பொறாமை நம்மை பொசுக்கிவிடும்
பொறாமை எண்ணங்கள் மிகவும் தீமையை தரக்கூடியவை. நாம் எப்போது பொறாமைப்படுகிறோம்? நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, நாம் அடைய முடியாததை மற்றவர் அடையும்போது, நாம் நேசிக்காதவரிடம் நன்மை சேரும்போது மற்றும் பல சந்தர்ப்பங்களில் நாம் பொறாமை மற்றும் வயிற்றெரிச்சல்படுகிறோம்.
அந்த குணம் யாருக்கும் எந்த தீங்கும் செய்வதில்லை என்று நீங்கள் நினைக்கலாம். யார்மீது பொறாமைப்படுகிறோமோ அவர்களுக்கு அது எந்த தீங்கும் செய்வதில்லை. மாறாக, அது பொறாமைப்படுபவர்களுக்கு பலத்த தீமையை கொண்டுவந்து சேர்க்கும்.
அதுமட்டுமின்றி நாம் எந்த விஷயத்திற்காக பொறாமைப்பட்டோமோ அது நம்மிடம் இருந்து விலகி வெகுதூரம் செல்வதற்கு நாமே வழிவகுக்கிறோம்.
நீங்கள் ஆசைப்பட்ட வாகனத்தை அடுத்தவன் ஓட்டிச்செல்வதை கண்டு வயிறெரிந்தால் அந்த வாகனம் உங்களுக்கு எப்போதும் கிடைக்கப்போவதில்லை. உங்களுக்கு கிடைக்க வேண்டியது அடுத்தவனுக்கு கிடைத்துவிட்டால் என்ன? அடுத்து உங்களுக்கும்தானே கிடைக்கப்போகிறது? அந்த பொருள் அடுத்தவனிடம் இப்போது இருக்கலாம். உங்கள் கண்களில் அது படுகிரதெனில் அது உங்களிடம் வரத்தானே போகிறது? ஏன் பொறாமைப்படவேண்டும்?
பொறாமை என்பது மிகவும் தீங்கை விழைவிக்கின்ற ஒரு எதிர்மறை எண்ணம். அதை விலக்கி வாழ்ந்து பாருங்கள். நல்லதே நடக்கும்.
No comments:
Post a Comment