அவர்களது மனம் பயிற்சியை விட முயற்சியை விட,குறிக்கோளை விட விளைவை பலனை பற்றி அதிகமாக நினைத்து குழப்பமடைகிறது.
விளைவு தோல்வியாகுமோ,தோற்றால் அவமானமாகுமோ,
எதிர்காலமே இல்லையே என்ற தவிப்பு அச்சமாக மாறி
தவிர்த்து ஓடுவார்கள் அல்லது தயங்கி தயங்கி செய்வார்கள்
அல்லது பதட்டத்தோடு த‌டுமாறுவார்கள்.
இப்படியான இவரது எண்ணங்களும் தடுமாற்றங்களும் அவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தும் தோற்பதற்கு காரணமாக மாறுகிறது.
பல நேரங்களில் அனுபவம் பெற்றும் வயது பக்குவம் வந்தும் பதட்டம்ஏற்படுகிறது.
சிகரத்தில் ஏறுவது கூட சுலபம் ஆனால் அங்கு நிற்பது கடினம்
போட்டிகளும் பொறாமைகளும் கழந்தறுக்கும் காலொடிக்கும்
பரபரப்பான வாழ்க்கையில் 3முதல் முடிஉ திரும் காலம் வரை எவராலும் எந்த நிலையிலும் பதட்டம் அடையாமல் பக்குவமாக வாழ்வது என்பது இயலாமல் போய் விட்டது.
ஆண் பெண்,வயது,வசதி படிப்பு என்ற பாரபட்சமின்றி எல்லோரும் பதட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  

டென்சன் என்ற வார்த்தையை பார்த்தாலே அது ஏன் என்பது நன்றாக தெரியுமே  சூடான கல் மாதிரி முறுகேறிய ஒரு ஙாலின் நிலை என்பது தெளிவாக புரியும்                                                             
வேலியில் உள்ள ஒரு ஒனான் அல்லது பல்லியை பார்த்தால் அது டென்சனகா இருப்பது புரியும்
நம்மில் பலர் அப்படித்தான் நாற்காலி விளிம்புகளின் தோள்களை புடைத்து கொண்டு கழத்தை நீட்டிக் கொண்டு அமையிழந்து ஒரு அவசர நிலையில் உட்கார்ந்து இருப்பார்கள்                                                              
அதுவும் நேர்முகத் தேர்வு என்றால் இரத்தம் புனல் போன்ற வேகத்தில் ஒடும் நரம்புகள்
மின்சாரக் கம்பிகள் போல சூடாக இருக்கும் இந்த விரைப்பு அல்லது முறுக்கு நிலையை மனம் டென்சன் அல்லது பதட்டம் என உணர்கிறது
நிச்சயம் இது ஒருஅசெளகர்யமான துயரம் தரும் மன நிலையே                                    
இந்த பதட்டம் என்பது இயல்பாக அதிகமாக வாலிப வயது பெண்கள் மற்றும் கூச்ச அபாவமுள்ள வாலிபர்கள் மத்தியில் இருந்தது
ஆனால் இன்று அதிகமாக பயணம் செய்பவர்கள் பொறுப்புள்ள அதிகாரிகள் அறுசுறுப்பான முதலாளிகள் என்று பல தரப்பினி ரிடமும் வேகமாக பரவி வளர்கிறது
பரபரப்பான உலகத்தில் பதட்டமில்லாதவர் யாருமில்லை
எல்லா நிலைகளிலும் பதட்டம் வேகமாக பரவுகிறது  மூன்று வயது குழந்தைக்கு கூட படிப்பின் சுமை பதட்டத்தை தருகிறது.
பரபரப்பாக எழுந்து,தயாராகி,பயணம் செய்து,பாடம் படித்து அது டென்சனாகிறது
வீட்டு பாடம் முடித்து மனப்பாடம் செய்து காலத்தோடு போட்டி போட்டு அது போராடத்துவங்கும் போது பதட்டம் துவங்குகிறது.                                                                                           
எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பு அது இமயத்தின் சிகரத்தை தொட்டாலும் நிலவுக்கு எகிறிக் குதிக்கிறது
மரத்துக்கு மரம் தாவிய குரங்கு கிரகம் விட்டு கிரகம் தாண்டுகிறது இது தவறா ?
நிச்சயமாக இல்லை.மரம் தாவிய மனிதன் கிரகக் கிளைகளைத் தாவும் மாமனிதனாக பரிணாமம் பெறுவது வெற்றியே
அதற்கு அவனுக்கு கிடைத்த விபத்து டென்சன்.
பாற்கடலை கடைந்த போது அமுதம் கிடைக்கு முன் கிடைத்த நஞ்சு  போலத்தான் இந்த டென்சன்.   

ஆனால் இந்தடென்சனை எவன் ஒருவன் டென்சன் இல்லாமல் வென்றானோ அவனுக்கே அடுத்த.உயர் பதவி காத்திருக்கிறது.
சாதாராண கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியில் வெற்றி கரமாக வென்று வந்தவனுக்கே ஜநா சபைத் தலைமை காத்திருக்கிறது.                                                                      
சிறிய சிறிய போரட்டங்களை அமைதியாக ஆர்ப்பாட்டங்களை சந்தித்து சேதாரமில்லாமல் மீண்டவரால் தான் பெரிய சாதனைகளை சாதிக்க முடிகிறது.
டென்சன் பதட்டம் அதிகம் உள்ளவர்களுக்கு தவிர்த்து விடத்தான்தோன்றும்.
சிறிய கார்யம் கூட மலை போலத் தோன்றும்
வெற்றிகரமாக முடித்தாலும் களைப்பும் விரக்தியுமே தோன்றும்.
வெற்றியைக் கூட கொண்டாட முடியாத வெறுப்பும் சலிப்பும் தான் வரும்.
அது மட்டுமல்ல பதட்டத்தால் நரம்பு மண்டலங்கள்
பாதிக்கப்படும் என்பது உண்மை.
அதிகமாக உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு வயிறுபுண்,தலைவலி,உடல்அசதி,சோர்வு
இரத்த அழுத்தம் மன அழுத்தம் மற்றும் பலவித உபாதைகள்
ஏற்படுவது அனைவரும் அறிந்த செய்திதானே.
இப்படி உடல் மனம் செயல் வெற்றி உயர்வு என்று எல்லாவற்றையும் அரிக்க கூடிய டென்சன் என்ற நெருப்பை நாம் கட்டி கொள்வது நியாயமோ
நமது நரம்பு மண்டலங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க கூடிய அமிலம் போன்ற இந்த பதட்டத்தை அகற்ற கற்று கொள்வது அவசியம் அல்லவா?.
வழக்கம் போல டென்சனுக்கு 'மருந்து'கள் 'போதிக்'கபட்டன.
அதில் முக்யமானது புகைபழக்கம் முதலில் மத்ய வயதில்தொடங்கியது.
ஆனால் நவீன காலத்தில் டீன் ஏஜீலேயே புகைய ஆரம்பித்துவிட்டது.
சிகரட் டென்சனை குறைப்பதாக தெரியவில்லை இன்னும் சொல்லப் போனால் சிகரட் பிடிக்கவில்லை என்றால்தான் டென்சன் அதிகமாகிறது.
அடுத்தது பதட்டம் என்பது நெருப்பை போல என்றோம் அது இரவுக்குள் மனதை எரித்து விடுகிறது.                 

எரிகிற நெருப்புக்கு ஏது உறக்கம்

அதில் புகை என்ற நெருப்பையும் சேர்த்து கொண்டால்
உறக்கம் என்பது கூட கனவாக போகிறது.
உறங்கினால் தானே எந்த கனவு கூட வரும்
உறக்கத்துக்கு இந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்த போதை பொருளின் எண்ணிக்கள் கூடிக் கொண்டே போகிறதே ஒழிய ஒருபோதும் இந்த 'டென்சன்'நொய் குறைவாக தெரியவில்லை.
பாவம் பெண்கள் ஆண்களுக்காகவாவது தீர்வுகள் கண்டு பிடிக்கிறார்கள் இவர்களுக்கு அதுவும் இல்லை
ஆனால் நவீன பெண்கள் மதுவும் சிகரெட்டையும் விட்டு வைப்பதாகஇல்லை
பழையவர்கள்தலைவ லி,அவில் தூக்க மாத்திரைபோன்ற
நிவாரண மருந்துகளுக்கு அடிமையாகிறார்கள்

பணம் உள்ள ஆண்க ளும்  அதிகாரிக ளும்  பதவியுள்ள வாய்ப்புள்ளவரும் தொழிலாளரும் டென்சனை குறக்க செக்ஸ உறவுக ளை  வடிகாலாக நினைக்கறார்கள்-தேவையில்லாத ஊழல்,குற்றங்கள்,பிரச்னைகள் நோய்களில் மாட்டிக் கொள்கிறார்கள்
அதெல்லாம் சரி டென்சன் படுத்தும் பாடும்
அது ஏற்படுத்தும் கொடுமைகளும் தெரியுமே?

ஆனால் அந்த பதட்டம் இல்லாமல் இருப்பது அதை தவிர்ப்பது அல்லது குறைந்த பட்சம் குறைப்பது எப்படி என்ற வழிகள் தானே தெரிய வில்லை என்று பலர் புலம்புகிறார்கள் முதலில் குழந்தை பருவத்திலிருந்து பழகி வருவதுதான் நல்ல பழக்கம் இறைவனது இயற்கையில் சிலர் டென்சன் ஆவதற்கென்றே படைக்கப்பட்டு சபிக்கபட்டிருக்கிறார்கள் போலும் உடல் மனநரம்பு மண்டல அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்குமனிதர்களுக்கு டென்சன் உடன் பிறந்த சகோதரர் இது மேலும் பெற்றொரினால் நீரூற்றி வளர்க்கப்படும். பதட்டமில்லாத பெற்றொர், அல்லது பதட்டப்படுத்துவதை தனிக்கும் பெற்றோர் மிக அவசியம் அப்படி இல்லையென்றால் குழந்தை நல்ல சூழலுக்கு  மாற வேண்டும் -- மாற்றப்பட வேண்டும் ஆசிரியர்கள்,தொலைக்காட்சி,செய்திதாள்கள்,தொடர்புசாதனங்கள் மக்களை மாணவர்களை பதட்டப்படுத்தாமல் பாதுகாப்பாக ஊக்கப்படுத்த வேண்டும் குறிக்கோள்கள் வேண்டும் அவை வெறிக் கோளாக மாறக் கூடாது வென்றவருக்கு பரிசுகள் கொடுக்கட்டும்  வெற்றிக்கு கை தட்டுவோம் ஆனால் தோல்விக்கு கை தூக்க மறுக்க வேண்டாம்  மற்றவர்களுடைய உதவியால் ஒருவன் பதட்டபடாமல் வளரமுடியும் அப்படியும் டென்சன் என்பது இளமையில் அனைமீறுகிறது என்றால் அவருக்கு பிறர் உதவ முடியும். ஒரு போதும் தவறான தீய வழிகளில் மாட்டி கொள்ளகூடாது, மருந்து,புகை,மது,செக்ஸ் போன்ற திட திரவ வாயுக்களில் மாட்டி அழிந்து போக கூடாது அவை ஒரு போதும் நம்மை பதட்டத்திலிருந்து மீட்காது குறைக்காது அடிமையாக்குமே ஒழிய அமைதி தராது. இயல்பான குண நிலையை பக்குவபடுத்துவதே மிகச் சிறந்த வழிகள். உள்மனிதன் ஆழத்தில் நம்பிக்கையான எண்ணங்கள் உருவாக வேண்டும் சிந்தனையில் செயல்களில் அமைதி வேண்டும் அலைபாயும் சிந்திச்சிதறும் எண்ண ஓட்டங்களை கட்டுபடுத்த வேண்டும் ஒரு போதும் துர்நாற்றம் வீசும் அச்சம்,ஆத்திரம் அவசரம் போன்ற எதிர்மறை எண்ணங்களை வளர விடக் கூடாது முயற்சி செய்யும் முன்பு பயிற்சி செய்ய வேண்டும் குறி இருக்கலாம் வெறியாக மாறக் கூடாது ஆசைப்பட வேண்டும்.ஆனால் அவசரபடக்கூடாது உணவு,உறவு,உறக்கம்,ஓய்வு,பொழுது போக்கு போன்ற அத்யாவசய உடல் தேவைகளை ஒரேயடியாக மறந்துவிடக் கூடாது--மறுத்து விடக்கூடாது.  நிம்மதியாக நிதானமாக திட்டமிட்டு நமது செயல்களை செய்ய முயற்சிக்க வேண்டும். ஆனால் மனம் என்பது எப்போதும் பாயத் துடிக்கும் அம்பு போல தயராக டென்சனாக இருக்கிறது இதை மாற்றுவதற்கு பல காலமாக பல முயற்சிகள் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. டென்சன் என்று சொல்வது இறுக்கம்,பதட்டம் என்பது முறுக்கம் இதற்கு நேர் மாறான நிலை தளர்வு நிலை இதை ரிலாக்கேசன் என்பார்கள் நிறைய பேர் ரிலாக்கேசன் என்பதற்கு தவறான வழிகளில் போகிறார்கள். ஆனால் காலம் காலமாக பெரியோர்களால் அனுமதிக்கபட்ட பொழுது போக்குகள் சரியானவை. ஆனால் நவீன கால பொழுதுபோக்குகள் தளர்வு நிலையை விட டென்சனை அதிகமாக்குகின்றன.

1.  இனிமையான இசை மிக உபயோகமானது
2.  தியான பயிற்சி மனதை ஒருமுகபடுத்தி ஞாபகம் அமைதி,கோபமின்மை,பதட்டமின்மை பல மன திறமைகளை வளர்கிறது
3.  யோகாசனப் பயிற்சிகள் மனதுக்கும் உடலுக்கும் சுகாதாரமான ரிலாக்கேசன் தரும் பயிற்சிகள்.
4.  அறிவூட்டும் புத்தகங்கள் அமைதி தருவது மற்றுமின்றி வாழ்க்கை பாதைக்கு வழிகாட்டிகளாக அமைகின்றன.
5.  பிரார்த்தனை,வழிபாடு,புனிதப்பயணங்கள் ஆத்ம பலத்தை அதிகரிக்கின்றன.
6.  குடும்பத்துடன் உல்லாச சுற்றுபயணங்கள் மாறுதலாக‌ நேரம் பயன்படுத்தபட்டு உடலும் மனமும் ஓய்வு பெற உதவுகின்றன.

No comments:

Post a Comment