திருமண சடங்குகளும் தாத்பரியமும்
விளக்கேற்றுதல் இருள் விலகி ஒளியேற்படும்
அரசாணிக்கால் ஊன்றுதல் அரசு செலுத்த செங்கோல் போன்றதாகும்.
பந்தக்கால் நடுதல் ஒற்றுமை வலுப்படும்.
மாவிலைத் தோரணம் மங்கலம் பெருகும்.
திருமாங்கல்யம் இறைவனின் அருள்வடிவாகும்.
திருமாங்கல்யம் கோர்க்கப்பட்ட ஒன்பது இழை மஞ்சள் நூல் வாழ்க்கையில் மேன்மை ஆற்றல் தூய்மை தெய்வத்தன்மை விவேகம் தன்னடக்கம் தொண்டுள்ளம் போன்ற நற்பலங்களைத் தரும் அடையாளமே ஒன்பது இழை கொண்ட மஞ்சள் நூல் தாலிச்சரடாகும்.
அம்மி மிதித்தல் வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் நேரிட்டாலும் அதை நீ இந்தப் பாறையைப் போன்று உறுதியான உள்ளத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தல்
அருந்ததி பார்த்தல் கற்பின் சிறப்பினை அறிவுறுத்தல்
ஹோமம் வளர்த்தல் ஆயுள் நீடிக்கச் செய்யும்.
காப்புக் கட்டுதல் அவ்வேளையில் துன்பம் நிகழாதிருப்பதற்காக.
பூணூல் அணிவித்தல் மந்திர உபதேசங்களை மனத்தில் பதியச் செய்திடல்.
படையல் அனைத்து தேவதைகளுக்கும் பிரியம்
காசி யாத்திரை பிரம்மச்சாரியாக இருந்தவனை இல்லறத்தானாக மாற்றும் நிகழ்வு.
காப்பரிசி மலர் முப்பத்து முக்கோடி தேவர்களும் மனிதர்களும் அருளாசி வழங்குவதாக ஐதீகம்.
மஞ்சளாடை மங்கலமும் நோய் தடுப்பும் உண்டாகிட
மாலை மாற்றிக் கொள்வது மாலைகளில் உள்ள மலர் போல் மணம் பெற்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதை உணர்த்துவது.
யாகசாலை அக்னி தேவதையின் சாட்சியாக திருமணத்தை நடத்துவதாக ஐதீகம்.
விருந்தோம்பல் சகல ஜீவராசிகளுக்கும் உரிய விருந்தோம்பல் மாண்பு/
வாழ்த்துதல் இம் மண்ணுலகில் 16 பேறுகளூம் பெற்று பெருவாழ்வு வாழ்த்திடும் பண்பு.
வாழை மரம் நடுதல் வாழையடி வாழையாகக் குலை தள்ளூவதுபோல் குலம் தழைக்க வேண்டி நடுதல்.
No comments:
Post a Comment