சமநிலையில் வைத்துக்கொண்டால் சச்சரவுகளில்லையே.
பார்வை படுத்தும் பாடு சில நாட்களில் காலையில் அன்று பார்ப்பதெல்லாம் அழகு பேசுவதெல்லாம் அன்பு நடப்பதெல்லாம் சரி என்று மகிழ்ச்சி கரை புரண்டு ஒடுகிறது சில நாட்களில் உறங்கும் வரை எல்லாமே சரியில்லை யாரைப்பார்த்தாலும் எரிச்சல் சிடு சிடு வென்று மனம் கடுகாக பொரிகிறது
ஏன் இது?
நாளிலா கோளாறு?
பார்க்கும் பார்வையில்தானே நிறம் மாறுகிறது
கருப்பு கண்ணாடி போட்ட மனம்
கண் பார்வையை குழப்பி விடுகிறதுதானே
அதை சிலநேரங்களில் சில மனிதர்கள் என்றார்
தர்மள் பார்வையில் அனைவரும் யோக்யர்கள்
துர்யன் பார்வையில் அத்தனபோரும் அயோக்யர்கள்
நன்மையும் தீமையும் நல்லதும் கெட்டதும்
துன்பமும் இன்பமூம் மகிழ்ச்சியும் மயக்கமும் உலகில் இல்லை
மனநிலையின் பார்வையில்தானே?
அதை சமநிலையில் வைத்துக்கொண்டால் சச்சரவுகளில்லையே.
No comments:
Post a Comment