Wednesday, December 4, 2013

எது வெற்றி?

எது வெற்றி?

"   எண்ணிய எண்ணியாங்கு எய்துதல்  "  

இதுவே வெற்றி என்று கொள்ளப்படுகிறது. இதனை, மனதினில் ஆசைப்பட்டதை எப்பாடுபட்டயினும் அடைவது, உள்ளக் கனவுகளை நனவாக்குவது, எதிலும் முன்னணியாய், பலருக்கு முன்னோடியாய் இருத்தல் என்றும் கொள்ளலாம்.

இலக்கினை  ஒரே முயற்சியில் எட்டுதலும் வெற்றி தான். அதேபோல், தோல்விகள் ஏற்படினும், மேற்கொள்ளும் முயற்சிகளில் தொய்வேற்படாது, மனம் தளராது, விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும்  இலக்கினை எட்டிப் பிடித்தாலும் வெற்றி தான்.

 ஆக, வெற்றி என்பது,

செய்ய எண்ணியதை செம்மையாகச் செய்து முடித்தல். 
  படிப்படியான முன்னேற்றம். 

 " பல தொழில் கற்றவன் ஒரு தொழிலும் செய்யான்" ( Jack of All trades, but Master  of  None ) என்றில்லாமல், ஏதேனும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் முன்னேற்றம் கண்டு , தனித்துவத்துடன் விளங்குதலே ஆகும்.  

நினைத்த இலக்கை அடையும் வரை முயற்சியைக் கைவிடாது இருத்தல். விவேகானந்தரின் கூற்றுப்படி,"Arise, Awake and Stop not till the Goal is Reached" 

எத்துனை முறை  தோற்றாலும், மனம் தளராது, அடுத்த முயற்சியை புத்துணர்வுடனும், தன்னம்பிக்கையுடனும் மேற்கொள்வது. 

முயற்சி மேற்கொள்வதன் நோக்கம் "வெற்றி" . வெற்றி பெறத் தேவை "உழைப்பு" . உழைப்பிற்கு தேவை " உற்சாகம் ". எனவே, மேற்கொள்ளும் காரியம் எதுவாயினும் உற்சாகத்துடன் ஈடுபடுதல்.
                                  
வெற்றி ! - அதுவே மனதின் நோக்கம்

அதற்குத் தேவை - தளர்விலா ஊக்கம்
என்றும் கூடாது - தோல்வியால் ஏக்கம்
படிப்படியான தொடர் வளர்ச்சி - அதுவே ஆக்கம் !!!

No comments:

Post a Comment