Thursday, June 20, 2013

தேவைகளை உருவாக்குங்கள்

இடம் வாங்கி விற்கும் நிறுவனம் ஒன்றில்,ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்த நிலம் நீண்ட நாட்களாக வாங்க ஆள் இல்லாமல் இருந்தது.அதன் உரிமையாளர் என்ன செய்வது என்று யோசிக்கையில் ஒரு விற்பனையாளன்,தான் அந்த இடத்தை விற்றுத் தருவதாகச் சொன்னான்.அவனும் எப்படியோ பேசி ஒருஆளிடம் நிலத்தை விற்றுவிட்டான்.உரிமையாளருக்கு அவன் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது.

பத்து நாள் கழித்து கடும் மழை பொழிந்தது. அந்த நிலமோ சரியான பள்ளத்தில் இருந்ததால் முழுவதும் நீர் சூழ்ந்துவிட்டது.வாங்கியவருக்கு படுகோபம்.அவர் தான் ஏமாந்ததை எண்ணி,அந்த விற்பனையாளனிடம் வந்து கடுமையாகப்பேச ஆரம்பித்தார்.அவன் அமைதியாகச் சொன்னான்,''உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் பணத்தை பத்து நாள் வட்டியுடன் வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த இடத்தை வாங்க நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்"

வாங்கியவருக்கோ ஒரே திகைப்பு. 'என்ன விளையாடுகிறீர்களா?இந்தநிலையில் இந்த நிலத்தை வாங்க யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது?'என்று கேட்டார்.விற்பனையாளன் சொன்னான்,''இந்த இடத்தின் அருமை உங்களுக்குத் தெரியவில்லை.தண்ணீர் வடிந்ததும்இங்கு வீட்டைக் கட்ட வேண்டும். பின் அடுத்த முறைமழை பெய்யும்போது நீரை வெளியேறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அப்போது உங்கள் வீடு இந்த நகரத்திலேயே ஏரியிலே கட்டப்பட்ட முதல் வீடாக இருக்கும்.யோசித்துப் பாருங்கள்.ஒரு ஏரி வீடு கட்டுவதென்பது எவ்வளவு கடினமானது .இங்கு இயற்கையாகவே ஒரு ஏரி வீடு கட்டப்போகிறீர்கள்.நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள் இடம் கைமாறிப் போய்விட்டால் உங்களால் அழகிய ஏரி வீடு கட்ட இயலாமல் போய்விடும்"

வாங்கியவர் அமைதியானார்.இந்த சந்தர்பத்தை உபயோகித்து,விற்பனையாளன்,''தற்போது உங்களுக்கு நான் ஒரு உதவி செய்ய முடியும்.எங்களிடம் இரண்டு சிறிய படகுகள் இருக்கின்றன உங்களுக்காக அவற்றைக் குறைந்த விலைக்குத் தருகிறோம்.அவற்றை நீங்கள் நீரில் செல்ல பயன் படுத்திக் கொள்ளலாம்". இப்படிச் சொல்லி நீண்ட நாட்களாக பயனின்றி இருந்த இரண்டு படகுகளையும் விற்றுவிட்டான்.

நல்ல விற்பனையாளன் தேவைகளை உருவாக்கிவிடுவான்..

No comments:

Post a Comment