சித்தர்கள் உணர்ந்தது தான் என்ன?
1.சித்தர்கள் பாடல்களைப் படிப்பவர்களுக்கும் ,சித்தர்களின் விஞ்ஞானத்தை ஆராய்பவர்களுக்கும்ஒருஉயர்ரகமானபுரியாதவிசயம்அண்டக்கல்.சித்தர்களின்அனைத்துமருந்து,மாந்திரீகம்,சித்து,ரசவாதம் இப்படி எதை எடுத்துக் கொண்டாலும் அதில் இடைவிடாமல் சொல்லப்படும் ஒரு விசயம் இதில் முப்பைச் சேர்,அண்டத்தைச் சேர் ,தத்துவாதிகளின் கல்லைச் சேர்,ஐங்கோலக்கருவைச்சேர் இப்படி பல பெயர்களில் ஒரு பொருளை மறைத்துக் கூறி இருப்பார்கள்.இதற்கு உரிய பொருளைத் தெரிந்து உரிய வகையில் அந்தப் பொருளை செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள் சொற்ப எண்னிக்கையில்தான் உள்ளார்கள்.அவர்களும் யாருக்கும் இந்த ரகசியத்தைச் சொல்ல மாட்டார்கள்.
2.இந்த அண்டக்கல்லைப் பற்றி நம் தமிழகத்தில் உள்ள சித்தர்கள் பரிபாசை எனப்படும் மறைமொழியில் இதனை சொல்லி வைத்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை.இதனை புரிந்து கொண்டவர்கள் அனைத்து சித்துக்களையும் செய்யலாம்,இயற்கையின் சரியான சூத்திரத்தைத் அறிந்து அதனை தனது கட்டுப்பாட்டில் வைக்கலாம் ,சாகாமல் வாழலாம் இன்னும் எத்தனை எத்தனையோ கதைகள் இந்த அண்டக்கல்லைப் பற்றி உண்டு.அதனால் தான் சித்தர்கள் இதனை மறை மொழியில் வைத்து விளக்கியிருக்கின்றார்கள் என்று இதனைத் தேடி அலைந்தவர்களுக்குப் புரியும்.
3.இந்த அண்டக்கல்லைப் பற்றி சித்தர்கள் குறிப்பிடும் போது ,இதன் ரகசியம் யாருக்கும் புரியாது என்றும் ,முயற்சி செய்து தெரிந்து கொண்டவர்கள் யாருக்கும் சொல்லக் கூடாது என்றும் ,சொன்னால் சித்தர்கள் சாபம் அவர்களைப் பற்றும் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்.இருந்த போதிலும் தற்போதைய சமூகம் செல்லும் பாதையை நினைத்துப் பார்க்கும் பொழுது மனித இனம் அதன் பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய ஒரு கட்டாய நிலை தோன்றி இருக்கின்றது.
4.மனித இனம் பல்கிப் பெருகி உள்ள சூழ்நிலையில் அதனுடைய இடையறாத வளர்ச்சிக்காக இயற்கையைப் பயன்படுத்தி இயற்கை வளங்கள் குறைய ஆரம்பித்து இருக்கின்றன.எத்தனையோ உயிரினங்கள் அழிந்தும் போய் விட்டன.உலகிற்கே வழிகாட்டிய நமது தமிழ் மொழியின் வளங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.தமிழன் நமது பாரம்பரிய அறிவையும் அவற்றைத் தேடி வைத்த நமது முன்னோர்களின் வழியை மறந்தும் மற்ற நவீன உலகின் முன்னேற்றங்களைத் தான் உண்மை என்றும் அவையே மனித இனத்தின் வழி என்றும் நம்பி நமது முன்னோர்கள் கண்டறிந்த அறிவியலைப் பற்றி உணராது இருக்கின்றார்கள்.
5.ஆகவே நமது தமிழினத்தின் நண்மைக்காகவும் உலகின் பல பாகத்தில் நமது தமிழ்நாட்டுச் சித்தர்கள் போன்று தோன்றி இயற்கையின் அந்த கடைசிச் சூத்திரத்தை சொன்ன பல சித்தர்களின் நோக்கத்தை எல்லா வகையிலும் நிறைவேற்ற இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என்று நம்பி ,அணைத்து உயிர்களின் நண்மைக்காகவும் இது பற்றி ஒரு அறிமுகத்தைத் தமிழ் உலகிற்குக் கொடுப்பது தமிழன்னைக்கு செய்யும் சிறிய காணிக்கை என்று எண்ணுகின்றேன்.
6.சித்தர்கள் அடைந்த அந்த அண்டக்கல்லின் சக்தியை கொஞ்சம் சொன்னால் தான் இந்தப் பதிவு பற்றிய சுவாரசியம் இருக்கும்.
1.இந்தக்கல் பிரபஞ்சத்தின் விதை.
2.இதனைக் கொண்டு எதனையும் படைக்கலாம்.
3.இதனை உடலுக்கான பிரபஞ்ச மருந்து என்று சொல்லலாம்.
4.இதனை உயிருக்கான பிரபஞ்ச மருந்து என்று சொல்லலாம்.
5.இதனை ஆன்மாவுக்கான பிரபஞ்ச மருந்து என்று சொல்லலாம்.
6.இதனை உலோகங்களுக்கான பிரபஞ்ச மருந்து என்று சொல்லலாம்.
7.இதனை கனிமங்களுக்கான பிரபஞ்ச மருந்து என்று சொல்லலாம்.
8.இதனை விலங்குகளுக்கான பிரபஞ்ச மருந்து என்று சொல்லலாம்.
9.இதனை தாவரங்களுக்கான பிரபஞ்ச மருந்து என்று சொல்லலாம்.
8.இந்த பிரபஞ்ச விதையைக் கொண்டு புதிய பிரபஞ்சத்தையே படைக்கலாம்.
10இது ஒரு அழியாத சக்தி.
11.இறக்காமல் இருக்கலாம் .
12.இளமை மாறாமல் வாழலாம்.
13.ஐம் பூதங்களையும் படைக்கலாம்.
14.ரசவாதம் செய்யலாம்.
7.இன்னும் எத்தனை எத்தனையோ விளக்கங்களையும் சிறப்பையும் இது குறித்து சொன்னாலும் ஒரே சொல்லில் கூறுவது என்றால் இதனை பிரபஞ்சத்தின் அணைத்து செயல்களையும் உள்ளடக்கிய ஒரு பிரபஞ்ச சூத்திரம் என்று கூறலாம்.இது எங்கே இருக்கின்றது எப்படி இருக்கின்றது என்ற ஆவலை அடுத்த பதி வு வரை காத்திருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment