உடல் எடையை சீராக வைக்க… உண்ணவேண்டிய உணவுகள்!!!
உடல் எடை பராமரிப்பு என்பது, மிக முக்கிய கடமைகளில் ஒன்று. உடல் எடை அதிகரிப்பு பல நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஒரு நாள் உணவில் என்னென்ன எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றியும், சாப்பிட வேண்டிய நேரம், உணவுப் பட்டியல் ஆகியவற்றையும் பார்ப்போம். இவை உடல் எடை பராமரிப்புக்கு உதவும்.
காலை 6 மணிக்கு சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி),
காலை 8 மணிக்கு இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணை இல்லாத தோசை – 1, அதற்கு தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.
முற்பகல் 11 மணிக்கு, சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் – 1 (அ) 2 டம்ளர். நண்பகல் 1 மணிக்கு அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)
மாலை 4 மணிக்கு சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)
மாலை 5.30 மணிக்கு ஏதாவது பழங்கள் இரண்டு.
இரவு 8.00 மணிக்கு, எண்ணை இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ) காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன், முளைக் கட்டிய பயிறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.
படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும்.
இவைகளை தொடர்ந்து கடைபிடித்தால் உடல் எடையை சரியாக பராமரிக்க முடியும்.
No comments:
Post a Comment