Saturday, February 1, 2014

தோல்வி கண்டு கலங்காதீர்கள்

தோல்வி கண்டு கலங்காதீர்கள் 

* மனிதன் அனுபவிக்கும் ஒவ்வொரு உணர்வும் அவனது மனதை பொறுத்துதான் அமைகிறது. பணம் நிறைந்த ஒருவனது மனம், தான் ஏழையாக இருப்பதாகவும், இப்போது இருப்பதில் திருப்தி இல்லை என்றும் எண்ணினால், இல்லாதவனைப் போலவே தான் தன்னை உணர்வான். ஆகவே, மனதை எப்போதும் திருப்தி உணர்வு கொண்டதாக வைத்திருங்கள்.

* ஒருவன், மற்றொருவனால் ஏமாற்றப்படும்போது மனம் உடைகிறான். அப்போது ஆறுதல் சொல்ல யாரும் இல்லாவிட்டால், தனக்கு உதவிக்கு யாரும் இல்லையே என்று எண்ணி வருந்துகிறான். இது சரியான எண்ணமல்ல. ஏனெனில், உலகில் ஆதரவற்றவர்கள் என்று யாருமே இல்லை. ஒவ்வொருவருக்கும் இறைவன் ஆதரவு தருபவனாகவே இருக்கிறான். உங்களை யார் கைவிட்டாலும் அவன் நிச்சயமாக கைவிடமாட்டான் 

யோகானந்தர்

* மனிதர்கள் இறைவனின் வடிவங்களே. அவர்கள் யாராலும் வெற்றி கொள்ள முடியாத அளவிற்கு திறமையுடையவர்களாக இருக்கின்றனர். எனவே, பெரிய தோல்வி வந்தால்கூட அதற்காக கலங்காதீர்கள். ஏனெனில், நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்பதில், உங்களைவிட இறைவன்தான் அதிக ஆர்வமுள்ளவனாக இருக்கிறான்.

* பணம் இருந்தால் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்றும் எண்ணாதீர்கள். பணக்காரர்கள் வெளியில் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தோன்றினாலும், அவர்களுக்குள்ளும் பல துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். ஆகவே, உங்களுக்கு நிகழ்பவற்றை இன்பமாகவே எடுத்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment