மன எந்திரங்களைச் செய்யுங்கள்.
1.ஒவ்வொரு காரியத்தையும் நாம் ஆரம்பத்தில் இருந்து செய்ய வேண்டியதில்லை.நாம் இப்போது இருக்கும் மனிதன் என்னும் நிலைக்கு நாம் ஒவ்வொருவரும் அமீபா என்னும் ஒரு செல் உயிரியில் இருந்து நமது வாழ்வை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஏற்கனவே நமது முன்னோர்கள் இதனையெல்லாம் கடந்து செய்து முடித்த அனுபவங்களை நாம் நமது டி.என்.ஏ. மூலமாக நமது விருப்பு வெறுப்புகளுக்கு இடம் இல்லாமல் எப்படி செயல் படுத்துகின்றோமோ அதே போல் நாம் நமது வாழ்வில் நமது காரியங்களைச் செய்ய சில மன இயந்திரங்களை ரோபோக்களை உருவாக்கலாம்.
2.நமது உறவினர்களுடன் ஆன உறவினைப் பராமரிக்க ,நம்முடன் பணிபுரியும் சக ஊழியர்களுடன் ஆன உறவைப் பராமரிக்க,நமது மேல் அலுவலர்களுடன் ஆன உறவினைப் பராமரிக்க,நமக்கு தொல்லை தரும் நபர்களுடன் ஆன உறவைப் பராமரிக்க,நமது அறிவைப் பெருக்க ,இப்படி நமக்கு எப்போதெல்லாம் நமது செயலைச் செய்ய ஒரு அவசரகதியிலான எந்திரம்அல்லது ரோபோட் தேவைப்படுகின்றதோ அப்போதெல்லாம் நாம் இப்படிப்பட்ட எந்திரங்களை உருவாக்கலாம் ,ஏற்கனவே எப்படிப்பட்ட செயல்களைச் செய்ய நாம் எப்படிப்பட்ட எந்திரங்களைப் பயன்பாட்டில் வைத்து வருகின்றோம் என்பதை உணரவும் ,அப்படி நாம் பயன் படுத்திக்கொண்டு வரும் எந்திரங்களை மேம்படுத்தலாம்.
3.எந்த ஒரு செயலிலும் நாம் ஈடுபடும் முன்பாக,அதில் தேவைப்படும் விசயங்களைப் பார்ப்போம் . முடிந்த வரையில் நமது ஆர்வத்தினைப் பொறுத்து அந்த செயலைப் பொறுத்து நாம் அறிந்துள்ள விசயங்களை முதலில் நினைத்துப் பார்ப்போம்,நமக்கு அந்தக் குறிப்பிட்ட செயலைச் செய்ய என்ன வல்லமை இருக்கின்றது என்ன வல்லமைக் குறைவு இருகின்றது என்பதையும் நினைப்போம், நமது முன் அனுபவம்என்ன?குறிப்பிட்ட செயலைப் பொறுத்து நாம் நம்பியிருக்கும் பெரியோர்களது அனுபவம் என்ன? அறிவுரை என்ன? இப்படி பல விசயங்களை ஆராய்ந்து முதன் முதலில் அந்தச் செயலில் ஈடுபடுவோம் பின்பு அந்த செயலினால் விளைகின்ற விளைவின் அடிப்படையில் அந்த செயலில் நாம் அனுபவசாலி ஆகின்றோம்.
4.மீண்டும் அதே போன்ற ஒரு செயலைச் செய்யும் போது முதலில் நாம் அந்தக் குறிப்பிட்ட செயலைச் செய்யும் போது செய்த முன்னேற்பாடுகள் எதனையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.ஏற்கனவே நமது மனது அனுபவம் மூலம் உருவாக்கியுள்ள மனதின் புரிதலால் ஆன ரோபோட்டை வைத்து உடனடியாக அந்தச் செயலைச் செய்யலாம்.பின்பு தொடர்ந்து அந்தச் செயலைசெய்து முடிக்கும் போது முன்னம் செய்த தவறுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை நீக்கிமுதலில் செய்ததை விட திறமையுடனும் துல்லியமாகவும் செய்யும் போது அந்த செயல் இன்னும் தெளிவானதாகவும் விரைவாகவும் முடிவடைவதைக் காண்கின்றோம்.
5.இப்போது நாம் குறிப்பிட்ட ஒரு விசயத்தில் பெற்ற அனுபவம் அறிவாகி நமது மனதில் பதிய வைக்கப்படுகின்றது இது தான் மன ரீதியிலான ரோபோட் .பின்னிட்டு நாம் அதே சூழ்நிலைக்கு ஆட்படும் போது அல்லது குறிப்பிட்ட அந்தச் செயலச் செய்யும் போது மீண்டும் முதலில் இருந்து அந்த குறிப்பிட்ட விசயத்தைப் பொறுத்து முதலில் செய்தது போல் செயல் அனுபவம் பெற வேண்டிய அவசியமில்லை.நாம் ஏற்கனவே பெற்ற முடிவுகளில் இருந்து நமது மன ரோபோட் மூலமாக நமது செயலை ஆரம்பிக்கலாம் இதனால் நமக்கு கால விரையம் ஏற்படுவதில்லை செயல்களின் முடிவு இப்படி த்தா ன் இருக்கும் என்று கணித்து காரியங்களைச் செய்யலாம்.
6.இதனைத்தான் மன எந்திரங்களைச் செய்யுங்கள் என்று சொன்னோம்.ஒரு காரியத்தை உடனடியாக முடிக்கக்கூடிய ரெடி ரெஃபரன்ஸ்அல்லது மன ரீதியிலான ரோபோட் என்று கூடச் சொல்லலாம்.சிலர் நினைக்கலாம் இது தானே நாம் தினம் தோறும் செய்து கொண்டிருக்கின்றோம் என்று.ஒன்றை நாம் நினைவில் வைக்க வேண்டும் எப்போது நாம் இப்படிப்பட்ட எந்திரங்கள் இருக்கின்றன என்றும் அது எப்படி நம் வாழ்வின் விலை மதிப்பற்ற காலத்தை சேமித்தும் மற்ற விதங்களிலும் உபயோகமாக இருக்கின்றது என்று உணருகின்றோமோ ,அப்போது அதுவே ஒரு தனிப்பட்ட புரிதல் ரோபோட் ஆக மனதில் உருவாகின்றது.
7.நாம் ஏற்கனவே பெற்ற அனுவங்களின் வாயிலாக உருவாக்கிய மன எந்திரங்கள் எவை எவை என்றும் அந்த எந்திரங்கள் இன்னும் எந்தெந்த விசயங்களில் தனி மனிதனைப் பொறுத்துத் தேவைப் படுகின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் .அனுபவங்களை எப்படிப் பெறுவதுஎன்பதையும் அந்த அனுபவங்களை எப்படி நமது தனிப்பட்ட வாழ்வில் மன ரோபோட்டுகளாக மாற்றுவது என்ற அனுபவத்தைப் பெறுவது நமது திறமையை இன்னும் மேம்படுத்தவும் நமது எல்லா வகையிலான உறவுகளை மேம்படுத்தவும் உதவுகின்றது.சுருக்கமாக இப்படிக் கூட சொல்லலாம் அனுபவங்களை எப்படிப் பெறுவது என்னும் அனுபவத்தினைப் பெறுவது அதனை மன ரோபோட்டாக மாற்றுவது .
8.இப்படிப்பட்ட அனுபவங்களுக்கான அனுபவங்களை பெறுவது பற்றிய அறிவை மேம்படுத்திய பின்பு நீங்கள் பார்க்கும் அல்லது நீங்கள் இருப்பில் இருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட புதிய புதிய அனுபவ எந்திரங்களை நாம் உருவாக்க முடியும் என்பதனையும்.அதனை எந்த வகையில் நமது வழ்வின் வெற்றிக்குப் பயன் படுத்தலாம் என்பதனையும் உணர வேண்டும்.இன்னும் சில எந்திரங்கள் நமது வாழ்வில் தற்போதைய சூழலில் தேவைப் படாமல் இருந்தாலும் பின்னிட்டு அவை தேவைப்படலாம் என்பதனை உணர்ந்து புதிய புதிய வேறுபாடான சூழ்நிலைகளுக்கான எந்திரங்களைத் தயார் செய்து அதனை உங்களது மனம் என்னும் குடோனில் பத்திரமாக்கி வைக்க வேண்டும்.
9..எப்போது எப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக எதிர் கொள்ள நமது எந்திரங்கள் தயாராக இருக்கும்.குறுகிய கால இடைவெளிகளில் இழப்புகள் ஏதுமின்றி நமக்கு வெற்றியை அல்லது நாம் விரும்புகின்ற முடிவை நமக்கு கொண்டு வந்த சேர்க்கும்.அது போல நாம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த நிலைகளில் எப்படிப்பட்ட அனுபவ எந்திரங்களை வைத்து அதனை எப்படிப் பயன் படுத்துகின்றார்கள் என்பதனையும் ,சூழ்நிலைகளை எப்படி இலகுவாக கையாளுகின்றார்கள் என்பதனையும் நாம் கற்றுக் கொண்டு அதனையும் அனுபவமாக்கி அதன் மூலமும் புதிய மன ரோபோட்டுகளை உருவாக்க வேண்டும்.
10.சில மன எந்திரங்கள் உங்களிடம் இருகின்றதா என்று அளவிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் ஒரு காவல்நிலையத்திற்கு சென்று உங்களுக்குத் தேவையான காரியத்தை முடித்துக் கொள்ளுவது,ஒரு மருத்துவமனை,நீதிமன்றம் ஆகிய இடங்களுக்கு சென்று உங்களுக்குத் தேவையான காரியங்களை முடித்துக் கொள்வது,தொல்லை தரும் உறவினர் ஒருவரைக் கையாளுவது,தொல்லை தரும் நண்பர்களைக் கையாளுவது,
11. திடீர் இழப்புகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வது,திடீர் இறப்புக்களால் வரும் நிலைகளை கையாளுவது,நமது வாழ்வில் எப்போது எந்த சூழலிலும் உதவுகின்ற குழுமத்தை ஏற்படுத்துவது,எதிரிக ள் ஏற்படுத்தும் தொல்லையில் இருந்து தப்பிப்பது,புதிய நண்பர்களை ஏற்படுத்துவது இப்படி பலவிதமான விசயங்களில் நாம் ஒரு விசயத்தை முதலில் இருந்து ஆரம்பிக்காமல் ஏற்கனவே ரெடியாக நமது மனதில் சில அனுபவ மன ரோபோட்டுகளை உருவாக்கி வைப்பது என்பதனை பழக்கமாக்கிக் கொள்வோம்.
12..நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் மற்றவர்கள் திறமையாக உருவாக்கி வைத்துள்ள அனுபவ எந்திரங்களினை,மன ரோபோட்டுகளை நாமும் உருவாக்குவது பற்றியும்,மற்றவர்களின் எந்திரங்களுக்கு எரி பொருளாக மட்டும் இல்லாமல் எப்படித் தப்பித்துக் கொள்வது என்பது பற்றியும் நாம் கற்றுக் கொள்வோம்.அந்த வகையில் இந்தப் பதிவைப் படித்து அந்த உணருதலை அனுபவமாக்குவதும் ஒரு மன ரோபோட் தான் இதனை உங்கள் வாழ்வில் பயன் படுத்துவது உங்கள் சமர்த்து.
No comments:
Post a Comment