இயற்கை பாடம் கற்றுக் கொடுக்காமல் விடாது.
1.ஆரம்பக் கன்னியும் கடைசிக் கன்னியும் உள்ள சங்கிலி இயற்கையின் கையில் நமக்குத் தெரியத்தான் மாட்டேன் என்கின்றது.புவி எங்கும் மனித சமூகம் வாழத்தளைப் பட்டபோது அவர்கள் புவியின் பல்வேறு பாகங்களில் வாழ்ந்து கொண்டு வந்தாலும் ஏதோ ஒன்று அவர்களை இணைத்துத் தான் வைத்திருந்திருக்கின்றது .பண்டைய காலங்களில் மற்ற நாட்டுச் செய்திகள் மற்றொரு நாட்டிற்கு தவழ்ந்துதான் வந்தது.சில தனி நபர்களும் குழுக்களும் இடையறாது ஒரே இடத்தில் நிலையாமல் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டே இருந்திருக்கின்றார்கள் இவர்களால் கலாச்சாரங்களும் மற்ற விடயங்களும் ஒரு இனத்திலிருந்து, நாட்டிலிருந்து மற்றொரு இனத்திற்கும் நாட்டிற்கும் பரப்பப்பட்டிருக்கின்றன.
2.மனித இனத்தின் தாய் வழிக் கோட்பாடு, தந்தை வழிக் கோட்பாடுகள்,சமூக ஒப்பந்தங்கள் நாம் தற்காலத்தில் படிப்பதற்காக அக்காலத்தில் செயல்முறையில் இருந்து வந்துள்ளது. முதன் முதலில் புவியின் பல்வேறு இடங்களிலும் மனித இனங்கள் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தங்களது சொந்தக் குழு உணர்வினாலும் ,அறிவினாலும் மட்டுமே ,முதுகெலும்பை நிமிர்த்தக் கற்றுக் கொண்டான்,குடும்பம்,சமூகம்,ஒருவனுக்கு ஒருத்தி,சமூகக் கட்டுப்பாடு,மொழி,கலை,ஆகியவற்றை எந்த புறக் கற்றலும் இல்லாத நிலையில் ஒவ்வொரு குழுவும் தானாக சுயமாகவே கற்றும் அதனைக் கடைப்பிடித்தும் வந்திருக்கின்றது.
3.எந்தக் கட்டணமும் காத்திருப்பும் இல்லாமல் இயற்கை சொல்லிக் கொடுப்பதால் தான் நாம் அதனைக் கறுக் கொள்ள ஆர்வப்படுவதில்லை.ஏறக்குறைய புவியில் மனித இனம் தற்போது தான் கண்டு பிடித்த காட்டுவாசி மனித இனங்களை எடுத்துக் கொண்டாலும் அவர்களும் முதுகெலும்பை நிமிர்த்தியும்,தங்கெளுக்கென ஒரு குடும்பம்,மொழி,கலாச்சாரம்,வழிபாடு,சட்டம்,தண்டனை,குற்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.இந்தப் பண்புகள் கண்டிப்பாக வேறு இனத்தின் வழியாகவோ குழுவின் வழியாகவோ இவர்கள் கற்றுக் கொண்டதல்ல.
4.மேலும் கடவுள் கோட்பாடும் ,குற்றக் கோட்பாடுகளும்,சமூகக் கோட்பாடுகளும் ,கட்டுப்பாட்டுக் கோட்பாடுகளும் ,அறிவியல் சிந்தனைகளும் ஏறக்குறைய எல்லா இனத்தவர்களும் ஒரே காலகட்டத்தில் கடைப்பிடித்து வந்திருக்கின்றார்கள்.இது கண்டிப்பாக ஒரு இனத்திடம் இருந்து மற்றொரு இனம் கற்றுக் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை.புவி வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கால அளவில் குறிப்பிட்ட இடத்தில் வாழும் மனித இனங்களுக்கு இப்படிப்பட்ட அறிவுகள் இயற்கையாலேயே அவ்வப்போது கற்பிக்கப்பட்டு வந்துள்ளது.
5.ஒரு காட்டுவாசி சமூகத்தை எடுத்துக் கொள்வோம் அவர்களது பழக்க வழக்கங்கள் இன்றும் மற்ற கலாச்சாரத்தாலும்,மற்ற இன நடவடிக்கைகளாலும் முழுவதும் பாதிக்கப்படவில்லை என்றாலும் அட்தனது தனி அடையாளத்தைக் காத்து வைத்திருக்கின்றது.அவர்களது வாழ்க்கையை நாம் பார்த்தோம் என்றால் சமூகத்தின் அடிப்படை குணாதிசயங்களான ,குடும்ப வாழ்வு ,மொழி ,பாசம்,பழக்க வழக்கம்,சடங்குகள்,கடவுள் பக்தி,சமூகக் கட்டுப்பாடு ஆகியவற்றை யாருடனும் தொடர்பு வைத்து கற்றுக் கொள்ளாமல், இயற்கையாகவே கற்று வைத்திருக்கின்றனர்.
6.அதனால் தான் சொல்லப்படுகின்றது இந்த உலகில் உள்ள அனைத்து கலை,அறிவியல்,சட்டம்,கொள்கைகள்,கன்டுபிடிப்புகள் அனைத்திற்கும் ஆசிரியர் இயற்கை என்று.உலகில் உள்ள அணைத்து சிறப்பு அறிவாளர்களும் இல்லையென்றாலும் இயற்கை அப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு தனது அறிவைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விடும்.ஒரு தனி மனிதனின் மனதிலோ அல்லது ஒரு சமூகத்தின் மனதிலோ ஏற்படும் சிந்தனைகள் ஒரு இழையாக மற்ற மனிதர்களுக்கும் மற்ற சமூகத்திற்கும் இயற்கையால் கடத்தப்பட்டு சமநிலைப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது .
7.ஒரு மனித இனத்தின் கொள்கைகளையும் பழக்கங்களையும் தத்துவங்களையும் ,அறிவியல்களையும் மற்ற மனித இனத்திற்குக் கடத்துவது என்பது மனித இனத்தின் வளர்ச்சிக்காக என்று இல்லை இது ஒரு இயற்கையின் சமநிலை விதி .எந்த ஒரு தனி மனிதனின் மனிதிற்குள்ளும் எவ்வளவு அழுத்தமாகவும் எவ்வளவு நம்பிக்கையுடனும் ஒரு கொள்கையோ ,தத்துவமோ ,பொருளோ ,சிந்தனையோ உருவாக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் அந்த சிந்தனை அந்த நபருடனோ அவர் சார்ந்த இனத்துடனோ முடிவடைந்து விடுவதில்லை.அது இயற்கையின் சமநிலை விதி என்னும் சங்கிலி வழியாக அணைவருக்கும் அணைத்து சமூகத்திற்கும் கடத்தப்படுகின்றது .
8.இந்தக் கடத்தப்படல் விதியானது புவியில் வாழும் மனித சமூகம் முழுக்கவும் ,அதாவது கடைசி மனிதன் வரை அது கடத்தப்பட வேண்டியிருக்கின்றது.இது இயற்கைக் கட்டாயம் இயற்கையின் சமநிலைக் கோட்பாடு .அது அவ்வாறு கடை மனிதன் வரைக்கும் அல்ல இயற்கை அமைப்பின் ஒவ்வொரு அனுக்களுக்கும் கடத்தப்படுகின்றது.அதே போல ஒரு சமூகத்தால் எவ்வளவு அழுத்தமாகவும்,நம்பிக்கையுடனும் ஒரு கொள்கையோ,தத்துவமோ,போருளோ ,சிந்தனையோ உருவாக்கபப்டுகின்றதோ அதுவும் இப்படித்தான் அதன் கடைசி சமூகம் வரைக் கடத்தப்படுகின்றது.அது கடத்தப்படும் வேகம் கடத்தப்படும் கொள்கை பற்றிய மற்ற மனிதர்கள் மற்றும் சமூகத்தின் ஆழமான அழுத்தங்களுக்கும் ,நம்பிக்கைகளுக்கும் உட்பட்டே இருக்கும்.
9.இப்படி சாத்வீகமாக கடத்தப்பட முடியாத காலகட்டங்களில் இயற்கையினாலேயே போர்கள் உருவாக்கப்படுகின்றன தனது கடத்தல் விதியினை முழுமை பெறச் செய்வதற்காக.ஒரு மனிதனோ சமூகமோ எண்ணக் கூடிய எண்ணங்கள் கடைசி மனிதன் வரைக்கும் மலைவாசி சமூகம் வரைக்கும் பரப்பப்படாமல் இருக்க முடியாது.இது ஒரு இயற்கையின் சூத்திரம்.இதில் இருந்து இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும் காணமுடியாத உணரும் ,உணரமுடியாத பொருட்கள் அணைத்தும் இணைக்கப்பட்டுள்ளன.இந்த இயற்கையின் சமநிலை விதியினை உணர்ந்து கொள்ள பல நாடுகளின் வரலாறுகளை அறியும் போது ஒரு நாட்டின் கலாச்சாரமும் பண்பாடும் இந்த இயற்கைச் சமநிலைப் படுத்தும் விதிகளுக்குட்பட்டே இதனை அறியாமலேயே மற்ற நாடுகளுக்குக் கடத்தப்பட்டு வந்திருக்கின்றது.இந்த விதிக்குட்பட்டு நாமும் நமது வாழ்வை அமைத்துக் கொள்வோம்.இயற்கை நமக்கு எதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதைக் கிரகிப்போம்.
No comments:
Post a Comment