சிறந்த இலட்சியத்தைக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்கினால் வெற்றியை நிச்சயமாக அடைய முடியும். தளர்வின்றி சோர்வு அடையாமல் செயலாற்றஇயலும். இடையில் ஏற்படும் இன்னல்களைக் கண்டு என்றும் நம்முடைய இலட்சியத்தை விட்டு விடக்கூடாது.
எப்பொழுதும் இலட்சியமும் திட்டமும் கை கோர்த்துச் செல்ல வேண்டும். சரியான திட்டம் இருந்தால்தான் செயல் வெற்றியுடன் அமையும். திடமான மனநிலை கொண்டிருந்தால் தான் திட்டம் தீட்டுவதில் எந்தவித சிரமமும் இருக்காது.
இலட்சியத்தை வாழ்க்கைக்கு எற்ப சரியாகத் தீர்மானித்து திடம் பெறச் செய்து விட்டால் அதற்கான திட்டம் எல்லாம் தெளிவாக அமைந்துவிடும். திட்டம்போட்டு தான் எதனையும் செய்ய வேண்டும்.
திட்டம் இலட்சியத்துடன் ஒன்றி இருக்கும் பொழுதுதான் வெற்றி தானாகவே வந்து சேரும். வெற்றி கிடைக்கும் வரையில் வீண் வேலைகளில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கி விடக்கூடாது.
வெற்றிக்கோட்டையின் பலம் பொருந்திய தூண்கள் தான் இலட்சியம். எப்பொழுதும் எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி கொள்வதிலே தான் இன்பம் ஏற்படும். அதில் ஒரு தனிப் பெருமையும் உண்மையான மகிழ்ச்சியும் உண்டாகும்.
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களும் துயரங்களும் தான் ஒரு விதத்தில் மறைமுகமாக உதவி செய்கின்றன என்று கூறமுடியும்.
“இலட்சியத்தில் உறுதி படைத்தவருக்குத் தோல்வியே கிடையாது” என்று கூறுகிறார் பிரான்ஸ் நாட்டு எழுத்ததிபர் விக்டர் யூகோ.
காரல் வில் ஹோம் என்றஅறிஞர் தன் மனைவியுடன் வாழ்ந்த முப்பத்தெட்டு வருட வாழ்விலும், நாள் தவறாமல் நூறு வரிகள் கொண்ட கவிதையைத் தினமும் அன்பளிப்பாக எழுதி வந்தார்.
மனைவி இறந்த பின்பும் ஆறு ஆண்டுகள் அவர் உயிரோடு இருந்தவரை தவறாமல் முன்பு உள்ள வழக்கப்படியே மனைவியைப் பற்றிய கவிதையை நாள்தோறும் எழுதி அவளுடைய சமாதிக்கு சமர்ப்பித்து வந்தார்.
இவரால் மட்டும் எப்படி முடிந்தது? எழுதியே ஆக வேண்டும் என்ற இலட்சியத் துடன் செயல்பட்டதுதான். தன்னுடைய இலட்சியம், தினமும் ஒரு கவிதையை எழுதுவது தான் என்று முடிவு செய்தார்.
இவர்களால் முடிந்தது நம்மால் முடியாதா என்ன? கட்டாயம் நம்மாலும் முடியும்.
ஒரு பழைய கித்தான் துணியைக் குழல் போலச் சுற்றி அதன் இருமுனைகளில் கண்ணாடி வில்லைகளைப் பொருத்தி நட்சத்திரங்களைப் பார்த்தார்.
கல்லூரிக்குப் போகாமல் நூல் நிலையத்திற்குச் சென்று வானவியல் நூல்களைப் படிப்பதில் நேரத்தைச் செலவழித்தார்.
கார்லைல் என்ற அறிஞர் கஷ்டகாலம் என்பதை என்னுடைய காலின் கீழ் வைத்து மிதித்து வெற்றி கொள்வேன் என்று கூறுகிறார். முதலில் ஏற்படும் தடையைச் சரிசெய்து சிரமப்பட்டுத் தாண்டி விட்டால் அதன் பிறகு வரும் தடையைத் தாண்டும் சக்தி தானாகவே வந்து விடும்.
அதனால் எடுத்த காரியத்தை ஒரு போதும் கைவிட்டு விட வேண்டாம். துணிவுடன் செல்வோம். வெற்றி அடைய சரியான திட்டம் இருக்கும் போது தயக்கம் எதற்கு?
அப்படியே நெருக்கடி ஏற்பட்டாலும் அதற்கு இடையேதான் வெற்றி பெறுவதற்கான வழி பிறக்கும் என்பதனை என்றும் மறந்து விடவேண்டாம். முதலில் தோல்வியைப் பெற்றால்தான் இறுதியில் வெற்றியின் பெருமையை உணரமுடியும்.
நம்மால் எதையும் செய்ய முடியும். நம்மிடம் எல்லாவிதமான ஆற்றல்களும் இருக்கின்றன. அதனைப் பயன்படுத்தி வெற்றி பெறஇயலும். இலட்சியம் தூய்மை உடையதாக இருந்தால் செயலும் அப்படியேதான் இருக்கும்.
தூய்மை நம் உள்ளத்தில் பரவுமானால் நம் செயல் பளிங்கு போல் காட்சி அளிக்கும். வெற்றித் திருமகளைத் தினமும் வணங்கு. அவளுடைய அருளுக்கு ஆளாகிவிடு. அவளை பார்ப்பதற்கு நாட்களைக் கடத்தாதே.
நம்முடைய இலட்சியத்தாலும் திறமை யாலும் அவளை நம்முடையதாக்கிக் கொள் ஒரு முறை நம்மிடம் வெற்றித் திருமகள் வந்து விட்டால் மீண்டும் திரும்பிச் செல்வதில்லை என்று குறிப்பிடுகிறார் ஜேம்ஸ் ஆலன்.
“நீ வெற்றி பெறவேண்டுமா? அப்படி யானால் உன்னுடைய இலட்சியத்தை விட்டு விடாதே” என்கிறார் சாமுவேல் ஸ்மைல்ஸ்.
வான ஆராய்ச்சியை தன்னுடைய இலட்சியமாகக் கொண்டார். புது தொலை நோக்கி வாங்கியாக வேண்டும். பணம் கையில் இல்லை! பணத்திற்கு எங்கே போவது?
பண்ணை வேலையைத் தவிர ஓய்வு நேரங்களிலும், அதிக வேலை செய்து பணத்தைச் சம்பாதித்தார். பலமாதங்கள் உழைத்துப் பணம் சேர்த்தவுடன் தொலைநோக்கி கருவிக்கான சாமான்களை வாங்கினார்.
இவரே தொலைநோக்கியை உருவாக்கினார். இதனைக் கொண்டு செவ்வாய் கோளை ஆராய்ந்தார். இந்தக் கிரகத்தில் கண்ட புதுமைகளை விவரித்து வான்நிலைய ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பினார்.
இவருடைய இலட்சியமும், திட்டமும், ஆர்வமும் கண்டு வான ஆராய்ச்சி நிலையத்தார் வேலையைத் தந்தனர். அங்கு பல ஆண்டுகள் உழைத்தார். இரவு பகலாய்ப் பாடுபட்டார். அதன் பயன் புளுடோ என்னும் புதிய கிரகத்தைக் கண்டுபிடித்தார்.
அவர்தான் கிளைட் டிராம்போ! அமெரிக்க வான அறிஞர்களில் முதன்மை யானவர் என்றசிறப்புப் பட்டம் பெறுவதற்குக் காரணமாக அமைந்தது. இதற்கு ஆதாரமாக இருந்தது அவருடைய லட்சியம் தான்.
இதனால்தான் புது கிரகத்தையே அவரால் கண்டுபிடித்து தர முடிந்தது. இலட்சியத்தைத் துணை கொண்டு செயல்படும் பொழுது நமக்கு வேண்டிய முக்கியமான தேவைகள் கூட நம்மை வந்து சேரும்.
நல்ல இலட்சியம் வாய்ப்பைத் தானாகக் கொண்டு வந்து சேர்க்கும். வாய்ப்பு இலட்சியத்தை நிறைவேற்றஉதவி செய்யும். வாய்ப்பு சரியாக அமைந்தாலே வெற்றி நமக்கு தான் என்று உறுதிபடுத்திக் கொள்ளமுடியும்.
No comments:
Post a Comment