Wednesday, December 18, 2013

அறிஞரின் அவையிலிருந்து - 1

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது
        
அச்சம்

துரதிட்டத்தை எதிர்பார்த்து அஞ்சுவதே பெருந்துயரம்‍‍‍____செனீகா

அச்சமென்பது நான் பேசுவதை 
நானே கேட்கமுடியாதபடி செய்கிறது‍‍___சாமுவேல்பட்லர்

அச்சம்தான் எல்லாவிதமான கேடுகளுக்கும் ஆனிவேர்____பிரேம் சந்த்

கற்பனை இல்லாத இடத்தில் 
அச்சம் இருக்க முடியாது‍‍‍‍____ஆர்தர்கானன்டாய்ல்

நாம்வாழ்வில் அச்சப்பட வேண்டிய ஒன்று 
அச்சம் மட்டுமே‍ ___ரூஸ்வேல்ட்

அச்சப்படும் மனிதன் மீது யாராலும் 
அன்பு செலுத்த முடியாது‍‍‍‍‍_____அரிஸ்டாடில்

அச்சத்தை வெல்வதே அறிவை வெல்வதன் முதல்படி___ரஸ்னல்

அச்சம் என்பது அறியாமையில் இருந்தே ஊற்றெடுக்கிறது___எமர்சன

நடக்கப் போகாத தீமைக்கு அஞ்சி 
நாம் செலவழித்தது அதிகம்____ஜெப்பர்ஸன்

எதற்கு அச்சப்படுகிறோமோ அது நடந்து விடும்____விக்டர் ப்ராங்க்ளின்
        
சந்தேகம்

அமைதியிழந்த ஆணவத்தின் ஆற்றாமையே சந்தேகம்_ஜார்ஜ் எலியட்

வக்ரமான பேராசைகளே 
பொறாமை சந்தேகத்தை உருவாக்குகிறது_நீட்ஸே

தீவிரமான விளையாட்டு என்பது 
வெறுப்பையும் பொறாமையும் விளைவிக்கும்___ஆர்வெல்

சந்தேக நோய் காதலரை தீவிர பகைவர்களாக்குகிறது___பைரன்

காதல் என்பது மரணம் 
சந்தேகம் அதற்கு கல்லறை  கட்டும்___பைபிள்

சந்தேகம் என்பது காதலை வாழவைக்கிறேன் 
என்று சிதைக்கும் அரக்கன்___ஹேவ்லாக் எல்லிஸ்

அநீதியான சந்தேகம் பிறரது நியாயமான சுதந்திரத்தை கெடுக்கும் ___வாஷிங்டன்

காதல்,காமம்,கோபம்,சந்தேகம் யாவும் மனிதரைக் குருடாக்கும்
ஜார்ஜ் எலியட்

உண்மையான அன்பும் சந்தேகமும் 
ஒரு இடத்தில் வாழ முடியாது___அலக்ஸாண்டர் டியூமாஸ்

சந்தேகம் வந்துவிட்டால் 
ஒவ்வொரு செயலும் தவறாகவே தோன்றும்___மகாத்மா 
                        
அவநம்பிக்கை

எல்லாரையும் நம்புவது ஆபத்து யாரையும் நம்பாதது பேராபத்து-லிங்க‌ன் 

தன்னம்பிக்கையில்லாதவன் வாழ்வு 
தலையில்நடப்பது போல அவஸ்தையானது ___லிங்கன் 

நம்பிக்கை இல்லாத நிலத்தில் 
பயிர் செய்யும் முயற்சி வளராது____சாமுவேல் 

நம்பிக்கையே வாழ்வு வாதமும் விவாதமும் தாழ்வு___கார்லைல் தாமஸ்

பரஸ்பர நம்பிக்கையில்லாது 
இனிமையாக வாழ்வது சுலபமல்ல___கிரகாம்கிரீன்

தன்னையே நம்பாதவர் பிறர் யாரையும் நம்ப மாட்டார்___லாசு

அவ நம்பிக்கையுள்ளவர் எதிலும் வெற்றி பெறுவதில்லை___ஒசன்ஹோவர்

இரவை விரட்டு விடியலாக நம்பிக்கை ஒளி 
அவநம்பிக்கையை விரட்டு____கீட்ஸ்

தயங்குபவர்க்கும் சோம்பேறிகளுக்கும் 
எதுவுமே இயலாததாக்தோ___வால்டர் ஸ்காட்

நம்பிக்கை என்ற ஒன்று இல்லை என்றால் 
வாழ்வு குழப்பமாகும்___டேவிட் 
                                         
புலம்பல்

உலகை உங்கள் தோளில் சுமப்பதாக 
வருந்தி அழந்தாதீர்கள்____நார்மன்பீலே

சாவதற்காகவே வாழ்கிறோம் 
செத்துக் கொண்டே வாழ்கிறோம்____சாத்ரே

சோம்பித்திரியும் வாழ்விலே தூய்மை இருப்பதில்லை
ஆன்டன் செகோவ்

மூடரை அடிமைச் சங்கிலியிலிருந்து விடுவிக்க முடியாது____வால்டேர்

இளமையில் குழப்பமும் சோகமும் திசை திருப்பும்

இளமையில் அவநம்பிக்கை மிகமிகக் கொடுமையானது

துயரம் இருக்கும் இடத்தில் செயல் கடிகாரம் நின்று போகும்

துன்பமான நினைவுகளே துயரையும் முதுமையும் தருகிறது

புலம்பலும் வலியும் இழப்பை அதிகரிக்குமே தவிர குறைக்காது

கண்ணீர் கண்களில் அடைக்கப்பட்டால் இதயத்தில் உதிரமாக வடிகிறது
       
சோம்பல்

அறிவின்மையை விட கவனமின்மையே 
நமது தோல்விக்கு காரணம்__பிராங்ளின்

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே 
தவிர பிச்சை கேட்க கூடாது__பெர்னாட்ஸா

சோம்பலாக சும்மா இருப்பவரைத் தவிர 
மற்றவர் யாவரும் நல்லவரே__வால்டேர்

எந்த தொழில் செய்தாலும் இழிவில்லை 
எந்த தொழிலும் செய்யாமலிருப்பதே இழிவு__ டால்ஸ்டாய்

அற்ப விஸயங்களில் ஈடுபடுவது 
மனம் சோர்வாயுள்ளதை காண்பிக்கிறது__வில்லியம் கூப்பர்

ஒன்றுமே செய்யாமல் இருந்தால் 
உன்னை யாரும் கூறை குறை மாட்டார்கள்__எராஸ்ம‌ன்

சோம்பலானது அச்சத்தையும் குழப்பத்தையும் வளர்க்கிறது 
டேல் கார்னி

சொல்பவரின் ஆர்வமானது 
கேட்பவரின் கொட்டாவியால் கரைந்து விடும்__ஓவிட்

சோம்பல் மனித இனத்தையே செல்ல்லரிக்கிறது__விர்ஜினியம் வுல்ப்

ஙாலையும் மனிதரையும் நுழைப்பது இழப்பது சுலபம்__ஐசன் ஹோவர்

சோம்பல் உள்ளவர்க்கு வாழ்வில் மிஞ்சுவது 
ஏக்கமும் ஏமாற்றமுமே__கார்லைஸ்

No comments:

Post a Comment