வாழ்க வளமுடன்! அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை!
கடவுளின் அளவுகோல் என்பது...
எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது , எத்தனை தடவை மந்திரங்கள்
சொல்லப்பட்டன, எத்தனை முறை விளக்குகள் ஏற்றப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது, எத்தனை முறை மணி அடிக்கப்பட்டு, மறைநுல்கள் வாசிக்கப்பட்டன - போன்றவற்றால் மனிதரின் செயல்களை தெய்வீக அளவுகோல்கல் மதிப்பிடுவதில்லை! உங்கள் இதயத்தில் எழும் எண்ணங்களின் தரத்தை பொறுத்து, எத்தகைய வார்த்தைகளை நீங்கள் உங்கள் அண்டை அயலாரிடம் பயன்படுத்துகிறீர், அவற்றை பொறுத்து உங்கள் வாழ்வை நீங்கள் யார் யாருடன் கழிக்க வேண்டும் என்று இறைவன் விதித்திருக்கிறார் அவர்களுடன் நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலையும் பொறுத்தே தெய்வீக அளவுகோல்கள் மனிதனை மதிப்பிடுகின்றன என நான் திட்டவட்டமாக உங்கலுக்கு கூறுகிறேன்!.
sponsored useful job links...
A . B . C . D . E . F . G . H . I . J . K . L . M . N . O . P . Q . R . S . T . U . V . W . X . Y . Z
உங்களுக்கு மன அமைதி வேண்டுமா?...
நல்ல ஆரோக்கியமும் பொருளாதாரா பாதுகாப்பும் மன அமைதிக்கு மிகவும் இன்றியமையாதவை என்பது எல்லாரும் அறிந்ததே !
ஆனால் இவை இரண்டும் இருப்பினும், பலரும் தொடர்ந்து மன அமைதியின்றி அல்லல்படுகின்றனர்! நீங்கள் இந்த வகையைக் சேர்ந்தவர்களா? .. ஆமாம் என்று நீங்கள் பதில் சொன்னால் மேலும் இதை படியுங்கள். உங்களது தொல்லைகள்பெரும்பாலும் நிங்களாகவே உண்டாக்கி கொண்டது என்பதால் அவை தவிர்க்கப் பட கூடியவையே ..
எப்படி என்று நாம் பார்ப்போம்!
நீங்கள் அடிக்கடி பிறர் விசயங்களில் தலையிடுகிறிர்களா? அவர்கள் தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை முன்னிட்டு நீங்கள் அல்லல் படுவானேன்! யாரையும் எவரையும் குறை கூறாதிர்கள்!
உறவுகள் மேம்பட...
குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்ப்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க...
நானே பெரியவன். நானே சிறந்தவன் என்ற அகந்தையை(ego) விடுங்கள்!
அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள்!
எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள். விட்டு கொடுங்கள்(compromise)!
சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்(Tolerance)!
எல்லோரிடத்திலும் எல்லா விஷங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிகொண்டிருக்காதிர்கள்.
உங்கள் கருத்துக்களில் உடும்பு படியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்(flexibility)!
மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும் இனிய இதமான் சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்(courtesy)!
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதிர்கள்!
பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நிங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்!
No comments:
Post a Comment