Monday, June 10, 2013

முன்னேறியவர்கள் சொன்னதை முன் மாதிரியாகக் கொள்

முன்னேறியவர்கள் சொன்னதை முன் மாதிரியாகக் கொள்
=========================================================

நம்பிக்கைச் செடியை நட்டு வை

உழைப்பு என்ற நீரை ஊற்று

நாணயம் என்ற நல்லுரம் இடு

உறுதி என்ற வேலி போடு

எதிர்ப்பு என்ற களைகளை
 எச்சரிக்கையுடன் அகற்று

பொறுமையாய் காவல் இரு

பின்னர் வெற்றி பூவாய், காயாய், கனியாய் உன் கையில்!

ஆம் எல்லாம் உன் கையில்!!!  தன்னம்பிக்கையில்

உன் வெற்றியை யாரும் தடுக்க முடியாது
=========================================

 காற்றாய் இருந்துவிடு
     உன்னை யாரும்  தடுக்க முடியாது

 கடலாய் இருந்துவிடு
     உன்னை யாரும்  அளக்க முடியாது

 மழையாய் இருந்துவிடு
     உன்னை யாரும்  மறுக்க முடியாது

 மலையாய் இருந்துவிடு
     உன்னை யாரும்  மறைக்க முடியாது

 ஒளியாய் இருந்துவிடு
     உன்னை யாரும்  பிடிக்க முடியாது

 கடின உழைப்போடு நீ  என்றுமே இருந்துவிடு
   உன் வெற்றியை  யாரும் தடுக்க முடியாது

2 comments:

  1. மேலே உள்ளது எனதுவலைப் பக்கத்தில் நான் எழுதிய கவிதை. பகிரும்போது என்பெயரையும் சேர்த்திருந்தால் மகிழ்வேன்.

    ReplyDelete