வாய்ப்பு கிடைக்கும் போது மெளனமாய் இருப்பது குற்றம் வாய்ப்பு தராத போது கூச்சலிடுவது பெரும் குற்றம்
நாம் மகாத்மாவாக முயற்சிப்பது இருக்கட்டும்
நாம் மனிதனாகவாவது முயற்சி நடக்கட்டும்
ஒழுககம் என்பது நல்ல பழக்கங்களால் கட்டப்பட்ட கட்டிடமே
நற்குணம் என்பது நல்ல பண்புகளால் கட்டப்பட்ட கோபுரமே
சீரான கற்களை சுலபமாக அடுக்கலாம்
சிறப்பாக கற்றவரை சுலபமாக ஆளலாம்
தன் புலன்களை அடக்குபவனுக்கு சக மனிதர்களை ஆள்வது சுலபம்
தன் உணர்வை உணர்ந்தவனுக்கு சக இருதயங்களை அறிவது சுலபம்
நம்மால் சொல்ல இயலும் செயலையே சொல்ல வேண்டும்
பிறரிடம் சொல்ல இயலும் செயலையே செய்ய வேண்டும்
கைகள் அழுக்கு படாமல் திறமையாக வேலை செய்ய முடியாது
மனம் அழுக்கு பட்டால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது
அடுத்து வருபவர்க்கு நம் கால்கள் நடந்த தடம் பாதையாகும்
அடுத்த தலைமுறைக்கு நமது செயல்கள் நடந்த விதம் பாதையாகும்
எங்கே செல்கிறோம் என்பதைவிட எந்த பாதையென்பது முக்யம்
எங்கே செல்கிறோம் என்பதை விட எந்த பாதையென்பது முக்கியம்
ஒழுங்கும் ஒழுக்கமும் சுவர்க்கத்தின் வாசற் படிகள்
பொய்யும் புறமும் நரகத்துக்கு வழுக்கும் படிகள்
எப்படி வென்றோம் என்பது மட்டுமல்ல
எப்படி விளையாடினோம் என்பதும் குறிக்கப்படும்
ஒழுக்கம்
பண்பென்ற மரத்தில்தான் பதவியென்ற பழம் பழுக்கும்
ஒழுக்கமென்ற மரத்தில்தான் புகழென்ற பூ பூக்கும்
ஒழுக்கமிழந்த ஆண் தோலகன்ற நாகமென துடித்து சாவான்
ஒழுக்கமகன்ற பெண் நீரகன்ற மீனென துடித்து மடிவாள்
வீடும் நாடும் சுத்தமாக தனி மனித சுத்தம் வேண்டும்
ஊரும் உலகும் சுத்தமாக தனி மனித ஒழுக்கம் வேண்டும்
விளக்கை கைபிடித்து போனால் பாதைக்கு வழி தெரியும்
ஒழுக்கத்தை கடைபிடித்து நடந்தால் வாழ்வுக்கு ஒளி தெரியும்
ஒழுக்கம் என்பது குன்றிலேற்றி தீப ஒளியாய் நிறுத்தும் தீய
பழக்கம் என்பது கூண்டிலேற்றி குற்றவாளியாய் நிறுத்தும்
கடவுள் நம்பிக்கையில்லாத ஒழுக்கம்
நீதிபதியில்லாத நீதிமன்றம் போன்றது
காதல் உண்ர்வில்லாத காமம்
கண்ணாடியில்லாத விளக்கு போல
முத்தத்தின் குறிக்கோள் காதல்
யுத்தத்தின் குறிக்கோள் சமாதானம்
வியாபாரத்தின் குறிக்கோள் காதல்
கலாசாரத்தின் குறிக்கோள் ஒழுக்கம்
வயலின் வரம்புகள் நிலைத்தாலே நல்ல உணவுப்பயிர் தழைக்கும்
கற்பின் வரம்புகள் நிலைத்தாலே ந்ல்ல உறவுப்பயிர் செழிக்கும்
நல்ல பிரசங்கம் செய்பவன் நாலு பேரை திருத்துகிறான்
நல்ல வாழ்க்கையை வாழ்ந்தவர் நாடு முழுவதையும் திருத்துகிறார்
நடத்தை
வாலைப் பிடித்தால் அந்தநல்ல பாம்பை பிடிக்கலாம்
குணத்தை படித்தால் அவர் நல்ல மனத்தை கண்டுபிடிக்கலாம்
நேர்மையான நேர்வழி என்பது சுகமான தார்ச்சாலை
ஊழலான குறுக்குவழி என்பது சோகமான காட்டுப்பாதை
நாகரீகம் என்பது பகட்டு உடையில் காண்பதல்ல
நாகரீகம் என்பது பழகும் நடையில் காண்பதுவே
கண்ணின் அழகு கருணையிலே கண்ணின் மையில் இல்லை
பெண்ணின் அழகு நடத்தையிலே கழுத்தின் நகையில் இல்லை
கைப்பிடியில்லாத கத்தியும்
ஒழக்கமில்லாத செல்வமும் கொண்டவருக்கு ஆபத்து
கற்பிலாத பெண்மையும்
பயிற்சில்லாத முயற்சியும் கண்டவருக்கும் ஆபத்து
நல்ல நெறி நின்றவரும் நீதிநிலை நின்றவரும்
மக்கள் இதயம் கவர்த்தார்
அன்பு வழி நின்றவரும் பண்பு வழி சென்றவரும்
மக்கள் உள்ளம் கவர்ந்தார்
மனிதர் போடும் கணிதம் எல்லாம் பணத்துக்கும் பதவிக்கும்
புனிதர் நாடும் கண்ணியம் எல்லாம் புகழக்கும் பெயருக்கும்
தவறிய பின் திருந்துபவன் மனிதன்
தண்டித்தும் திருந்தாதவன் திருடன்
தவறே எதுவும் செய்யாதவன் புனிதன்
தவறுக்கே வருந்தாதவன் கயவன்
படித்து படித்து பாடம் நடத்துபவர் புகழ் வளரும்
நடித்து நடித்து நாடகம் நடத்துபவர் வேடம் களையும்.
கட்டுப்பாடு
எல்லைக்குள் மேயும் மாடுகள் வீடு வந்து சேரும்
எல்லையை மீறிய மனிதர்கள் காடு போய சேர்வார்
கடன்பட்டு உள்ளவனுக்கு அமைதி உடன்பாடு இல்லை
கட்டுபாடு உள்ளவனுக்கு அமைதி தட்டுப்பாடு இல்லை
கால்களில்லாதவருக்கு நடையில்லை
கருத்தில்லாதவருக்கு நல்ல நடத்தையில்லை
கண்களில்லாதவருக்கு ஒளியில்லை
கல்வியில்லாதவருக்கு நல்ல ஒழக்கமில்லை
காலமென்ற காற்றிலே
வாலறந்த பட்டமாய் திரிவதே மனித வாழ்வு
காகிதமென்ற வயலிலே
கருத்தென்ற மையை விதைத்து திருத்துவதே நல்ல கவிதை
நாவை அடக்காது பேசும் மொழி பிழை திருத்தப்படாத புத்தகம்
மனதை அடக்காது வாழும் வாழ்வு காடு தப்பிவந்த மிருகம்
தடுத்தும் பழத்தை தின்றதால் பைபிள் வந்தது
தடுத்தும் கோட்டை தாண்டியதால் இராமாயனம் வந்தது
நெருப்புக்கும் நீருக்கும் தடுப்பிருந்தால் அது நெருப்புக்கு நல்லது
நெருப்புக்கும் பஞ்சுக்கும் தடுப்பிருந்தால் அது பஞ்சுக்கு நல்லது
நடக்கும் போது கண் பார்த்து நடந்தால் வழி மாற மாட்டோம்
பேசும் போது நாவை அடக்கி பேசினால் பழியில் விழ மாட்டோம்
குடிக்கும் நீர் போல படிக்கும் நூலும் பதுகாப்பானதாக இருக்க வேண்டும்
நடக்கும் நடை போல நா கடக்கும் சொல்லும் பாதுகாப்பாக வேண்டும்.
சுயகட்டுபாடு
சாலை மாறாத வாகனமது ஊர் சேர்வது நிச்சயம்
பாதை மாறாத பண்பானன் வெற்றி பெறுவது சத்தியம்
மற்றவரை வரவிடாமல்
தடுக்க மட்டும் வேலிகள் அமைக்கப்படவில்லை
நாமும் எல்லை மீறாமல்
தடுக்க என்றே வேலிகள் அமைக்கபட்டன
தீய காற்று வரவிடாமல் சன்னலை சாத்து
தீய எண்ணங்கள் வரவிடாமல் மனதை பூட்டு
தீய வாசனையைத் தவிப்பதே மூக்கு எனப்படும்
தீய வார்த்தையைத் தவிர்ப்பதே நாக்கு எனப்படும்
மடக்க முடியாத குடையும் அடக்கம் இல்லாத தலையும் அல்லல் தரும்
முடக்க முடியாத நாவும் அடக்க முடியாத சினமும் அல்லல் தரும்
ஒழுக்கம்மென்பது சிலருக்கு உறக்கம் போல சுலபமான பழக்கமாகிறது
ஒழுக்கமென்பது சிலருக்கு இறுக்கம் போல கடுமையான புழு க்கமாகிறது
மனம் என்பது குடத்து பால் போல சிறு துளி நஞ்சானாலும் பாழாகும்
கண்ணுக்கு கடிவாளமென்பது ஒழுக்கம்
வாய்க்கு சல்லடையாவது பண்பு
காலுக்கு பாதையாவது நற்பழக்கம்
கைகளுக்கு உறையாவது ஈகை
கரையில்லாத நதியெல்லாம் காட்டாற்று வெள்ளமாகும்
வரையில்லாத மதியெல்லாம் காட்டுவிலங்கினும் கீழாகும்
விரும்பி யாரும் தின்னும் கரும்பு அதை விரும்பாததது உன் குணமே
விரும்பி யாரும் போற்றும் கற்பு அதை போற்றாதது உன் குற்றமே
ஒழுக்கமில்லாத ஆணால் ஒரு குடும்பமே கலவரமாகும்
ஒழுக்கமில்லாத பெண்ணால் ஒரு ஊரே கலவரமாகும்
பட்டினி என்று அறியாதவனுக்கு பசியின் கொடுமை புரிவதில்லை
பத்தினி பெண்ணை பார்க்காதவனுக்கு கற்பின் அருமை பரிவதில்லை
காமுகனின் கண்களும் தானே தாழு மே கற்பின் ஒளியால்
நல்ல பூட்டுகள் ஒரு சாவிக்கு மட்டுமே திறக்கின்றன
கள்ள சாவிகள் பல பூட்டுகளையும் திறக்கின்றன
தூய காதலுக்கு பெண்மை தரும் பரிசு கற்பு
தூய கற்புக்கு ஆண்மை தரும் பரீட்சை நெருப்பு
கற்ப்பென்பது கை விலங்கல்ல
அது தாய்மையின் வாய்மைக்கு கவசம்
கருனையென்பது கை செலவல்ல
அது மறுமையின் வளமைக்கு முன்பனம்
கற்பு தெய்வத்தின் கணவனும் காவியத்தின் தலைவனாவான்
அற்ப மங்கையின் கணவனோ கள்ளுக்கடையில் திருடனாவான்
கற்பு என்பதும் கர்நாடக இசை போல மறக்கப்படுமோ?
கருணை என்பது கர்நாடக வழக்கம் போல மறைந்து போகுமோ?
காதல் என்பது கைக்குட்டை போல விட்டு விடலாம்
கற்பு என்பது மார்புத்துணி போல விட்டு விட முடியாது
மானம்
தவறுகளை மறைக்கும் போது அவமானம் சேரும்
தவறுகளை ஏற்று மாறும் போது தன்மானம் வரும்
உடல் ஏற்ற ஆடையின் ஙால்களே மானம் காக்கும்
உள்ளம் கற்ற அறிவின் ஙால்களே தன்மானம் காக்கும்
எடை நிறைந்தவர்கள் கால் தவறி விழந்தால் காயம் பெரிதாக இருக்கும்
புகழ் நிறைந்தவர்கள் கால் தவறி நடந்தால் பழி பெரிதாக இருக்கும்
உப்பு நீரில் கரையும்
கர்வம் தோல்வியில் கரையும்
கானம் காற்றில் கரையும்
மானம் காமத்தில் கரையும்
பனியினால் மலையை மறைக்க முடியுமே தவிர அகற்ற முடியாது
பழியினால் புழதியைக் கிளப்ப முடியுமே தவிர புகழைமாற்ற முடியாது
காமம் மிருந்தவனுக்கு வெட்கம் கிடையாது
கருனை இல்லாதவனுக்கு துக்கம் கிடையாது
கள்ளம் மிகுந்தவனுக்கு உறக்கம் கிடையாது
கல்வி இல்லாதவனுக்கு எதுவும் கிடையாது
நிலத்தில் சிந்தி விட்டபின் நீரை எடுக்க முடியாது
குணத்தில் கரை பட்டபின் உலகின் வாழ முடியாது
சுய ஒழக்கம் என்பது ஒரு மனிதனுக்கு பண்பும் பதவியும் தரும்
தன் மானம் என்பது ஒரு ஆன்மாவுக்கு அழகும் புகழும் தரும்.
கண்ணியம்
கண்ணியம் எனபது நம் எண்ணங்களின் தூய்மை
புண்ணியம் என்பது நம் செயல்களின் தூய்மை
நினைப்பது ஒன்று சொல்வது ஒன்று
செய்வது மற்றொன்று அது தீயவர் பழக்கம்,
நினைப்பதும் ஒன்றே சொல்வது ஒன்றே
செய்வதுவும் ஒன்றே அதுவே நல்லவர் ஒழக்கம்
புண்ணியம் செய்தவருக்கு பூ மாலை உண்டு
கண்ணியம் உள்ளவருக்கு புகழ் மாலை உண்டு
வறுமையிலே தவித்திருப்பினும்
பிறர் தாகம் தீர்ப்பது புண்ணியம் எனப்படும்
கன்னியொடு தனித்தினிருப்பினும்
காமம் தவிர்ப்பது கண்ணியம் எனப்படும்
புண்ணியம் என்பது வயிறு பசித்தவருக்கு உணவு கொடுப்பது
கண்ணியம் என்பது நம்பி வந்தவரின் கற்பு காப்பது
பானையில் உள்ள கீறலை தட்டும் ஒலியால் அறியலாம்
மனிதனிடம் உள்ள குறையை பேசும் பேச்சால் அறியலாம்
வாழம் போது பின் வரும் கூட்டத்தின் அளவு
உன் பணத்தை காட்டும்
சாகும் போது பின் வரும் கூட்டத்தின் அளவு
உன் குணத்தைக்காட்டும்
கற்புடன் கட்டுபாடுடன் வாழ
அன்னை போதிக்கிறாள்
கண்ணியத்துடன் கட்டுபாட்டுடன் வாழ
ஆண்டவன் போதிக்கிறான்
ஒரு ஒட்டை என்பது கப்பலையே கவிழ்த்து விடும்
ஒரு பொய் என்பது கண்ணியத்தை கலைத்து விடும்.
சுபாவம்
வாய்ப்பு கிடைக்கும் போது மெளனமாய் இருப்பது குற்றம்
வாய்ப்பு தராத போது கூச்சலிடுவது பெரும் குற்றம்
நல்ல உருவம் படைத்த மேனிகள் நிறம் மாறலாம்
நல்ல உள்ளம் படைத்த ஞானிகள் நிறம் மாறுவதில்லை
நாவிலே விடம் நகையோ வேடம் நெஞ்சிலே மூடம் நெறியிலே நாடகம்
நாவிலே தேன் நகையோ பால் நெஞ்சிலே மலர் நெறியிலே நெருப்பு அறிநர்க்கு
மனம் என்றால் சிந்திக்க வேண்டும்
பணம் என்றால் சுழல் வேண்டும்
குணம் என்றால் சிரிக்கவேண்டும்
சினம் என்றால் அடக்க வேண்டும்
வானுக்கு ஒரு நிறம்
மண்ணுக்கு பல நிறம்
மனிதருக்கு பல குணம்
புனிதருக்கு ஒரே குணம்
தொட்டாலே மணக்கும் அன்பாளன் பண்பும் நட்பும்
நினைத்தாலே இனிக்கும் அறிவாளர் அன்பும் உறவும்
துர்மணம் உள்ள காற்றை மனிதர் விரும்புவதில்லை
துர்குணம் உள்ள மனிதனை விலங்கு கூட விரும்புவதில்லை
அகன்ற வாயும் நீண்ட நாவும் பகை ஙழையும் பாதைகள்
அலையும் மனதும் அடங்காததலையும் பழி பறிக்கும் பள்ளங்கள்.

No comments:
Post a Comment