தங்க வாக்கியங்கள் வெற்றியின் ரகசியம்.
கீழ் கண்ட தங்க வாக்கியங்களை கவனமாக கற்று அதன் உட் பொருளை உணர்ந்து அதை தன் வாழ்க்கையில் கடை பிடித்து, எதை அடைய நினைக்கிறோமோ அதை அடைந்தே தீர்வோம் என்பதை அறிவாய்.
வாழ்க்கை என்பது ஒரு கலை.
மனிதர்கள் எல்லோரும் வாழ்க்கை என்றால் என்ன வென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். வாழ்க்கை என்றால் அதன் முழு அர்த்தம் கண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள் மட்டுமே. மற்றெல்லோரும் மிருக வாழ்க்கையினை விட கீழான வாழ்க்கை வாழ்பவர்களே. ஆகவே தற்போதுள்ள வயிற்று பிழைப்புக்கான கல்விவினை கற்ககும் நேரத்தில் ஒரு சதம் நேரத்தை வாழ்க்கை கல்வி கற்க செலவிடுங்கள். நீங்கள் பிறப்பின் முழு பயனை அடைந்தே தீர்வீர்கள்.
மனிதன் சாகா வரம் பெற்றவன்.
மனிதர்கள் தனது மதிப்பு தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தன் உண்மையான மதிப்பை தெரிந்து கொண்டாள், இந்த உலகமே சொர்க்க பூமியாக திகழும். நாம் சாகும் மனிதர் களைத்தான் தினம் பார்த்துக் கொண்டி ருக்கிறோம். ஆனால் சாகாத மனிதர்களை நாம் கண்டது இல்லை. சாகா வரம் பெற்ற மா மனிதர்களை நாம் பார்த்தது இல்லை. அப்படி பட்ட மனிதர்களை நாம் சந்திக்க விருபுவதில்லை. அப்படி அறியாமல் அவர்களை சந்தித்தாலும், அல்லது அவர்கள் நம் கூடவே இருந்தாலும், அவர் நம்மிடையே பேச தொடங்கினால் இரண்டு காதுகளை கொண்டு அவரது கருத்துகளை கேட்டு அதைப் பற்றி சிந்திக்க தயாராக இல்லை. அதற்க்கு பதிலாக சுய புராணத்தை அவிழ்த்து விட ஆரம்பித்து விடுகிறோம். நமது அறியாமையினை கொட்டி தீர்க்கிறோம். அதனால் அவர்கள் மௌணியாகி விடுகிறாகள். இதற்க்கு பலவினையே காரணம். மனிதன் அறியாமையினால் மாண்டு போகிறான். தான் நினைத்ததை ஒன்ரை கூட முழுமையாக அனுபவி க்காமல். அவனது அறியாமையே காரணம். ஒவ்வொரு மனிதனும் சாகாவரம் பெற்றவனே.
அகங்காரத்தை அழித்து விடு.
பிறப்புக்கு காரணம். அகங்காரமே அனைத்து துன்பங்களுக்கும், இறப்புக்கும் கரணம் அகங்காரமே. உலக மக்கள் அனைவருமே, தனக்கு தெரியாதது ஒன்றுமே இல்லை, அதனால் எல்லோரும் தன் பேச்சைத்தான் கேட்க வேண்டும் என்று கருதுகிறார்கள். தன் அறிவுக்கும் வளர்சிக்கும் தடை போட்டு விடுகிறார்கள். தன் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை சொல்லு பவர்கள் மீது கோபம் கொள்கிறார்கள். அதனால் நம் க,ருத்துக்கு மாறு பட்டவர்கள் மீது கோபம், பொறமை ,கால்புணர்சி கொண்டு பழிவாங்க அவர்களுக்கு தெரிந்த அனைத்து அழிவுக்கான செயல்களிலும் இறங்கி நட்பு, குடும்ப, சமுதாய உறவுகள் அனைத்தையும் கெடுத்து விடுகிறார்கள். தன்னையும் அழித்து கொள்கிறார்கள். மற்றவர் சொல்லும் கருத்து நல்லவைகளாக இருந்தால் அவற்றை நமதாக்கி கொண்டு வாழ்கையில் கடை பிடித்து முன்னுக்கு வர வேண்டும் . கெட்டதாக இருந்தால் அவற்றை மறந்து விட்டு நாம் வாழ்கையில் முன்னேற காலத்தை செலவழிக்க வேண்டுமே தவிர அவர்களை நினைத்து பழிவாங்க காலத்தையும், வாழ்க்கை யினையும் செலவழிக்க கூடாது..
கோபத்தை கொன்று விடு.
அகங்காரத்துக்கு அடுத்த படியாக மனிதனின் துன்பத்திற்கு காரணம் கோபமே ஆகும். கோபம் ஏன் வருகிறது. நாம் அறிந்தோ அறியாமளோ நம்மை பற்றி ஒரு கருத்தை ஆழ் மனதில் பதிய வைத்திருக்கிறோம். அதற்க்கு மாற்றாக ஒருவர் கூறினால் உடனே எதிர் விளைவாக ஒரு நொடி கூட சிந்தியாமலே எழும் உணர்சியே கோபமாகும். அதன் விளைவு என்ன என்பது யாவரும் அறிந்ததே. நாம் எல்லோரும் நம்மை மேம்படுதிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லை. நாம் எல்லோரும் ஒரு குறுகிய வட்டத்தை உருவாக்கி கொண்டு, அந்த வட்டத்துக் குள்ளே வாழ ஆசை பட்டு வாழ்ந்து கொண்டு வருகிறோம். நம்மை பற்றியோ அல்லது ஒன்றைப் பற்றியோ ஒருவர் கூறும் போது அவற்றை இரு காதுகளை கொண்டு கேட்க வேண்டும். பின் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும் அதில் உண்மை இருப்பதாக அறிவு ஒப்புக் கொண்டாள் அதை தனது வாழ்வில் கடை பிடிக்க வேண்டும். இல்லா விட்டால் அதை ஒதுக்கி விட வேண்டும். பெரும் பாலோர் பொறாமை யினால் எதையாவதை சொல்லுவார்கள். அறியாமையாலோ, பொறாமை யினாலோ ஒருவர் ஒன்றை கூறினால் அதை பொருட் படுத்தக் கூடாது. அவர்களின் பொறாமைக்கு இடம் கொடுத்து நமது அமைதியினையும் ஆனந்தத்தையும வாழ்க்கையினையும் கெடுத்து கொள்ள கூடாது.
சுற்றத்தை விலக்கி விடு.
அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை சின்னமா சித்தப்பா பெரியம்மா, பெரியப்பா, அத்தை, கணவன், மனவி, பெண்டு, பிள்ளைகள் கொண்டவர், கொடுத்தவர் மற்றும் நம்மை சுற்றி இருப்பவர்கள் சுற்றத்தா வார்கள். திருமணம் ஆகும் வரை அண்ணன் தம்பி உறவு பெற்றோர் பிள்ளைகள் உறவு மிகவும் புனிதமாகவும் உண்மைமையான அன்போடும் வாழ்வார்கள். திருமனத்திற்கு பின் பங்காளிகளாகவும், எதிரிகளாகவும் மாறி விடுவார்கள். வெளி எதிரிகளைவிட நம்மை அழிப்பதில் முழு கவனம் செலுத்து வார்கள். பெண் கொண்டவர்களும் பெண் கொடுத்தவர்களும். நம் வீட்டில் குழப்பத்தை உருவாக்கி ஆதாயம் தேட முயற்சி செய்வார்கள். நல்ல குடும்பத்தை குட்டி சுவராக்கி விடுவார்கள். சுற்றி இருப்பவர்கள் மற்றவர்கள் முன்னேற்றத்தை பொருக்க முடியாமல் தன் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாமல் மற்றவர்களைப் பற்றி குறி வைத்து அவர்களை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு காலத்தை களிப்பார்கள். உறவினர்களை ஒரு விழாவுக் அழைக்கப்பட்டால், முன்பே வந்து உணவு உண்டு உறவுகளுடன் அன்பாக, இனிமையாக உறவாடி எல்லோரையும் வாழ்த்தி செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் பெருமையினை காட்டு வதர்க்காக ஆடம்பரமான உடைகளையும், ஆபரணங்களையும், போலி நகைகளையும், அணிந்து கொண்டு நேரம் கழித்து போனால் தான் கௌரவம் என்று காலம் தாழ்த்தி வருவார்கள். வந்ததும் தனியாக ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு எங்கேவது குறை இருக்குமா என்று கண்டு பிடிக்க நோட்டம் விட்டு கொண்டிருப்பார்கள். முடிந்தால் அங்கேயே குழப்பத்தை உருவாக்கி விடுவார்கள் அல்லது மறைமுகமாக அங்கேயே அல்லது வெளியே சென்று குழப்பத்தை உருவாக்கி குடும்பத்தை பிரித்து விடுவார்கள். உறவினர்கள் தம் உடமை சொத்து சுகங்களை அபகரிப்பதில் ஈடுபடுவார்கள். கால் காசு உதவி செய்யார். ஒரு நல்ல எண்ணத்தை கூட எண்ண மாட்டார்கள். ஆனால் நீங்கள் அவர்களிடம் உணமையாக இருங்கள், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செவ்வனே செய்யுங்கள். அவர்களிடமிருந்து எதையும் எத்ர்பார்க்காதிர்கள். அவர்கள் செய்த துரோகங்களை நினைத்து காலத்தை விரையமாக்காதீர்கள். பழி வாங்க நினையாதீர். அவர்களை திருத்த முயற்சி செய்யாதிர்கள். அவர்கள் செய்த தீவினைக்கான தண்டனையினை அனுபவிப்பார்கள். கடவுளால் கூட மாற்ற முடியாது.
மனித நேயத்தை வளர்த்துக் கொள்.
இயற்கை என்பது ஒன்றுதான். அறிவு, ஆற்றல், பொருள் என்பது எல்லாம் ஒன்றுதான். இவை மூன்றும் சேர்ந்ததுதான் கடவுள் என்று பெயர். நாமங்கள் எதுவாயினும், கடவுளும் ஒருவரே. அதனால் உலகில் உள்ள மக்கள் எல்லாம் ஒரு கடவுளின் குழந்தைகளே. சாதி, மதம், நாகரிகம், கலாசாரம் இவைகள் எல்லாம் காலத்தாலும், சூழ் நிலையாலும், இடத்தாலும், அறிவின் வளர்சியின் காரணமாய் ஒரு சிலரால் தோற்றுவிக்கப் பட்டவைகள்.. இந்த மாறுபாடுகள் சமுதாய ஒற்றுமைக்காகவும் ஒரு ஒழுங்கிற்காவும் ஏற்பட்டவைகள். இவ்வாறு இல்லாவிட்டால் ஒருவருக்கு ஒருவர் அடிபட்டு மாண்டு போவார்கள். அதற்க்காகதான் இவைகள் ஏற்பட்டுள்ளன. அதனால் அதன் உண்மை அறிந்து “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று வாழ கற்று கொள்ள வேண்டும். உண்ண உணவு உடுக்க உடை, இருக்க இருப்பிடம், ஆரோகியமான வாழ்க்கை வாழ அவரவர் நாட்டினரோ, மதத்தினரோ, சாதினரோ அல்லது உறவினரோ மட்டும் கொடுப் பதில்லை. உலகில் உள்ள மக்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக வாழ வேண்டும். இன்று பகைவராக இருப்பவர் நாளை நண்பராகலாம். இன்றைய நண்பர் நாளை பகைவராக மாறலாம். நல்லவர் கெட்டவராகவோ, கெட்டவர் நல்லவராகவோ மாறலாம். அதனால் வேற்றுமைகளை மறந்து மனித நேயத்தோடு வாழ கற்று கொள்ளுங்கள்.
லட்சியத்தை உறுதி செய்துக் கொள்.
ஒவ்வொரு மனிதனும் நாம் எவ்வாறு பிறந்தோம், ஏன், எதற்காக பிறந்தோம், எதனை நோக்கி பயணம் செய்கிறோம், தனது ஆற்றல்தான் என்ன? வாழ்கையின் அர்த்தம் என்ன, முடிவுதான் என்ன. என்று அறியாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டு, வெளியில் ஆடம்பரமாகவும், வளமோடும், மகிழ்சியோடும் , எல்லாம் அறிந்தவர் களாகவும், தனக்கு தெரியாதது எதுவம் இல்லை என்றும் தன் சொல்லை தான் எல்லோரும் கேட்க வேண்டும் மதிக்க வேண்டும் என்று ஆணவத்தோடும், அகங்காரத் தோடும் உலகில் உள்ள ஒவொரு மனிதரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உள்ளுக்குள் புழுவாக, மற்றவர்களிடம் போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டும். மற்றவர்களை கண்டு பொறாமை கொண்டு அவர்களை அழிக்க வஞ்சகமாக திட்டமிடட்டு ,அதை செய்ய முடியாமல் நொந்து நூலாகி என்ன செய்வ தென்று புரியாமல் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதுதான் உண்மை, நிதர்சனம்.
சித்தர்கள் தான் இயற்கையின் தோற்றம், நிலைப்பு, ஒடுக்கம் இவற்றை முழுமையாக உணர்ந்தவர்கள். அவர்கள் அஷ்டமா சித்துக்களை அடைந்த வர்கள் நவலோகங்களையும் தங்கமாக்க வல்லவர்கள், இறந்தவர்களை பிழைக்க வைக்கும் ஆற்றல் பெற்றவர்கள், பசி, தாகம், நித்திரை, சோம்பல் இவற்றை அறவே ஒழித்தவர்கள். கோடிக்கணக்கான ஆண்டுகள் இந்த பூத உடலுடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். இப்பொழுதும் நம்மிடையே அவர்கள் அடக்கமாகவும் அமைதியாகவும் ஆனந்தமாகவும், தன்னை வெளியில் காட்டி கொள்ளாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அனுபவ குருவை நாடு.
எந்த துறையாக இருப்பினும் அதில் அனுபவம் பெற்ற குருவை நாடி அந்த அறிவை பெற்றால் விரைவில் அதில் நிபுணராகி வெற்றி வாகை சூடலாம். அனுபவ குருக்கள் அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பார்கள். “வாய் பேசா குரு வாய் திறந்தாள், எப்படி பட்ட வித்தையும் வெகு சுலுவே”.
வாழும் வழியினைத் தேடு
அனுபவ குருவை அடையும் வரை பிழைப்புக்கான வழியினை தேடு. தன் தாய், தந்தை, மனவி, பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செவ்வனே செய்து கொண்டு மற்ற நேரங்களில் சித்தர் நூல்களை படித்துக் கொண்டும் , பெரியவர்களை சந்தித்து சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறவும். நாம் சரியான பக்குவ மானால் இறைவன் நமக்கு எதோ ஒரு வழியில் கற்று கொடுப்பார். அதுவரை நம்மை பக்குவ படுத்துவதில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தன பிழைப்பை நடத்த அவர்களுக்கு தெரிந்த துறையினை தேர்ந்து எடுத்து அதில் பயிற்சி எடுக்க தொடங்கு கிறார்கள். அதற்கான அறிவை தருவதற்காக கல்வி கூடங்கள், கல்லூரிகள் அறிவியல் கூடங்கள் ஈசல் போல் பெருகிவிட்டன. இவைகள் எல்லாம் வியாபர கூடங்களாக மாறி விட்டன. ஒரு வேலைக்கு செல்வதற்க்கு ஒருவன் இருபுது ஆண்டுகள் படிக்க வேண்டும் அதுவும் அல்லாமல் LKG, UKG போன்ற கொடுர கல்வி. அதுவல்லாமல் அப்பறண்டிசி, இவ்வளவும் முடித்த பின் வேலை ,அதுவும் சாதாரணமாக கிடைத்து விடுகிறதா என்ன. அங்கும் லஞ்சம் கொடுத்தாள் தான் வேலை , பின் காலை முதல் மாலை வரை வேலை பளு, மலையில் வீட்டில் தொல்லை அறுபது வயதில் ஓய்வு. அப்பொழுது உடல் முழுதும் வியாதி. மருந்து சாப்பிடுவதற்காகவே வாழ்கிற நிலை. பிள்ளைகளுக்கு திருமனம் செய்து வைத்தால் புதிய உறவுகளினால் தன் குழந்தைகளை வைத்து அவர்களை எதிரியாக்கி தம்மை நடு தெருவில் நிறுத்து கின்ற நிலமமை . இதுதான் மனித வாழ்க்கையாக உள்ளது.
அதனால் ஒரு தொழிலைக் கற்று கொள்ள அதைப் பற்றிய படிப்பு அறிவு வேண்டும், செய்முறை கற்று கொள்ள வேண்டும். அதன் பின் அனுபவ அறிவை பெற வேண்டும் என தெரிகிறது. போலி குருக்கள். அறியாமையில் உழன்று கொண்டிருக்கும் பாமர மக்களிடையே அங்கொன்றும், இங்கொன்றும் அரை குறையாக தெரிந்துக் கொண்டு மக்களை ஆட்டு மந்தைகளாக்கி, அவர்களிடம் அந்த அரைகுறை அறிவை கொண்டு சம்பாதித்து வருகிறார்கள். போலி குருக்கள் தானும் உருப்படி ஆகாமல், தன்னை நம்பியவர்களின் வாழ்க்கை யினையும் கெடுத்து விடுகிறார்கள். இங்கிலாந்தில் அடிக்கடி மழை தூரல் பனி பொழிந்து கொண்டு இருக்கும். அது அவர்கள் வாழ்க்கைக்கு இடையுறாக இருக்கும். அதனாம் மழை அதிகம் வேண்டாம் என்பதற்காக ஒரு கவினர் ஒரு பாடலை எழுதினார் “Rain rain go away, come again anather day.”. நம் நாடோ மழையினை நம்பியுள்ள நாடு. மழை பெய்யவேண்டும் என்று தான் மக்கள் கடவுளுக்கு பொங்கல் வைத்து மலை பொழிய வேண்டி கொள்கிறார்கள்.மழை வேண்டி யாக பூசைகள் நடத்துகிறார்கள். ஆனால் ஆங்கில பள்ளிக் கூடங்களிலோ அதற்கு எதிராக செய்து கொண்டு இருக்கிறார்கள். அங்குள்ள குளிரை தாங்க கோட்டு சூட்டு, டை, தொப்பி முதலியவைகளை அணிய சொன்னார்கள் அதிலே அர்த்தம் உண்டு நம் நாட்டிக்கு தகுந்த மாதிரி பஞ்சு நூலால் நெய்யப்பட்ட துணிகளை கொண்டு உடைகளை உடுத்தி வந்தார்கள். ஆங்கில கல்வியாளர் கண்டகண்ட செயற்கை நூல் கொண்டு தயரித்த ஆடைகளை உடுத்த சொல்லி புதிய புதிய நோய்களை உண்டாக்கி வருகிறார்கள். செயற்கை நுல்களை கொண்டு தயாரிக்கப் பட்ட பாடி, கீடி, சட்டி புட்டி பனியன் போன்றவைகளை உடுத்துவதால் வெள்ளை வெட்டை, பெரும் பாடு போன்ற பெண்கள் வியாதிகளும், விந்து கழிததல் போன்ற வியாதிகள் வருகின்றன. அவைகள் எயிட்ஸ் நோயிக்கு இடம் கொடுக் கின்றன என்பதை அறியவும்.
அனுபவகுருவின் மொழி நட
நீ இந்த அண்ட சராசரங்களில் அடைய முடியாதது ஒன்றும் இல்லை. சிறிது எழுத்தறிவும். படிப்பறிவும் இருந்து அனுபவ குருவை நாடி அவருக்கு தொண்டு செய்துக் கொண்டு அவரிடம் எந்த கேள்வியும் கேட்காமல், அவர் சொன்னதை மட்டும் செவ்வனே செய்து கொண்டு, மற்றவர்களுக்கு அவர் சொல்லுகின்ற அறிவுரைகளை கேட்டு, அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்க வேண்டும். இப்படி ஒரு குருவிடம் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்தால், அவன் குரு உபதேசம் பெற தகுதி உள்ளவனாகிறான் என்று சொல்கிறார்கள். இது சராசரி மனிதனுக்கு. நல்ல அறிவு ஆற்றலும், புரிந்து கொள்ளும் தன்மை, ந்மையாகவும் இருந்தால், குருவுக்கு துரோகம் செய்யாதவனும் தன்னை காப்பற்றி கொள்ளும் தன்மையும், மக்களுக்கு நன்மை செய்யும் பக்குவம் இருந்தால் அவன் தீட்சை பெரும் தகுதியினை விரைவில் அடைகிறான். பின் குறுகிய காலத்திலேயே எல்லா வற்றையும் பெற்று யுலகத்தையே வெல்லும் வல்லமை படைத்தவனாக மாறுகிறான்.
No comments:
Post a Comment