Friday, June 7, 2013

கண்ணுக்கு தெரியாத வேலி

நம்மில் பலர் பெரும்பாலும் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே செயல்படுகிறோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வோரு மாதமும், ஒவ்வோரு வருடமும் ஒரு குறுகிய வட்டதுக்குள்ளேயே நமது ஒட்டம் நின்று விடுகிறது.

    ஏன் நாம் மாற்றத்தை விரும்புவதில்லை?
   ஏன் நமக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்தி புதிதாக நாம் ஏதுவும் முயற்சிப்பதில்லை?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான்… அதுதான்

    கண்ணுக்கு தெரியாத வேலி

கூண்டுக்குள் இருக்கும் கிளியை பாருங்கள். நாள் கணக்கில் அது கூண்டுக்குள்ளேயே இருந்து பழகி விடுகிறது. பின்னர் அதை கூண்டுக்கு வெளியே விட்டாலும் சிறிது நேரம் உலாவி விட்டு திரும்ப கூண்டுக்கே திரும்பி விடும்.

ஆட்டு மந்தையை பாருங்கள். மந்தையை சுற்றி வேலி போடப்பட்டிருக்கும். ஆடுகளை அந்த வேலிக்குள்ளேயே மேய்த்து பழக்குவார்கள். ஆடுகளும் அந்த வேலிக்குள்ளேயே மேய்ந்து பழகிவிடும்.  பின் அங்கு வேலி இல்லையென்றாலும் அது குறிப்பட்ட தூரத்தை தாண்டிச் செல்லாது.

நாமும் அப்படித்தான். நாம் வளர வளர தவறான எண்ணங்களும், அவநம்பிக்கையும் கூடவே வளர்கிறது. நாமும் அதை நம்ப ஆரம்பித்து விடுகிறோம். நமது வட்டத்தை சுருக்கிக் கொள்கிறோம். வழக்கத்தை மாற்றி, மீறி புதுமையாக எதையாவது செய்தால் உலகம் பழிக்குமோ என்று அஞ்சுகிறோம். கண்ணுக்கு தெரியாத வேலியை நமக்கு நாமே போட்டுக் கொள்கிறோம். அதை உண்மையான வேலி என்று நம்பி விடுகிறோம்.

நமது வேலையிலும் வாழ்க்கையிலும் ஒரு சவால் விடும் சூழ்நிலை வரும்போது இந்த வேலியின் பயத்தினால் அதை எதிர்க்கொள்ளாமல் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகிறோம். கானல் நீரை உண்மை என்று நம்புவதைப் போல இந்த கற்பனை வேலியை உண்மை என்று நம்பி நம்மை நாமே சுருக்கிக் கொள்கிறோம்.

வேலியை எதிர்கொள்ள தயாராகுங்கள். அதற்கு சவால் விடுங்கள். இனிமேல் 
சவாலான சமயங்களை எதிர்கொள்ளும் போது, அதை பார்த்து ஒதுங்காமல் உங்கள் 
மனததையும் எண்ணத்தையும் ஒருங்கிணைத்து அதை எதிர்க்கொள்ளுங்கள்.

ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

    எதை பார்த்து நீங்கள் ஓதுங்குகிறீர்களோ அது உங்களை விடாமல் எதிர்கொள்ளும்

    அதையே நீங்கள் எதிர்கொள்ளும் போது உங்கள் கையில் வெற்றி நிச்சயம்!!

No comments:

Post a Comment