மனிதர்கள் vs மனிதர்கள்.
1.நமது வாழ்க்கையின் பல கட்டங்களிலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.அதில் அம்மா அப்பா இப்படி குடும்ப உறுப்பினர்கள் ,நண்பர்கள்,உடன் பணி புரிபவர்கள்,மேலதிகாரிகள்,நமக்குக் கீழ் பணிபுரிபவர்கள் ,தொழில்ரீதியாகத் தொடர்புடையவர்கள் அப்புறம் இப்படிப் பதிவுகள் மூலமாக நமது கண்னுக்குத் தெரியாத வாசகர்கள் இப்படி நமது தொடர்புகள் நீண்டு கொண்டே இருக்கின்றது .
2.இந்தத் தொடர்புகள் மூலமாக நாம் நாள்தோறும் மனிதர்களிடையே பழக வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.எல்லா சூழ்நிலைகளிலும் நாம் நமது விருப்பத்தை நிறைவேற்றும் ரீதியில் தான் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டிருப்போம்,அதே போலத்தான் மற்றவர்களும் தங்களது விருப்பங்களை நிறைவேற்ற நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புவார்.
3.இப்படிப்பட்ட சமயங்களில் மேலே சொல்லப்பட்ட தொடர்பு நிலைகளில் சிலர் தங்களது விருப்பங்களை வெளிப்படையாகவும் அவர்கள் நம்மிடம் எதிர் பார்க்கும் நிலையை பட்டவர்த்தமாகவும் சொல்லிவிடுவார்கள்.இவர்களிடம் நாம் நமது நிலையையும் நமது எதிர்பார்ப்பையும் சொல்லியும் சொல்லாமலும் கூட செயல்களைப் புரியலாம்.
4.சிலர் அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதை சொல்லாமல் நம்மை ஆழம் பார்ப்பார்கள் இப்படிப்பட்டவர்கள் நம்மிடம் என்னதான் எதிர்பார்க்க முடியும் என்று நமது விருப்பங்களுக்குட்பட்டு அந்த நபரை அறிந்து கொள்ள நாம் அவர்களைக் கொஞ்சம் படிக்க வேண்டும்.அதற்கு முன் நாம் நம்மையும் படித்துத் தெரிந்திருக்க வேண்டும்.
5.சிலர் நம்மைப் பார்த்தவுடன் நன்றாகச் சிரித்துப் பேசுவார்கள் அதில் என்ன எதிர்பார்ப்பு அவர்களுக்கு நம்மிடம் இருக்கின்றது என்று முன் அறிய முயற்சி செய்யுங்கள் .மனிதர்களின் முகம் என்பது அவர்களது உள்மன எண்ணத்தைக் காட்டும் கண்ணாடி ,சிலர் திறமையாக அதனை மறைத்து விடுவார்கள் ஆனால் எல்லோரிடமும் அப்படி மறைக்க முடியாது.
6.ஒருவர் மகிழ்ச்சியோடு இருக்கும் போது முகம் மலர்ச்சியாக இருக்கும் அதே போல் அதனையே திருப்பி சிந்தனை செய்தால் ஒருவர் தனது முகத்தை மலர்ச்சியாக வைத்திருந்தாலும் கூட உள்மனதில் மகிழ்ச்சி வந்து விடும் என்கின்றார்கள்.அதே போல் ஒருவரது முக பாவணையை வைத்தும் அவரது அங்கங்களை வைத்திருக்கும் பாவனையில் இருந்தும் அவரது எண்ணங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
9.எப்படி இருந்தாலும் மனிதர்கள் குறிப்பிட்ட விசயத்தில் தங்களது நிலைகளை எப்படி நிலை நிறுத்துகின்றார்கள் என்பதை நமது காரியங்களை ஆற்ற அரிந்து கொள்வது அவசியம். ஒருவர் ஒரு குரிப்பிட்ட சூழ்நிலையில் என்ன நினைக்கின்றார் என்பதை அவரது கண்களும் உடல் பாவமும் அவரது நடத்தைகளும் சொல்லிவிடும்.அவரது வார்த்தைகள் அவசியமில்லை.
10.யாரையும் தைரியமாக அவர்களது கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுங்கள் அப்போது அவர்களது உளக் கிடக்கை நமக்கு எளிதில் புரிந்து விடும்.அதே நேரங்களில் மிகவும் முக்கியமானது தகுந்த சமயங்களில் கண்களை நேருக்கு நேர் பார்ப்பது போல் உங்கள் பாவம் இருக்கட்டும் ஆனால் கண்களை ஆழமாகப் பாராமலும் உரையாடுங்கள்.அது மற்றவர்கள் நம் மேல் செலுத்திடும் ஆளுகையை தவிர்த்திடும்.
11.சிலர் மற்றவர்களுடன் பேசும் போது எதிரில் இருப்பவர்களை நேருக்கு நேர் பார்க்க அஞ்சி கீழேயோ அல்லது தங்களது பார்வையை வேறு எங்கோ வைத்துப் பேசுவார்கள். இவர்களுக்கு பய உணர்வு அதிகம் என்று பொருள் தங்களை எதிராளி ஏதாவது விசயத்தில் சிக்க வைத்துவிடுவார்காளோ? என்ற எச்சரிக்கை உணர்வு அதிகம்.ஆனால் இப்படிப்பட்ட நபர்கள் எந்த சூழ்நிலையிலும் இப்படியே தொடர்ந்து இருப்பதில்லை.சில சமயங்களில் எதிராளியின் கன்களை நாம் நேரடியாகப் பார்க்காமல் பேசும் போது அவர்களது ஆளுகையைத் தவிர்த்து நமது ஆளுகையை நிலை நிறுத்த செய்யும் முயற்சியாகக் கூட இருக்கலாம்.
12.தங்களுக்கு மிகவும் பரிச்சயமான சூழல் என்கின்ற போதும் தங்களை எதிராளி பிடித்துவிட முடியாது என்கின்ற மன தைரியமும் நம்பிக்கையும் அதிகமாக இருகின்ற சூழ்நிலையில் எதிராளியின் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசலாம் .உளவியலில் ஒரு கருத்துச் சொல்லப்படுவது உண்டு ஒரு நபரைப் பார்த்தவுடன் நமது உள்மனதிற்கு என்ன தோன்றுகின்றதோ அதுவே ஒன்று அவர் நம்மைப் பற்றி நினைக்கும் கருத்தாக இருக்கும் அல்லது நாம் அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பாக இருக்கும்.
13.நமக்கு மேல் நிலையில் உள்ளவர்கள் அலுவலர்களாக இருந்தாலும் சரி உறவினர்களாக இருந்தாலும் சரி அவர்களது கருத்துக்கு எதிராகச் சொல்லும் நபர்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களை எப்போதும் தகுந்த சூழ்நிலை வரும் போது மாட்டிவிடுவதற்குத் தயாராக இருப்பார்கள்.நமக்கு மேல் நிலையில் இருக்கும் இப்படிப்பட்ட நபர்களை நாம் சந்தித்துவிட்டு வரும் போது அவர்கள் நாம் திரும்பிப் போகும் போது நமது முதுகுப்பகுதியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும்,நாம் அவரது பார்வையை விட்டு விலகும் வரை நமது பின் பகுதியை வெறித்துப் பார்த்தாலும் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நம் மீது ஒரு எதிர்க் கருத்தோ வெறுப்போ இருக்கின்றது என்று பொருள்.
14.அவர் அப்படி நம்மைப் பின் நோக்கி வெறித்துப் பார்க்கின்றாரா இல்லையா? என்பதை நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை அவர்களது மன உணர்வை உணர்ந்தாலே போதும் அல்லது நாம் திரும்பும் அந்தத் தருணத்தில் அவரது உளக்கிடக்கையை நமது கடைக்கண்ணால் பார்த்தால் அந்தத் தருணத்தில் அவர் நம்மைப் பற்றி நினைக்கின்ற அவரது உளக் கிடக்கையைத் தெரிந்து கொள்ளலாம்.அதற்கு ஏற்றாற் போல நமது நிலையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.நாம் அப்படித் திரும்பும் போது அவரது பாவனையை வைத்து மாற்றுக் கருத்து இல்லையென்றால் அதையும் நாம் அந்தத் தருணத்தில் தெரிந்து கொள்ளலாம்.
15.அடுத்து நாம் யாருடைய தலைமையின் கீழ் இருக்கின்றோமோ அவர்கள் மேல் தாக்கம் செலுத்துபவர்களைக் குறித்துப் பார்ப்போம்.பொதுவாக ஒரு தனி மனிதன் மேல் ஆதிக்கம் செலுத்தும் நபர்களினைப் பட்டியல் போட்டுப் பார்த்தோம் என்றால் முதலில் அவரது குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் வட்டம் ,அவரிடைய நண்பர்கள் வட்டம் ,தொழில் ரீதியான நண்பர்கள் தொழில் ரீதிக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் .அவரது கடைநிலைப் பணியாளர்கள்,அவரது சமையல் வீட்டு வேலை செய்யும் நபர்கள் கார் ஓட்டுநர் போன்றோர் நமது தலைமையின் மேல் ஆதிக்கம் செலுத்தும் நபர்களாக இருப்பார்கள்.
16.இவர்களது ஆதிக்கத்தில் இருந்து எந்த ஒரு நபரும் தனித்து செயல்பட முடியாது.பெரும்பாலும் தலைமையிடம் இருந்து சலுகைகளை எதிர்பார்ப்போர் அல்லது தங்களது காரியங்களைச் செய்ய வேண்டியவர்கள் இப்படிப்பட்ட அதிகாரவட்டத்தில் இருக்கும் நபர்களுடன் தொடர்பு வைத்திருப்பார்கள்.தலைமையின் போக்கு எப்படி இருக்க்கின்றது எதை நோக்கிப் போகின்றது என்பதை ஒவ்வொரு நபர்களும் ஒரு விதத்தில் தொடர்பு படுத்தி வைத்திருப்பார்கள்.அதனை அவ்வப்போது மேம்படுத்தி வருவார்கள்.
17.திறமையான தலைமை தனக்குக் கீழ் உள்ள தனது அதிகார வர்க்கத்திற்குட்பட்ட எந்தெந்த நபர்கள் எந்தெந்த நபர்களுடன் தொடர்பில் இருக்கின்றார்கள் என்பதனை நன்கு தெரிந்து வைத்திருப்பார்.அவரே அந்த அதிகார வர்க்கத்தின் தேவைகளுக்கு தீனியும் போடுவார் பசியையும் உண்டாகுவார்.தனது காரியங்களை அதிகார வர்க்கத்தினர் எப்படி அறிந்து கீழ்நிலையில் உள்ளவர்களுக்குக் கடத்திப் பணிபுரிகின்றார்களோ அதே போல் கீழ்நிலையில் உள்ளவர்களின் நிலையினையும் தன் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்கள் மூலமாகத் தெரிந்து அதன் மூலம் தன் கீழ் பணிபுரிபவர்களைக் கட்டுப் படுத்துவார்கள்.இவர் இப்படிக் கட்டுப்படுத்துகின்றார் என்பதை அவரோடு தொடர்பு இல்லாமலேயே உணர்ந்து கொள்ளலாம்.இந்த விசயங்களை தெரியாமலேயே நாம் கடைப்பிடித்து வந்தால் நல்லது அது மனிதர்கள் vs மனிதர்கள் என்னும் சூத்திரத்தை நன்கு பயன்படுத்துபவர்களாக நம்மை ஆக்குகின்றது.
No comments:
Post a Comment