Thursday, February 20, 2014

அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை

அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை

1. அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.

2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.

3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.

4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.

5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.

6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.

7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.

8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.

9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.

10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.

No comments:

Post a Comment