Saturday, February 1, 2014

மன அழற்சி

மன அழற்சி

தேவையற்ற காரணமற்ற மூடத்தனமான பயத்தால் ஒரு பொருளையோ ஒரு செயலையோ ஒரு சூழ்நிலையையோ தவிர்ப்பதுPHOBIA  என்று சொல்லப்படுகிறது.

வெறுப்பும் எதிர்ப்பும் தவிர்ப்பும் உண்டாவதால் என்றPHOBIA குறையை மன அழற்சி என்று நினைவில் வைக்கலாம்.

இந்த குறையினால் ஏற்படும் பயமும் அதன் விளைவாக ஏற்படும் தவிப்பும் தவிர்ப்பும் பாதிக்கப்பட்டவரின் செயல் திறனையும் சுய விருப்பத்தையும் கெடுத்து அவரது சுய நம்பிக்கையையும் சுய முன்னேற்றத்தையும் தடுத்து அவரது திறமைகளை முடக்குகிறது.
            
பல சமயங்களில் பாதிக்கப்பட்டவர் தனது பயம் அளவிற்கதிகமானது.முட்டாள் தனமானது என்ற சுய அறிவும் சுய உணர்வும் இருந்தாலும் அவரது பயம் குறிப்பிட்ட பொருளுடனோ செயலுடனோ சூழ்னிலையோடோ பிரிக்க முடியாத அளவிற்கு பசை போட்ட மாதிரி ஒட்டி கொண்டு விடுகிறது.

தனது பயத்தை வெற்றி கொள்ள முடியாமல் பலமிழந்து அவர் பரிதவிப்புக்குள்ளாகிறார்.

அறிகுறிகள்:
‍‍‍‍‍‍
பயந்த சுபாவமும் கூச்ச உணர்வும் உள்ள வாலிப பருவத்தில்தான் அதிகமாக இந்த குறைகள் புலப்பட தொடங்குகிறது.

அதிலும் பெண்களுக்கு அதிகமாக தென்படுகிறது

குழந்தை பருவத்தில் துவங்கும் பயங்கள் வயது முதிர்ச்சியில் தெளிவாகும்

ஆனால் விடலை பருவம் கடந்த பிரச்சனைகளுக்கும் நிச்சயமாக மருத்துவம் தேவைப்படுகிறது.

பெரும்பாலும் இளமை பருவத்தில் திடீரென துவங்கலாம்

ஆனாலும் பயம் ஏற்பட சரியான தொடக்கமும் தெளிவான காரணமும் அளவிற்கு புலப்படுவதில்லை.

பாதிக்கப்பட்டவர் பல ஆயிரக்கணக்கில் அவரது பயங்கள் பல லட்சக்கணக்கில் இருந்தாலும்மிக சில பயங்கள் மட்டும் அடிக்கடி பலரிடமும் மீண்டும் மீண்டும் பெரும்பான்மையாகவும் தோன்றுகிறது.
         
பயத்தினால் உண்டாகும் தவிர்ப்பையும் மன அழற்சியையும் பொதுவாக மூன்று பெரும் வகைபாடுகளாக தொகுக்கிறார்கள்.

1.பொருள் பயம் 2.செயல் பயம் 3.சூழ்நிலை பயம்

பொருட்கள் பய அழற்சி என்பது கணக்கிலடங்காது சூர்யனுக்கு கீழுள்ள அனைத்தும் சூரியனும் கூட பயத்தை உண்டாகலாம் என்பார்கள்.

எல்லாம் சிவமயம் என்பதுபோல் எல்லாம் பய மயம் என்றார்கள்.
எல்லா பொருட்களின் மீதும் பயம் வர வாய்ப்புள்ளது

நடைமுறையில் எந்த பொருளின் மீது பயமும் தவிப்பும் தோன்றுகிறதோ அதன் பெயரோடு வையும் இணைத்து பெயரிடுவது வழக்கம்.
உதாரணங்கள்:
1.பூனை பயம்
2.எலி பயம்
3.நாய் பயம்
1.இருட்டு பயம்.
2.குளிக்க பயம்
3.பூச்சி பயம்
4.சத்தம்,வெடி,பயம்
5.ஊசி பயம்
6.யானை பயம்
7.உயர இடம் பயம்
8.பள்ளி செல்ல பயம்
9.பூனை பயம்
10.நெருப்பு பயம்
11.ஆசிரியர் பயம்
12.நாய் பயம்
13.இடி,மின்னல்,பயம்
14.பிச்சைக்காரர் பயம்
15.குதிரை பயம்
16.படியேற இறங்க பயம்
17.மன நோயாளி பயம்
18.பல்லிபயல்
19.சைக்கில் பயம்
20.ஊன முற்றவர் பயம்
21.பாம்பு பயம்
22.நீச்சல் பயம்
23.தனியே படுக்க பயம்
24.இறந்தவர் பயம்
25.கூட்டமான இடம் பயம்
26.உடைமாற்ற பயம்
27.கடத்தல்காரர் பயம்
28.திருடர்கள் பயம்
29.போலீஸ்காரர் பயம்
30.இரத்த பயம்
31.பேய் பிசாசு பயம்
       
இரண்டாவதாக செயல் பய அழற்சி என்பது பெரும்பாலும் குறிப்பிட்ட செயல்களிடமே அதிகமாக காணப்படுகிறது

பெரும்பாலும் முட்டாள்தனமாக கோமாளித்தனமாக மற்றவர் நகைக்கும் படி அவமானத்துள்ளாகும் படியோ செய்து விடுவோமோ என்ற வெட்கம்,கூச்சம்,அச்ச உணர்வும் தான் எந்த நேரமும் கவனிக்கப்படுவது போன்ற அந்த செயலை தவிர்த்து ஓடும்படிசெய்கிறது.

1.   பொது இடங்களிலும் மற்றவர் முன்பும் சாப்பிடுவது
2.    மேடையில் பேசுவது
3.    வகுப்பறையில் பதில் சொல்வது
4.    உடலுறவு கொள்வது

இது போன்ற பல சந்தர்பங்களில் தோன்றலாம்.மூன்றாவதாக சூழ்நிலை மேல் பய அழற்சி என்பதும் மிக சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஏற்படுகிறது.

1.  (சந்தைகடைகள்)
3. (விளையாட்டு மைதானம்)
4. (நீண்ட தெருக்கள்)
5. (மூடிய அரங்கம்)
6. (சுரங்கம் குகை)
7. [கூட்டமான இடங்கள்)

No comments:

Post a Comment