Wednesday, April 8, 2015

பணத்தை பெற இதோ மந்திரம் !

பணத்தை பெற இதோ மந்திரம் !

மனிதன் உயிரோடு வாழ்வதற்கு காற்று மிகவும் அவசியம். ஆனால் இன்று அந்த தூயக்காற்றை கூட விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலைமை வந்து கொண்டிருக்கிறது. அப்படி என்றால் காற்றை வாங்க காசு தேவை. ஆக, மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியமான பொருளாக பணம் இருக்கிறது. கைநிறைய பணம் இருந்தால் அதை சில மணிநேரங்களிலேயே மிகச்சுலபமாக செலவும் செய்துவிட முடிகிறது. ஆனால் அந்த பணத்தை மொத்தமாக பெறுவதற்கு இரத்தத்தை சிந்த வேண்டி இருக்கிறது. சிலருக்கு மிக சுலபமாக பணம் கிடைக்கிறது. பலருக்கு பல்லக்கு தூக்கி பாடுபட்டாலும் பணம் கிடைப்பதில்லை. மனிதன் பணத்தை பெற சுலபமான வழி இருக்கிறதா?

வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தால் கூட அதை விழுங்குவதற்கு சிரமப்பட்டு முயற்சி செய்ய வேண்டும். சிரமம் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே கிடைக்காது. எனவே எப்போதும் சுலபமான வழியில் பணம் கிடைக்கவே கிடைக்காது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். நேற்று வரையில் ஓட்டை குடிசையில் இருந்தானே இன்று திடீரென்று சொந்த காரில் பயணம் செய்கிறானே அவன் பாடுபட்டா பணத்தை சேர்த்திருப்பான்? எப்படியோ செய்யக்கூடாததை செய்து, சேரக்கூடாததை சேர்த்து சம்பாத்தித்திருக்க வேண்டுமே தவிர பாடுபட்ட வழியில் பெற்றிருக்க முடியாது என்று பலரும் பேசுகிறோம். இது தவறு. நேற்றுவரை என்ற வார்த்தை ஒரு மனிதனை வெளிப்புறமாக வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்ததை வைத்து சொல்லப்படுவது ஆகும். அதற்கு முன்னால் அவனுக்குள் என்னென்ன நடந்தது, எந்த வகையில் அவன் அறிவு வளர்ந்திருந்தது, மெளனமாக அவன் செயல்பட்டது எப்படி? என்பதை நாம் அறிய மாட்டோம்.

அறியாமல் பேசுவது தவறு. ஒரு மனிதனுக்கு தொழில் செய்வதனால் மட்டும் பணம் வந்துவிடப்போவது கிடையாது. தொழில் செய்வதற்காக அவன் எந்த வகையில் தன்னை நெறிப்படுத்தி கொள்கிறான். தனக்கென்று சுயக்கட்டுப்பாடுகளை வகுத்து கொள்கிறான். மற்றவர்களின் வழிகாட்டுதல்களை எப்படி நடைமுறைப்படுத்துகிறான் என்பதை பொறுத்தே ஒருவனுக்கு பணத்திற்கான யோகம் அமைகிறது எனலாம். மற்ற நாடுகளை விட நம் நாட்டு பெரியவர்கள் பணம் பெறுவதற்கு வெளிப்படையான முயற்சிகளையும் உள்முகமான ஒழுக்கங்களையும் மிக அதிகமாக சொல்லி சென்றிருக்கிறார்கள். அவற்றை கடைபிடித்தாலே கண்டிப்பாக செல்வ வளம் கிடைக்கும்.

நமது முன்னோர்கள் பணம் பெறுவதற்கு கூறிய வழிகளை நீங்கள் சொல்ல இயலுமா?

ஒரு நாளின் துவக்கம் சூரிய உதயத்திலிருந்து ஆரம்பமாகிறது. ஆனால் மனிதனுக்கு நாள் என்பது சூரிய உதயத்திற்கு முன்பே துவங்கி விடுகிறது. ஆம். அவன் அதிகாலையில் கண்விழிக்க வேண்டும். தொழில் நிமித்தம் இல்லாது வேறு எந்த காரணத்தினாலும் சூரிய உதயம் வரையில் படுக்கையில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொழில் நிமித்தம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் இன்றைய வேலைகள் பல விடியற்காலை நேரத்தில் தான் முடிகிறது. அப்படிப்பட்ட வேலை செய்பவனை ஐந்து மணிக்கு எழுந்துகொள் என்றால் அது அவனை கொலை செய்வதற்கு சமமாகும்.

அடுத்ததாக காலை எழுந்தவுடன் கண்விழித்து தன் முகத்தையோ, தாயின் முகத்தையோ, மனைவியின் முகத்தையோ பார்க்க வேண்டும். அது இயலாத போது தனது உள்ளங்கையை பார்க்கலாம் அல்லது இஷ்ட தெய்வத்தின் உருவத்தை காணலாம். இது இல்லாமல் வேறு பொருட்களை, வேறு மனிதர்களை தினசரி பார்த்தால் மனதளர்ச்சி ஏற்படும். படுக்கையில் இருந்து இறங்கும் போது வலது காலை பூமியில் ஊன்றி இறங்கவேண்டும். அப்படி இறங்கும் போது குலதெய்வத்தின் பெயரையோ, இஷ்ட தெய்வத்தின் தோத்திரத்தையோ, மகாலஷ்மி அல்லது விநாயகர் மந்திரங்களையோ சொல்ல வேண்டும்.

ஆண்களாக இருந்தால் செவ்வாய்கிழமையும், பெண்களாக இருந்தால் சனிக் கிழமையும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. தலைமுடி குறைத்த பின்போ முகச்சவரம் செய்த பிறகோ, உடனடியாக தலையில் எண்ணெய் தேய்க்க கூடாது. கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்து நின்று குளிக்க வேண்டும். எப்போதும் பிறந்தமேனியாக குளிக்க கூடாது. இடது கையை தரையில் ஊன்றியோ, சாதத்தை உருட்டியோ, இலையை அல்லது உணவுத்தட்டை வழித்தோ சாப்பிடக்கூடாது. பகல் வேளையில் பால்சாதமும், இரவுவேளையில் தயிர்சாதமும் கூடவே கூடாது. கிரகணம் அன்று தாம்பத்திய உறவோ, மெத்தையில் படுக்கையோ கூடாது. புதிய ஆடைகளை ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டுமே அணிய வேண்டும். திருமணம் ஆன பிறகு தகுந்த காரணம் இல்லாமல் நாற்பத்தி ஐந்து நாட்களுக்கு மேல் முடி வெட்டாமல் இருக்க கூடாது. நகத்தை கடிக்க கூடாது இரவில் நகம் வெட்டக்கூடாது. மற்றவர்களின் உடை, செருப்பு, சாப்பிடும் பாத்திரம் இவைகளை பயன்படுத்தக்கூடாது.

தலைமுடியில் இருந்து வழியும் வியர்வை, துணியை அலசி பிழியும் போது உதிரும் தண்ணீர், துடைப்பத்தின் புழுதி, முறத்தின் காற்று முதலியவை உடலில் பட்டால் தரித்திரம் பெருகும். எச்சில் கையால் தலையை தொடக்கூடாது. நகம், முள், கரித்துண்டு, சாக்பீஸ், இரத்தம் இவற்றால் தரையில் எழுதக்கூடாது, கோலம் போடக் கூடாது. அசுத்தமாக இருக்கும் போது சூரியனையோ, சந்திரனையோ நேருக்கு நேராக பார்க்ககூடாது. பகல் நேரத்தில் கணவன்-மனைவி இணையக்கூடாது. உடைந்து போன நாற்காலிகளை பயன்படுத்தக்கூடாது. கர்ப்பமான மனைவி உள்ள கணவன் கடலில் நீராடக்கூடாது. அமாவாசை அன்றும், வெள்ளிக்கிழமை அன்றும் எல்லா நாட்களிலும் காலை, இரவுகளில் நெல்லிக்கனியை உண்ணக்கூடாது
சுடுகாட்டில் எரிந்த கரி, சுடுகாட்டு எலும்பு, நெருப்பு, பருத்தி விதை, பசு, உமி, திருநீறு, குரு, பிராமணர் இவற்றில் (இவர்களின் மீது) கால்படக்கூடாது. சமுத்திரம், பாம்பு புற்று, கோவில் தேர் போன்றவற்றில் சிறுநீர் கழிக்ககூடாது. ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் தலையை சொரியக்கூடாது, தேன் கூடு, குருவிக்கூடு, கர்ப்பப்பை சிசு போன்றவற்றை கலைக்ககூடாது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். இவைகளை செய்தால் மனிதர்களின் எண்ணங்கள் கெடுதியாகி தரித்திரம் மேலோங்கும் என்பது அவர்களது நம்பிக்கையாகும். மேலும் ஆட்டுக்காலிலிருந்து கிளம்புகிற தூசு, கழுதை கிளப்புகிற புழுதி, அதிர்ந்து நடக்கும் பெண்களின் கால்களிலிருந்து கிளம்பும் புழுதி, போன்றவைகளும் குடும்பத்தை வறுமைப்பிடியில் தள்ளும் என்பது அவர்களின் கருத்தாகும்.

எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொன்னீர்கள். எதை செய்தால் செல்வம் பெருகும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

மல்லிகை, முல்லை, தாமரை போன்ற மலர்களை பணம் வைக்கும் இடத்தில் தினசரி புதிதாக வைக்க வேண்டும். வலம்புரி சங்கை ஓசை வரும்படி பூஜையறையில் வைக்க வேண்டும். வீட்டு வாசலில் கணபதி, மகாலஷ்மி, வெங்கடாஜலபதி போன்ற தெய்வங்களின் உருவங்களை அல்லது சின்னங்களை வைக்க வேண்டும். மாதத்தில் ஒருமுறை சிறந்த பிராமணருக்கும், வாரத்தில் ஒருமுறை இயலாத            பிச்சைக்காரனுக்கும், தினமும் ஒருமுறை எறும்புக்கும் தானம் கொடுக்க வேண்டும். வீட்டில் துளசி, மல்லிகை போன்ற செடிகளை வளர்க்க வேண்டும். சாளக்கிரமம், ருத்ராட்சம், பாதரசம், தாமரைப்பூ, பசுஞ்சாணம் இவற்றில் எதாவது ஒன்று வீட்டில் தினசரி இருக்க வேண்டும்.

இது தவிர செல்வம் பெருக ரகசிய வழிகள் ஏதாவது உண்டா?

நாம் வாழுகிற இடத்திலிருந்து எண்பது கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் எட்டு திசைகளில் உள்ள ஊர்களில் இருக்கும் ஆறு, ஏரி, குளம், கடல் இவற்றிலிருந்து எட்டு சிறிய செப்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வந்து, வீட்டின் எட்டு மூலையிலும் புதைத்து வைக்க வேண்டும். அப்படி புதைக்கும் போது கூடவே வில்வ இலை, நெல்லிமரத்து இலையுடன் கொம்பு மஞ்சளையும் சேர்த்து புதைக்க வேண்டும். புதைத்த பிறகு அந்த இடத்தில் எட்டு வாரங்கள் நீங்கள் எந்தகிழமையில் புதைத்தீர்களோ அந்த கிழமையில், அந்த நேரத்தில் கற்பூரம் ஏற்றி குல தேவதையை வணங்க வேண்டும் அப்படி வணங்கினாலும் செல்வம் பெருகும்.

மேலும் வெள்ளிக்கிழமை வரும் பெளர்ணமி தினத்தில் சுக்கிர ஓரையில் வில்வம், துளசி, செந்நாயுருவி போன்ற வேர்களை முறைப்படி காப்புக்கட்டி எடுத்து வந்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக்கொண்டாலும் சித்தர்கள் கடைபிடிக்கிற ஜோதிப்புல் சூரணத்தை வீட்டில் வைத்துக்கொண்டாலும் மிக கண்டிப்பாக பணத்தட்டுபாடு இருக்காது. பணத்தை நம்மை நோக்கி ஈர்க்க செய்யும் குருபரம்பரை வழியான மந்திரங்களும் உண்டு. அவற்றை இங்கே பகிரங்கமாக சொல்ல இயலாது. ஆனால் அவைகள் மிகவும் வீரியம் உள்ள மந்திரங்கள். நீங்கள் இங்கு சொல்லப்பட்டதை கடைப்பிடித்து பாருங்கள். இது  பெரிய கோடீஸ்வரர்களாக நீங்கள் ஆகவில்லை என்றாலும் குறைந்த பட்சம் கடன் இல்லாமல் விரும்பிய பொருளை வாங்கி அனுபவிக்கும் பேறு பெற்றவர்களாக இருப்பீர்கள். இப்போது நான் சொன்னது எதுவும் பெரிய கடினமான வேலைகள் அல்ல. ஆனால் இதையும் கூட பலரால் செய்ய முடிவதில்லை…

No comments:

Post a Comment