நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே!
* உயர்ந்த குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து அதை நோக்கி முழுஈடுபாட்டுடன் உழைக்கத் தொடங்குங்கள். கடந்த காலத்தைப் பற்றிய வருத்தச் சுமைகள் உங்களை அழுத்துவதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
* எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெறும் உடல் உழைப்பு மட்டும் இருப்பது கூடாது. மூளையும் அதில் ஈடுபடுவது அவசியம்.
* வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் நம் முன்வினைப்பயனால் எற்படுகிறது. இதையே நாம் விதி என்று குறிப்பிடுகிறோம்.
* நம்முடைய நோக்கம் உயர்ந்ததாக, சுயநலமில்லாமல் இருந்து விட்டால், நாம் செய்யும் செயல்களின் விளைவு நம்மைப் பாதிப்பதில்லை.
* சிலர் சிறுவயது முதலே பிடிவாதத்துடன் செயல்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்து பழகியவர்களுக்கு அதை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
* நிகழ்காலத்தில் நம் முயற்சிகளை வரிசைப்படுத்திக் கொள்ளாமல், நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று தான்தோன்றியாக செயல்பட்டால் வாழ்வில் குழப்பமே மிஞ்சும்.
* முயற்சி என்ற பெயரில் அளவுக்கு மீறித் திட்டமிடுவதும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். அதனால், சீரான முறையில் முயற்சித்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.
* உயர்ந்த லட்சியத்திற்காக வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டால், நம் உள்ளத்தில் அரியதொரு சக்தி தூண்டப்படுவதை உணரமுடியும்.
* கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய பண்புகளை வளர்த்துக் கொள்பவனிடம் மனோசக்தி பயனில்லாமல் வீணாகி விடும்.
* சுயநலத்துடன் செயல்படும்போது மனிதமுயற்சி தீமைக்கு வழிவகுக்கிறது. அதுவே,பொதுநலத்துடன் அமையும்போது நன்மையை வழங்குகிறது.
* எண்ணங்கள் எப்போதும் தூய்மையானதாகவும், பிறருக்கு நன்மை தருவதாகவும்,எளிமையானதாகவும் இருக்க வேண்டும்.
* நல்ல எண்ணத்தை மனதில் நுழைய அனுமதித்தால் தீய எண்ணம் தானாகவே மறையத் தொடங்கிவிடும்.
* மனதில் தோன்றும் நல்ல, தீய எண்ணம் எதுவாக இருந்தாலும் அதற்கு நாம் தான் முழு பொறுப்பாளி.
* பணம் மட்டுமே செல்வம் என கருதுகிறோம். நல்ல உடல்நிலை, கலைத்திறமை,அறிவுத்திறம் எல்லாமே செல்வங்களே. அவற்றை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.
* உலகம் ஒரு மருத்துவமனை. நோயாளிகளான நம்மை கடவுள் என்னும் தலைமை மருத்துவர் மருந்தும், பத்தியமும் கொடுத்து குணப்படுத்துகிறார்.
* உங்கள் சிந்தனையை தனியாக அலையவிடாதீர்கள். உடலும் மனமும் இணைந்துசெயலாற்றட்டும். அப்போது எந்தச் செயலிலும் சுறுசுறுப்பு, திருப்தியுடன் ஈடுபட்டு வருவீர்கள்.
* பிரார்த்தனை என்பது அமைதியை நாடும் முயற்சி. ஆனால், அதை நாம் சிறுசிறு காரியங்களுக்காக கூடப் பயன்படுத்த நினைப்பது கொஞ்சமும் சரியல்ல.
No comments:
Post a Comment