நிம்மதி
யானைக்கு தன் உடம்பை தூக்க முடியவில்லை என்ற கவலையிருந்தால் அணிலுக்கு உடம்பு போதவில்லையே என்ற கவலை உண்டு.
ஏழைக்கு சாப்பாடு பிரச்சனை என்றால், பணக்காரனுக்கு வருமான வரிப் பிரச்சனை.
பெருளாதாரம் சரியாக இருந்தாலும் கணவனோ மனைவியோ சரியில்லாத குடும்பங்களில் பிரச்சனை.
அன்பிருந்தும் பணம் இருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களில் பிரச்சனை.
பழமொழி கூறுவது:
“வீட்டிற்கு வீடு வாசப்படி என்பார்கள்”
“ஒவ்வொரு கூந்தலிலும் பேனிருக்கும் என்பார்கள்”
பிரச்சனை இல்லாத குடும்பமே இல்லை. ஐயோ நிம்மதி இல்லையே என்று அலுத்துக் கொள்ளாதவனே இல்லை. அந்த நிம்மதியைத் தேடி அலைவதில் பயனில்லை.
நிம்மதி அது உங்கள் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறது!!!
நீ இந்தப் பூமியில் வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காக உன் தாயின் இரு தனங்களிலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன்.நீ பிறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையே கூட அவன் படைத்து வைத்திருக்கக்கூடும்.
நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!!!
எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுங்கள்! தவறில்லை… ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற கற்பனைகளில் உங்கள் நிம்மதியை நீங்களே குறைத்திட வேண்டாம்.
நம்பிக்கையோடு ஒவ்வொரு நிமிடத்தையும் வாழப்பழகுங்கள் நிம்மதி உங்களைத்தேடி வரும்!!!
No comments:
Post a Comment