மற்றவர்களின் சக்தியை உறிஞ்சுங்கள்
1.மற்றவர்களிடம் இருந்து சக்தியை பெருவதில் தான் நம் வாழ்க்கையின் வெற்றி இருக்கின்றது.அது எப்படி ?மக்கள் சக்தியை ஒட்டாக பெறுபவர் தலைவர் ஆகின்றார்,உங்கள் கவனத்தை ,காலத்தை எவ்வளவு தூரம் யாரெல்லாம் ஈர்க்கின்றார்களோ அவர்கள் எல்லாம் அந்த துறையில் வெற்றி பெறுகிறார்கள் .
2.நீங்கள் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கின்றீர்கள் உங்களிடம் இருந்து அந்த நிகழ்ச்சி சக்தியை எடுக்கின்றது ,இப்படி எத்தனை பேரிடம் இருந்து சக்தி எடுக்கப்படுகிறதோ அத்தனை வெற்றி அந்த நிகழ்ச்சிக்கு இருக்கின்றது ,இப்படி ஒவ்வொரு துறையிலும் யாரெல்லாம் மற்றவர்கள் கவணத்தைத் தங்கள் பக்கம் திருப்பி அவர்களது சக்தியை உறிஞ்சி கொள்கிறார்களோ அவர்கள் இந்த சக்தியின் சூத்திரத்தை அறிந்தவர்கள் .
3.ஒரு சின்ன டெஸ்ட் நீங்கள் இருக்கும் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு குழு ஒன்று இருக்கும் ,முதலில் உங்களது மற்றவர்களது சக்தியை உறிஞ்சும் செய்கையை இவர்களிடம் இருந்து ஆரம்பியுங்கள்.முதலில் அவர்களது கவணத்தை உங்கள் பக்கம் எவ்வளவு நேரம் ஈர்க்க முடிகிறது என்று பாருங்கள் ,முடிந்த அளவிற்கு உங்களை மற்றவர்கள் எப்படி நினைக்க வேண்டும் என்று கற்பனை செய்கிறீர்களோ அந்த கற்பனைக்கு ஏற்றார் போல அவர்களிடம் பேசுங்கள் அவர்களை நம்பச் செய்யுங்கள் .
4.நீங்கள் ஒரு பேச்சாளர் போல மற்றவர்கள் நினைக்க வேன்டும் என்றால் அதற்கு ஏற்றார்போல ஒரு பெரிய பேச்சாளன் போல நடவுங்கள் ,அவர்களை நம்பும் படி செய்யுங்கள் .நீங்கள் எத்தனை பேரை இப்படி நம்பும் படிச் செய்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல உங்கள் சக்தி பேச்சாளர் என்ற முறையில் கூடி வரும் .
5.அதன் பிறகு ஒரு கூட்டத்தில் நின்று பேசி அவர்களது கவணத்தை உங்கள் பக்கம் திருப்பப் பாருங்கள் .மிகப்பெரிய அரசியல்வாதிகள் எல்லோரும் கூட்டம் போட்டு பேசி நம் கவணத்தை அவர்கள் பக்கம் திருப்பி மிகப்பெரிய சக்தியை பெற்று சாதனைகள் புரிகின்றார்கள்.
6. எத்தணை பேரை நீங்கள் கவர்ந்தீர்களோ அந்த அளவிற்கு உங்கள் மனோ சக்தி கூடி வரும் ,இந்த சக்தியை நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மற்ற செயல்களுக்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள் .இப்படி மற்றவர்களிடம் இருந்து சக்தியை பெறுவது எப்படி என்று எண்ணிக்கொண்டே இருங்கள் .எல்லாமும் உங்களைத்தேடி வரும் .
7.இந்த சக்தியை பேச்சாளர் என்ற முறையில் அல்லாமல் எல்லாநிலைகளிலும் உபயோகப்படுத்தலாம்.
இதனைப் படித்து கொஞ்ச நேரமேனும் உங்கள் கவணம் இந்த கட்டுரையின் மேல் இருந்தால் கொஞ்சம் உங்கள் சக்தியை நான் உறிஞ்சி விட்டேன் என்று பொருள்.
No comments:
Post a Comment