தீங்கு செய்பவர்களை இப்படியும் ஒழித்துக் கட்டலாமே
1.நாம் எல்லோரும் ஏறக்குறையப் பழக்கப்பட்டிருகின்றோம் தீங்கு செய்தவர்களுக்குத் தீங்குதான் செய்ய வேண்டும் என்று.ஆனால் அற நூல்கள் சொல்லுகின்றன மன்னித்து விடு இன்னா செய்தாரை உனக்குத் தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்து விடு என்று.இது நடப்பு வாழ்வில் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கின்றது .ஒருவர் நமக்குச் செய்த தீங்கை மனதில் வைத்து அவருக்கும் தீங்கு செய்தல் என்னும் பழிவாங்குதல் என்னும் செயலை எல்லா மனிதர்களும் செய்யலாம்.அவர் செய்த தீங்கை மன்னிக்கும் செயலைச் செய்பவர்கள் அறிவாளிகள்.மற்றவர்கள் செய்த தீங்கை உதாசீனப்படுத்துபவர்கள் ஞானவான்கள்.எல்லோரும் ஞானவான்களாகத்தான் முடியுமா?
2.நிலத்தில் ஒரு விதையைப் போட்டால் எப்படி அது தனக்குத் தேவையான சத்தை மட்டும் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளில் இருந்து கிரகித்துத் தன்னை வளர்க்கின்றது. அதன் வளர்ச்சியில் நிறைவு பெறுகின்றது . அப்படித்தான் நமது மனம் என்னும் விளைநிலத்தில் ஒரு எண்ணத்தை நாம் விதைத்து விட்டோம் என்றால் அது நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளில் இருந்து நாம் எந்த வகையான விதையை விதைத்தோமோ அதன் சத்துக்களை தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளில் இருந்து கிரகித்து வளர ஆரம்பித்து விடும்.அதன் இயற்கைப் பணியை எந்தவிதத் தவறுகையும் இல்லாமல் செய்து முடிக்கும். விதை விதைப்பது மட்டும் நமது கட்டுப் பாட்டில் உள்ளது.
3.மற்ற செயல்கள் எல்லாம் நம்மை அறியாமலேயே தனது இயல்பான வளர்ச்சியில் காரியங்களை ஆற்றுகின்றது.நாம் விதைத்த விதையின் சத்தை ஒத்த, சத்தை தனக்கு வெளியில் இருந்து கவர ஆரம்பித்து விடும்.நாம் நமக்குத் தீங்கு செய்தவர்கள் மீது வெறுப்பும் ,குரோதமும்,அவர்கள் கெட்டுப் போக வேண்டும் என்று எந்த எண்ணத்தை மனதில் நம்மை அறியாமலேயே விதைகின்றோமோ அது நம்மை நோக்கி நம்மில் கவரப்பட்டு நமது எண்ணங்களுக்கு வலு சேர்த்துக் கொண்டே இருக்கும்.அப்படி கவரும் போது நாம் எவ்வளவு கோபமும்,குரோதமும் கொண்டு விதை விதைத்தோமோ அவ்வளவு வீரியமாக வளர்ந்து நமக்குத் தான் துன்பத்தை ஏற்படுத்தும்.
4.பொதுவாக நமக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்கள் மீது நாம் கோபம்,குரோதம்,பழி உணர்ச்சி போன்ற உணர்வுகளை நாம் எண்ணும் படியாகத் தனது காரியத்தையோ,சொற்களையோ சொல்லுவார்கள். அதன் பின்பு அது அவருக்கும் தெரியாது அவர்மேல் நாம் கொள்ளும் உணர்வு அவரைப் பற்றிய எண்ணங்களை விதைக்கும் நமக்குள் தான் விளையப் போகின்றது என்று .அவரும் நம் மேல் இதே கோபம் குரோதம் போன்ற உணர்வுகளை அவரது மனதில் விதைத்தால் எந்த உணர்வு அழுத்தமாக யார் மனதில் விளைவிக்கப்பட்டதோ அது எதிராளியின் மனதின் மன அழுத்தத்தோடு உராய்வு செய்து அதிக அழுத்தம் கொண்டவர் விதைத்த எண்ணம் கொண்டவருக்கே அதிகத் தீங்கு விளைவிக்கும்.
5.அப்படி என்றால் நம்மை ஒழித்துக் கட்டி அவர்கள் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாம் இரை ஆக வேண்டியது தானா?இப்படிக் கண்டிப்பாக எண்ணத்தேவையில்லை.எப்போதெல்லாம் நமது மனதில் கோபம் ,தாபம்,குரோதம்,பழி வாங்கும் உணர்வு இப்படி உணர்வுகளை நமது மனதில் ஏற்படுத்தி அது நமது மனதில் விதைக்கப்பட்டு வளர்ந்து நமக்கே தீங்கு விளையட்டும் என்று யார் நினைக்கின்றார்களோ,அவர்களது முகத்தை நமது மனக் கண்ணில் கொண்டு வந்து அவர்கள் மீது நாம் மிகுந்த அன்பை வெளிப்படுத்துவதாக எண்ணிக் கொள்ள வேண்டும்.
6.நமக்கு கோபத்தை ஏற்படுத்தியவர்கள் முகத்தையும் எந்த அவர்களது உணர்வு நமக்குக் கோபத்தை ஏற்படுத்தியதோ அதனை நமது மனக் கண்ணில் நினைத்து அந்தக் குறிப்பிட்ட நபர் நன்றாக இருக்க வேண்டும்.அவர் மீது நமது அன்பு கத்தை கத்தையாக இறங்க வேண்டும்.அவர் நம் மீது கொண்டுள்ள தவறான நம்பிக்கைகள் இல்லாமல் ஆகி அவர் நமது தரப்பின் நியாயத்தை உணர கடவுள் அவருக்கு அருள வேண்டும் என்று அவர் மனதை நினைத்து மன்தில் வேண்டுங்கள்.
7.இதனால் அவரது தவறான தூண்டுதலால் நமது மனதில் எப்படிப்பட்ட எண்ண விதைகள் விதைக்கபப்டுகின்றன என்று நீங்களே கவணமாக கணக்கெடுங்கள். நமது மனதில் மேலே சொன்னபடி அன்பு எண்ணங்கள் நினைக்கப்படும் போது நமது மனதால் கவரப்படும் எண்ணங்கள் அன்பு,மன்னிப்பு,நல்லதை வேண்டுதல் என்று தான் இருக்கும்.இந்த எண்ணங்களும் எந்த தவறான எண்ணங்களையும் கவராது அதன் விதையை ஒட்டிய அன்பு,மன்னிப்பு ,கருணை ஆகியவற்றாஇ மட்டும் கவரும் .இதனால் நமக்குக் கலக்கமான ,மன வருத்தமான எண்ணங்களை உருவாக்கியவர்களால் நமக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.அவரும் இந்த இயற்கையின் சூத்திரத்தை உணர வேண்டும் என்று எண்னுவோம்.
8.இதனால் நமக்கு எந்தக் கால கட்டத்திலும் யாராலும் தீங்கு என்பதையே செய்ய இயலாது.நமது வாழ்வு முன்னேற்றக் கட்டத்தை நோக்கித் தானாகவே செல்ல ஆரம்பித்து விடும்.நமது வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் நமது மனதைப் பாதிப்பவர்கள் மீது அன்றைய தினமே இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி நமது மனது என்னும் விளை நிலத்தைத் தூய்மைப் படுத்தி வைப்போம்.நமது வேண்டுதல் சுருக்கமாக பின் வருமாறு இருக்கலாம் நாம் யாரால் பாதிக்கப்பட்டிருக்கின்றோமோ அவரது முகத்தை நமது மனக் கண்ணில் கொண்டு வந்து
"இவர் நன்றாக இருக்க வேண்டும்"
"இவர் மேல் நான் அன்பு செலுத்துகின்றேன்"
"இவர் என் தரப்பு நியாயத்தைத் தெரிந்து கொள்ள இறைவன் அவருக்கு அருள் புரிய வேண்டும்"
"இவர் மேல் இறைவனின் அருள் இறங்க வேண்டும் "
என்று அவரை மனக் கண்னில் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் நினைக்கும் போது அவர் நமது மனதில் உருவாக்கிய எண்ணத்தால் எந்தத் தீங்கும் நமக்கு விளையாது.நாமும் இந்தக் கலக்கம் தந்த நபரையும் சூழ்நிலையையும் எளிதில் மறந்து விடுவோம்.
9.இந்த மனநிலையைதினம் தோறும் நமது குடும்ப உறுப்பினர்களில் தொடங்கி ,நாம் அன்றாடம் நமது பயணத்தில்,பொது இடங்களில்,அலுவலகத்தில்,இப்படி எப்போதெல்லாம் மனிதர்களுடன் உறவு கொண்டு வருகின்றோமோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம்.நமக்கு ஒரு கேடு அல்லது தீங்கு பற்றி நல்ல பாடம் வேண்டும் என்றால் இவ்வாறு செய்ய வேண்டியதில்லை.இந்தப் பதிவைப் படித்ஹ்ட பின்பு நீங்கள் என்னைத் தங்களது மனக்கண்ணில் நினைக்காமல் இருந்தால் சரி.இந்தப் பதிவு உங்களுக்குத் தீங்கு எதையும் செய்வதற்காக பதிவிடப்பட்டதல்ல.
No comments:
Post a Comment