எனது நல்ல குணங்களுக்கு காரணம் நான் படித்த புத்தகங்கள்
எனது தீய குணங்களுக்கு காரணம் நான் பார்த்த மனிதர்கள்
மனம் என்பது ஒரு software தொகுப்பு
மூளை என்பது ஒரு hardware தொகுப்பு
நமது மூளையின் சாதக பாதகங்களுக்கு யாரும் பொறுப்பல்ல
அது இறைவனால்,விதியால்,பாரம்பர்யமாக வந்த அமைப்பு
நமது வளர்பருவ பயிற்சிகளே
நமது மனம் என்ற மென்பொருள்களின் கூட்டமைப்பு
இதை operating system அல்லது os என்று சொல்லலாம்
இது நமது’ அனுபவங்களின்’ லாபம் அல்லது நஷ்டம்
நமது பெற்றோர்,ஆசிரியர்,அயலார்
மற்றும் சமூகதாக்கங்களின் இறுதி வடிவமானது நமது மனது.
தரையில் நமக்கு போடப்பட்ட 10 சீட்டு
நமது தாய் தந்தை மூளை
சுழன்று வரும் சீட்டுகளானவை,
நமது அதிட்டமும்
துரதிட்டமுமான
விதி வசத்தால் வரும் அனுபவங்கள்.
இருப்பதைக் கொண்டு சிறப்புடன்
இந்த வினோதமான வேடிக்கையான வாழ்வை
அதன் வெற்றி தோல்விகளை ரசனையுடன்
ருசித்து ரசித்து மகிழ்ந்து வாழ பழகிக் கொள்வோம்…
No comments:
Post a Comment