Friday, February 21, 2014

கடமை

கடமை

அச்ச உணர்வினால் கடமையை
கற்றுத்தர முடியாது ………. சிசரோ

அடையவில்லை என்ற
அயர்வு நீ ஒழி நெஞ்சே ………. திருஞானசம்பந்தர்

அதீத கடமையுணர்வு உபயோகமானது
சில நேரங்களில் நட்புறவுகளை பாதிக்கும் ………. ரஸ்ஸல்

அன்புக்கு ஆற்றல் அதிகம் கடமைக்கு
அதை விட பயன் அதிகம் ………. கதே

இயறக்கையில் எல்லாமே சிறியவையாகத்தானே ஆரம்பிக்கின்றன ………. பிசிகணேசன்

உள்ளத் துணியும் முயற்சியும் கொண்ட உத்தமர் வாழ்வு மலரும் ………. கண்ணதாசன்

உனது கடமையை செய்யும் போது நீ வெளிப்படுவதைதானே உணர்வாய் ………. கதே

உன்னை நீ அறிய வேண்டுமானால் சிந்திப்பதை விட்டுவிட்டு செயல்படு புரியும் ………. கதே

ஒத்துழையாமை என்பது
மனிதருக்கு எதிரானது அல்ல ………. மகாத்மா

கடவுள் பெயரை உச்சரிப்பது
ஒரு வெற்று பழக்கமாகிவிட்டது ………. குருசேவ்

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது ………. பெர்னாட்ஸா

கடவுளிடம் பொறுமை காப்பதே
 பக்தி எனப்படும் ………. பெஸ்ட்வோராஸ்

கடவுளின்  அருள் பெற்றவரே
கருணை உடைவராயிருப்பார் ………. தாவோ

கடவுளை அடைவதற்கு நிறைய
கதவுகளை அமைத்திருகிறார் ………. கலீல்கிப்ரன்

கதிரோளி வாங்கித்தரும் கண்ணாடி போல புத்தகங்கள் அறிவொளி  தரும் ………. கிப்பன்

தனது அடிபடை கடமைகளை சிறப்பாக முடித்தவனுக்கு
மரணமென்பது மகிழ்வான ஓய்வுறக்கம் ………. சந்தயானா

தீமையோடு ஒத்துழைக்காமல் இருப்பதே நமது முதல் கடமை ………. காந்தி

தெளிவான சரியான சுருக்கமான
 பதில் என்பது செயலே ………. ஹெமிங்வே

நம்பிக்கை இல்லாமல் தன் கடமையைச்  செய்ய இயலாது ………. டிஸ்ரேலி

நம்பிக்கையில்லாத இடத்தில்கடமையில்லை
கடமையில்லாது வேலையில்லை ………. பெர்னாட்ஷா

நம்பிக்கையில்லாத இடத்தில்
கடமையுணர்வு காலூன்றாது ………. டிஸ்ரேலி

நரிமா கிழித்த அம்பின் தீதோ
அரிமா பிழைத்த கோல் ………. பதுமனார்

நாம் மூழ்கிய இடத்தில் முத்து கிடைக்கவில்லை
என்றால் முத்து இல்லையென்று சொல்லி விட முடியாது ………. இராமகிருஷ்ணர்

பரபரப்பில்லாது பொறுமையுடன் விடாமுயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் ………. விவேகானந்தர்

புகழ் எனும் கோபுரத்துக்கு
கடமை என்பதே பிரதானை சாலை ………. டெனிசன்

பெரு நெருப்புக்கு ஈரமில்லை ………. பிச்சமூர்த்தி

போன நாள் வீனாய் புதிய நாள் கெடாது ஞானநாள் இதுவென்று நாடு ………. கணபதி சித்தர்

மனசாட்சி விழிப்புடன் இருக்கும் போதுதான் நாம் தயராக இருப்போம் ………. மாண்டெய்ன்

முட்டை கொண்டு திட்டை ஏறும்
எறும்புகள் அல்ல எழுத்துகள் ………. அப்ரல் ரகுமான்

முடிந்த கதை கிடையாது இருந்தால்
உலகம் எப்பவோ முடிந்திருக்கும் ………. லாசரா

No comments:

Post a Comment