Sunday, February 23, 2014

புரியாத புதிர்கள்,இந்த இரண்டுங்கெட்டான் குழந்தைகள்

புரியாத புதிர்கள்,இந்த இரண்டுங்கெட்டான் குழந்தைகள்

ஒரு இளைஞனை சமாளிக்க எல்லையற்ற‌ பொறுமை வேண்டும் என்பார்கள்

நிச்சயமாக, தேசத்தின் தந்தை கூட‌ ஒரு வழிமாறிய வாலிப மகனை சமாளிக்க திணறியதுண்டு சத்ய சோதனையில் வென்றவர் கூட‌ மகனின் வாலிப சோதனையில் தோற்று விட்டார்கள்

ஆங்கிலம் மேனேஜ்மென்ட் என்று சொல்வதை   நாம் மேய்ப்பது என்று சலித்து கொண்டு சொல்கிறோம்

வழி நடத்துவதில் இரண்டு விதம் ஒன்று வாத்துகளை போல கோல் கொண்டு பின்னால் இருந்து ஓட்டி கொண்டு போவது மற்றது வீரர்களை நடத்துவது போல‌ தளபதியாய் முன் நின்று கம்பீரமாக செல்வது

இந்த இரண்டு மேனேஜ்மென்டும் தோற்றுபோகுமிடம் பெற்றோர் பிள்ளைகள் உறவுதானே?

இரு கைபிடித்து கூட்டிச் செல்லும் குழந்தை போல‌ தோளை அனைத்து நடத்திச் செல்லும் நண்பன் போல‌ நுட்பமான நுணுக்கமான அனுகுமுறைதான் ஆபத்தில்லாதது

முன்னால் போனால் காணாமல் போகிறார்கள் பின்னால் போனால் போக்கு காட்டுகிறார்கள் புரியாத புதிர்கள்,இந்த இரண்டுங்கெட்டான் குழந்தைகள்

No comments:

Post a Comment