நம் விதி தான் நமக்கு
பொறாமை அடிக்கடி மன அமைதியைக் குலைக்கிறது. நீங்கள் எவர் மீதாவது பொறாமைப் படுகிறீர்களா? பொறாமை ஒரு வியாதி. உங்களது அலுவலகத்தில் திரு.க உங்கள் பதவி உயர்வைத் தடுத்தார் என்பதாலோ அல்லது உங்கள் வியாபாரத்தில் திரு. கே. போட்டியிட்டுக் குலைத்தார் என்று நீங்களாகக் கற்பனை செய்வது தவறு. திரும்பத் திரும்ப எண்ணுங்கள். உங்களது முன்னேற்றத்தை எவரும் ஆக்கவோ, அழிக்க்வோ முடியாது. உங்களது தொழிலும், உங்களது வாழ்க்கையும் உங்கள் முன் வினையால் உருவாக்கப்படுகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா! நீங்கள் முன்னேற வேண்டும் என்று விதி இருந்தால் உலகம் முழுவதும் ஒன்று திரண்டாலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு மாறாக நடக்க வேண்டுமெனில் அப்பொழுதும் உலகம் முழுவதானாலும் ஒன்றும் செய்ய இயலாது.ஒவ்வொரு மனிதனும் அவனது விதியினாலேயே ஆளப்படுகிறான். ஒருவரை சார்ந்திருப்பது போலத் தென்ப்பட்டாலும் ஒருவரது வாழ்விலிருந்து அடுத்தவருடையது வேறுபட்டது ஆகும். இதை நினைவு கொள்ளுங்கள். இந்த கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பொழுதும் பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள் அல்லது உங்கள் துன்பத்திற்கு பிறரைப் பழிக்காதீர்கள்.
பொதுமக்கள் கருத்துக்கு எவ்வளவு மதிப்பு?
பொது மக்களின் கருத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்காதீர்கள். பெரும்பாலும் பொது மக்களின் கருத்து தவறாக உள்ளது. ஒழுக்க நியதிகள், நன்னேறிகள், மறை நூல் வாக்கியங்கள், அறிஞர்கள் மற்றும் மகான்களது கருத்துக்கலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் வாழ்வில் தவறவே மாட்டீர்கள்.
சூழ்நிலைக்கேற்ப நாம் மாற வேண்டும்
உங்கள் அமைதியைக் குலைக்கும் உங்களது ஒரு சூழ்நிலை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். சூழ்நிலையை மாற்றுவதற்குப் பதிலாக நீங்கள் உங்களையே இப்பொழுதை விட நல்ல நிலைமைக்கு மாற்றி அமையுங்கள். இப்படி நீங்கள் செய்வதால் வருடக்கணக்காக உங்களுக்குக் கெட்டதாகத் தென்பட்ட உங்களது சூழ்நிலை அதிசயிக்கத்தக்க விதத்தில் மாறத் தொடங்குவதை காண்பீர்கள். நீங்கள் மென்மேலும் தூய்மை அடையும்பொழுது சூழ்நிலையும் மென்மேலும் ஒத்த விதத்தில் வளர்ச்சி அடையும். எப்படி? என்று கேட்காதீர்கள். முயன்று பாருங்கள்.. அனுபவத்தில் தெரியும் நண்பரே..
No comments:
Post a Comment