பொருளாதாரத்தை பராமரிப்பது எப்படி?
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை
அதே வாயால்பொருள் அல்லாதவற்றை பொருள் என போற்றாதே என்றார்.
பூமியென்பது சூர்யனைச் சுற்றி வருகிறது
சாமியென்பது கூட பொருளைச்சுற்றி வருகிறது.
பொருள் என்பது வாழ்வின் ஆதாரம்
மனிதன் கண்டுபிடிப்புகளிலே பிரம்மாண்டமானது பணம்
உயிரின் பரிணாம வளர்ச்சியை விட
பணத்தின் பிரம்மாண்ட வளர்ச்சி அதிசயமானது
சில நேரங்களில் ஆபததானதும் கூட
சிலர் நான் விழுந்து விழுந்து படிக்கிறேன்
தலையில் ஏற மாட்டேன் என்கிறது என ஏங்குகிறார்
ஆனால் சிலர் விளையாட்டாக சிறப்பாக படிக்கிறார்
பலர் நான் மாடாக உழைத்து
ஓடாக தேய்கிறேன்
உருண்டு உருண்டு புரண்டாலும்
ஒட்டுவதுதான் ஒட்டும் என புலம்புவதுண்டு
சிலருக்கு மிகச்சுலபமா வருகிறதே என்பார் அவர் புலம்பல்
அவருக்கு அதிஷ்டம் என்கிறார்
அவரை ஏசுகிறார் பேசுகிறார்
பலரும் தனது இயலாமையை,ஆற்றாமையை மறைத்து
செல்வரை இகழ்ந்து பொறாமைப்படுவதில் பயனில்லை
சிலர் ஊழலால் பணம் சேர்த்திருக்கலாம்
சிலர் தவறான வழியில் வந்திருக்கலாம்
சிலருக்கு அதிஷ்டம் வந்திருக்கலாம்
ஆனால் உலகில் செல்வர்கள் அனைவரும் தவறானவர் என்ற பொதுக்கருத்து நம்மை நம் முன்னேற்றத்தை தடுக்கும்.
பலருக்கும் படிப்பும்,உழைப்பும்,ஒழுக்கமும் தான் உயர்வு தந்தது ஓரளவு அதிஷ்டமும்,தந்திரமும் இருக்கலாம்.
ஆனால் முழுக்க முழுக்க முன்னேறியவர் அனைவரும் கயவர் என்ற கருத்து மனதில் கருவாகக்கூடாது
அந்த எண்ணம் அவர்களை பாதிக்காது
நமது உழைப்பை ஊக்கத்தை தடுக்கும்
அப்படிப்பட்ட கருத்து பரப்புவர்கள் பொறாமையினால்தான் செய்கிறார்கள்
ஆகவே நாம் உயர்ந்தவர்களின் மறுபக்கத்தை மறந்துவிடுவோம்
அவர்களிடம் உழைப்பு
நேரம்தவறாமை
சுறுசுறுப்பு
சகிப்புதன்மை
ஊக்கம்
இன்னும் இது போன்ற பல நல்ல பண்புகள் உள்ளது
அதை கண்டுபிடித்து நாமும் கடைபிடிப்போம்
அதுவும் ஒரே நாளில் அவர் வெற்றியடையவில்லை
இருபது வயதில் தொடங்கிய விதை
இன்றுதான் அவருக்கு கனிதரத்துவங்கியுள்ளது
மேலும் பணம் என்பது மக்கள் தொகை போல குட்டி போடக்கூடியது.அது உயிரணுக்கள் பல்கிப் பெருகுவதைப் போல வளரக்கூடியது.
ஒரு அணுவான கரு உயிராக உருவாக பத்து மாதமாகலாம் வளரமாலும் சாகலாம்
அதே போல
ஒரே ஒரு ரூபாய் விதை
பல நூறு கோடியாக சில ஆண்டுகலாம்
விதை முளைக்காமலேவும் போகலாம்
ஆனால் ஒரு விவசாயி
ஒரு நெல்லை ஒரு மூட்டையாக்க எப்படி
விடாமுயற்சியுடன் வாழ் நாள் முழுதும் போராடி வெல்கிறானே
அதே போலத்தான்
ஒரு மனிதன் செல்வனாவதும்
பொருளாதாரத்தில் சில துறைகள் வேகமாக வளரும்
சில மந்தமாக வளரும்
சில வளராமலே போகும்
எது எப்போது எப்படி ஏன் என்பது பலருக்கும் புரியாத புதிர் இதில் ஒரு துளி புரிந்தவர் கூட பலமடங்கு வெற்றி
காண்பதுண்டு.
பலரும் நான் உப்பு விற்க போனால் மழை வருது
உமி விற்க போனால் காற்று வருதுஎன புலம்பல் புல்லறிவாளர்
சிலரோ மழை வரும் போது குடை விற்பார்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வார் அவரே செல்வர்
அறிவிலே பல வகையுண்டு
ஒன்று செய்திகளை சேகரிக்கும் அறிவு
இது தெரிந்ததின் பட்டியல் என்பதே
அதைத்தாண்டி அவருக்கு வேறொன்றும் தெரியாது
இதை தாண்டி மனிதரைப் படிக்கும் அனுபவ அறிவு சிலருக்குண்டு
இது உணர்வறியும் உணர்வு
தன் உணர்வை மட்டுமல்ல
பிறர் உணர்வையும் உள்ளத்தையும் எண்ணத்தையும்
துல்லியமாக கணக்கிடத் தெரிந்தவர் சிலர்
பேச்சாலும்,எழுத்தாலும்,முகத்தாலும்,செயலாலும் மற்றவர்களது
மனதை எடை போட்டு விட முடியாது
இவை யாவுமே குழப்பி விடும்
ஆனால் அனுபவத்தால் மனிதரின் மனங்களை,குணங்களை புரிந்தவராலேயே வெற்றி பெற முடியும்
மனங்களை வென்று விட்டால்
புகழும் பொன்னும் தானே வந்து சேரும்
இதையும் தாண்டி சமுதாய அறிவு
ஒரு ஊர்,தெரு,மாநிலம்,தேசம் என ஒட்டு மொத்தாமாக மனிதரின் மனங்களைப் புரிந்தவராலே தலைவராக முடியும்
அரசியல் மட்டுமல்ல
ஆன்மீகம்
வியாபாரம்,
சேவை
மருத்துவம்,கலை
என பரந்த விரிந்த துறைகளில் சமூக எண்ண ஓட்டங்களை சரியாகப் படம் பிடித்து மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவராலே தான் உயர்ந்த இடம் பிடிக்க முடியும்
இதையெல்லாம் தாண்டி ஆன்மீக அல்லது உலகியல் ஞானம் என்றுள்ளது
இயற்கையை அல்லது இறைவனை அறிந்து வாழ்வின் ,காலத்தின் அளவிடமுடியாத சுழற்சியை,புதிர்களை புரிந்து ஏற்றுக்கொண்டு மனப்பக்குவமடைந்தவர் ஆர்ப்பாட்டமில்லாமல் தொடர்ந்து செயல்படுவார்.
வெற்றி தோல்விகளுக்கு கலங்காமல் ஆமை போல அங்குளம் அங்குலாமாக வென்று வாழ்க்கை பந்தயத்தில்பரிசு பெறுவார்.
பொருளாதாரத்தை நிர்வாகம் செய்ய நான்கு வித அறிவுதிறன்களும் வேண்டும்.
படிப்பறிவை விட அனுபவ அறிவும் அவசியமானது
பொறுப்புகளை நேரடியாக நிர்வாகம் செய்பவர் நிச்சயம் வெல்வார்.
இளமையிலேயே செல்வத்தின் சக்தியை
உணர்ந்தவருக்கே அதன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.
நிறைய பேர் வறுமையினால் வேதனையில் வாடுகிறார் அதன் விளைவாக செல்வர்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது உதவி கிடைக்காத போது அது பகையாக மாறுகிறது.
நாளடைவில் இந்த ஆழ்மன வெறுப்பு பணம் உடையவர்கள் மீது மட்டுமல்லாமல்பணத்தின் மீதே ஏற்படுகிறது .
பணமும் செல்வமும் குணத்தை மாற்றிவிடும்
என்ற எண்ணத்தை மனம் நம்புகிறது.
பல நேரங்களில் பண்பு, கருணை, இரக்கம்
அன்பு, ஆதரவு,அடக்கம்
ஒழுக்கம்
வாய்மை, தூய்மை, நேர்மை
இது போன்ற உயர் பண்புகள் பணம் உள்ளவரிடம் இருக்காது என ஆழ்மனம் உறுதி செய்கிறது.
இருந்தாலும் பணம் வந்தவுடன் இந்த பண்புகள் உதிர்ந்து விடும் என மனம் கற்பனை செய்கிறது.
சிறிதளவு உண்மை இருந்தாலும் பெரும்பாலும் இந்த கருத்துகள்
ஆதாரமற்றவை
வளமையிலும் நல்ல பண்புகளை பார்க்கிறோம்
வறுமையிலும் பொல்லாத குணங்களை காண்கிறோம்
கல்வியினால் மனிதர் பண்புகள் பக்குவபடுகின்றன
செல்வத்தினால் அதே போல நற்பண்புகள் வருமா?
என்பதில் சரியான உடன் பாடில்லை?
ஆனால் பணத்தால் குணம் மாறும் என்பது பலரது முடிந்த கருத்து
உண்மையோ பொய்யோ?
ஆனால் பணத்தின் மீது வெறுப்பு தேவையா
செல்வம், பொருளாதாரம் நமக்கு மட்டுமல்ல குடும்பத்துக்குமட்டுமல்ல,
ஊருக்கும் நாட்டுக்கும்
உலகத்திற்கும் மிக அத்வாசயமானது அல்லவா
இளமையில் இது ஆழ் மனதில் பதிய வேண்டும் உணவு,உடை, உறைவிடம், மருத்துவம்,சுற்றுபுறசுகாதாரம்,போக்குவரத்து என எல்லாவித வாழ்கை தரமும் முன்னேற செல்வம் தேவை இதை அடைய கல்வியும் உழைப்பும் முனைப்பும் ஆழ் மனதிலே கொள்கைகளாக பதிந்தால் குறிக்கோள்கள் உருவாகும் எண்ணுவது உயர்வாக வேண்டும் கலை கல்வி, வீரம்,விளையாட்டு,விஞ்ஞானம்
அரசியல், ஆன்மிகம், அறிவியல்,என பலதுறைகளிலும் குறிக்கோள்கள் பாராட்டபடுகிறது.
ஒருமுறை மாணவர்கள் இதை வரிசையாக சொல்லி கொண்டு வந்தார்கள் ஒருமாணவர் நான் பணக்காரனாக வேண்டும் என்று சொன்னபோது கல்லூரி கலையரங்கமே கலகலவென சிரித்தது
நான் பணக்காரனாக வேண்டும் என்று அந்த ஏழை மாணவன் அப்பட்டமாக உண்மையை சொன்னபோது அது கேலிக்குரிய செய்தியாகி விட்டது உண்மை எப்போதுமே சுடுகிறது
காமம் போல செல்வத்தின் மீதும் ஆசையென்பது கேவலம் என சமுதாயத்தில் ஒடுக்கப்படுகிறது
இது சரியானதா? முறையற்ற நெறியற்ற காமம்தானே தவறு அதை வெளிப்படையாகபேசுவது தணிக்கை செய்யப்படுவது கூட நியாயம் ஒவ்வொரு மனதிலும் அந்தரங்கமாக ஆழமாக செல்வத்தின் மீதுள்ள ஈர்ப்பு தவறா நிச்சயம் இல்லை.
மேலைநாடுகளில் இது மாறி வருகிறது எப்படி கோடீஸ்வரர் ஆவது என புத்தகம் எழுதுகிறார் படித்தவர் ஆனாரோ அது தெரியாது ஆனால் எழுதியவர் பலர் கோடீஸ்வரர் ஆனார்.
இதில் நல்ல செய்தி இந்த உந்துதல் தவறென்ற எண்ணம் மாறுகிறது வாய்மை, நேர்மை,தூய்மையுடன் உழைப்பு,ஊக்கம்,முனைப்புடன் முன்னேற்றம் காண்பது தவறாகாது
அடுத்தவர் இழப்பிலே நாம் லாபம் காண்பது தான் தவறு செல்வம் எல்லாம், லாபம் எல்லாம். நிச்சயம் பாவத்தில் வந்தது என்ற எண்ணம் நீடிப்பது தவறு
நல்லவர் செல்வராகவே முடியாது என்ற வாதம் ஆபத்து மூலதனம் முன்னேற்றத்துக்கு வழிகாணும்
சுரண்டல் இல்லாமல் ஊழல் இல்லாமல் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் செல்வம் சேர்ப்பதை ஊக்குவிப்பது நலம் நவீன பாரதத்தில் இந்த மாற்றம் வருகிறது இளமையில் இது பதிந்தால் இன்னும் நல்லது
கடின உழைப்பும் ஊக்கமும் முனைப்பும் சம்பாரிப்பதையும் சேமிப்பதையும் திட்டமிடுவதையும் நல்ல ஆரோக்யமான குணங்களாக ஆதரிக்க வேண்டும் தவறுதல்களும்,எல்லை மீறல்களும், வஞ்சங்ளும்,ஏமாற்றுதலும் இருந்தால் மட்டுமே கண்டிப்பும்,தண்டிப்பும் வேண்டும் கொள்கையளவில் மூலதனங்கள் உருவாவதை செல்வங்கள் சேர்வதை வளங்கள் பெருகுவதை வசதிகள் வளர்வதை கல்வியாளர்களும்,கலைகளும் கலாச்சாரமும் இழிவாக பேசுவதை மறக்க வேண்டும்
நல்வழியில் தனிப்பட்டவர்,குடும்பம் மட்டுமல்லாது கூட்டுறவுகள் நிறுவனங்கள் அரசுகள் என அனைவரும் செல்வமும்,வளமும்,வசதிகளும் பெற முயற்சிக்கும் ஆர்வங்களுக்கும் திட்டங்களுக்கும் ஆதரவு தர வேண்டும்
வழிகளில்தான் தவறே தவிர குறிகோள்களில் தவறில்லையே
No comments:
Post a Comment