மன்னிப்பு
மன்னிப்பு என்பது தண்டனையை விட கொடிது
அவரது மனம் தண்டிக்கும்____ஆல்டஸ்ஷக்ஸ்லி
பொதுமக்களுக்கு சகிப்பு அதிகம்
அறிவாளிகளை மட்டும் மன்னிக்கமாட்டார்கள்____ஆஸ்கார் ஒயில்ட்
பலகீனமானவரால் மன்னிக்க முடியாது.
பலமுள்ளவரே மன்னிக்க தெரிந்தவர்____மகாத்மா
தவறுவது மனித இயல்பு
மன்னிப்பதே தெய்வீககுணம்____அலக்ஸாண்டர் போப்
மன்னிப்பு என்பது வேறு மறப்பது என்பது வேறு____மகாத்மா
நாம் யாரையும் மன்னிக்க விரும்புகிறோம்
ஆனால் சுலபமானதையே மன்னிக்கிறோம்____சாமுவேல் ஸ்மைல்ஸ்
மன்னிக்கும் சக்தி உடையவருக்கே அன்பின் சக்தி வலுப்படும்____மார்டின் லூதர்கிங்
உடனடியாக மன்னிப்பவருக்கு
துரோகத்தின் காயம் விரைவாக ஆறும்_____சாமுவேல் ஜானஸன்
தூயஉள்ளம் உள்ளவரின் தவறுகள் யாராலும் மன்னிக்கபடும் ______வால்ட் வில்ட்மேன்
மன்னிப்பு கடந்த காலத்தை மாற்றப் போவதில்லை
ஆனால் எதிர்காலத்தை விரிவாக்கும்___பால் போஸ்.
கோபம்
கோபமுடைய மனிதன் போரில் மட்டுமல்ல
வாழ்விலும் தோற்பான்
கோபத்துக்காக சரியான பதில் வார்த்தை மெளனமே
துணிவு தீ போன்றது வெறும் கோபம் புகை போன்றது___டிஸ்ரேலி
கோபம் என்பது தான் வீழ்த்தியவரின்
சாம்பலோடு தானும் அழியும்___செனீகா
அடிக்கடி கோபப்படுபவன்
விரைவில் வயோதிகனாகி விடுவான்____அரிஸ்டாடில்
ஒரு சிறு ஆத்திரமான வினாடி
பல பெரிய திட்டங்களை சீரழிக்கும் கன்பூசியஸ்
கூரானது நாக்கு கோபத்தால் இன்னும் கூராகும்_லாங்பெல்லோ
நீதியோ அநீதியோ
கடுமையான சொற்கள் தீங்கிழைப்பைவையே_சொபக்ஸ்ஸ்
நம்மால் ஒரு மணி நேரம் தொடர்ந்து
யாரிடமும் அன்பாய் இருக்க முடிவதில்லை_டென்னிஸன்
சினம் என்பது முட்டாள்களின் சேற்றில் வளரும் செடி_ஜன்ஸ்டீன்
மனிதன்
ஒரு ரகசியக் கதவு வழியாக
ஒவ்வொருவருக்குள் இறைவன் வருகிறான்_எமர்சன்
இறைவன் கொடுத்த பரிசு இந்த வாழ்வு,
சரியாக பயன்படுத்துவது மனிதன் முயற்சி _வால்டேர்
இறைவன் நமக்கு கொடுத்த முகம் ஒன்று
அதற்கு நாம் முகமூடி போட்டுகொள்கிறோம் ___ஷேக்ஸ்பியர்
இறைவன் தந்திரமானவன்
ஆனால் ஒரு போதும் ஏமாற்ற மாட்டான்___எய்ன்ஸ்டீன்
இறைவன் ஆசிர்வாதம் செய்வதற்கு முன்
பல அல்லல் தருவான்__மகாத்மா
இறைவன் மனிதனை படைத்த பின் திருப்தியடைந்தான்
ஆனால் ஏமாந்து விட்டான்__சாமுவேல் பட்லர்
இறைவா என்னை உனது தொண்டரிடமிருந்து காப்பாற்று
இறைவன் தீயவரை தண்டிக்கிறான்
நல்லவரை பாராட்டுகிறான் என்பதை நம்பமுடியவில்லை___எய்ன்ஸ்டீன்
இறைவன் மனிதனை படைத்த போது
தனது திறமையில் தோற்றுவிட்டன்___ஆஸ்கார் ஒயில்
இறைவன் நம்முடன் இருக்கும் போது
எவர் நமக்கு எதிராக இருக்க முடியும்___பைபிள
அகங்காரம்
எனது அதிட்டம் வீழ்ந்த போது அகங்காரம் வீழ்ந்தது ___சேக்ஸ்பியர்
ஏழை நாடுகள் பசியிலே வளர்ந்த நாடுகள்
பசியும் அகத்தையும் ஒன்றுபடுவதில்லை_ஸ்விபிட்
அழிவுக்குமுன்னே அகத்தையும்
வீழ்ச்சிக்கு முன்னே வீராப்பும் ஒளிவிடும்
மனிதருடைய அகந்தை
தேவதைகளாகவே விரும்புகிறது__அலக்ஸான்டர் போப்
முடிவில்லாத அகங்காரம் உள்ளவர்
எப்போதும் வளராது சிறிதாக தேய்வார்___வால்டேர்
காயப்பட்ட அகந்தையின் தழும்புகள்
முதுமையிலும் துயரம் தரும்___சந்தாயானா
அகந்தையினால் நம்மை நாமே ஏமாற்றிகொள்கிறோம்
ஆழமான ஆன்மா அதை ஏற்பதில்லை_கார்ல்யுங்
அகந்தையும்/ சினமும் அகிம்சையை ஏப்பம் விடும் அரக்கர்கள்__மகாத்மா
பெருத்தன்மை என்பது சக்திமீறி கொடுக்கும்
கர்வம் தேவையைகூட மறுக்கும்__கலீல்கிப்ரன்
ஆசை/அகந்தை என்ற அழுக்கு நீங்கினால்
மனம் பரிசுத்தமான அமைதியடையும்___சாய்பாபா
No comments:
Post a Comment