மாற்றி சிந்தித்து வெற்றியை அடையலாம் !
உங்கள் மனது தோல்வியை நினைத்து கொண்டு இருந்தால் உங்களுக்குள்ளே அடிக்கடி கூறி சொல்லுங்கள் தோல்வியின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று. உடனே அந்த தோல்வி என்ற எண்ணம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.
உங்கள் ஆழ்மனதுதான் உங்களுடைய நடத்தைகள் அனைத்திற்கும் காரணம். நீங்கள் ஒரு செயலை தவறு என்று உங்கள் மனதிற்கு கூறினால் உங்கள் ஆழ்மனதும் “ஆம்” அந்த செயல் தவறு என்று ஆமோதிக்கும்.இல்லை நான் செய்யும் செயல் சரிதான் என்று உங்கள் ஆழ்மனதிற்கு கூறினீர்கள் என்றால் ஆம் அந்த செயல் சரிதான் என்று உங்கள் ஆழ்மனது உங்களுடன் சேர்ந்து துதி பாடும்.
ஆழ்மனது தான் உங்களுக்கு நடக்கும் நல்லவை கெட்டவை அனைத்திற்கும் காரணம்.
எண்ணம் போல் வாழ்வு என்று ஏன் கூறுகிறார்கள். நீங்கள்நல்லவற்றை நினைக்குபோது உங்கள் ஆழ்மனதில் அந்தநல்ல எண்ணங்கள் பதிந்து உங்கள் நடத்தையும் நல்லவையாக இருக்கும்.
கெட்டதை நினைக்கும் போது அவையும் உங்கள் ஆழ்மனதில் பதிந்து உங்கள் நடத்தையும் கெட்டவையாக இருக்கும்.
மனது என்பது ஒளி நாடாவை போன்றது. எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பதிவு செய்து திருப்பி சொல்லும்.
ஆழ்மனது என்பது ஒரு ஜெராக்ஸ் மிஷினை போன்றது. உள்ளதை உள்ளபடியே எடுத்து காட்டும். ஆழ்மனது என்பது முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது. எது எப்படியோ அதை அப்படியே பிரதிபலிக்கும்.
அதனால் தோல்விகரமான சிந்தனைகளுக்கு பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவை அப்படியே உங்கள் ஆழ்மனதில் பதியப்பட்டு உங்களுடைய் நடத்தையிலும் பேச்சிலும் வெளிப்படும். இந்த காரியம் நடக்காது என்னால் அங்கு போக முடியாது என்னால் அந்த செயலை செய்ய முடியாது என்று நினைத்தீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் நினைப்பதுதான் நடக்கும். அதாவது எல்லாமே எதிர் மறையாகத்தான் நடக்கும். இதையே மாற்றி நினைத்து பார்த்தால் என்னால் அந்த செயலை செய்ய முடியும், என்னால் அங்கு போக முடியும், என்று நினைத்தால் நல்ல பலனையே எதிர்பார்க்கலாம். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.
நீங்கள் தடை என்று நினைக்கும் எந்த காரியமும் உங்களுடைய நினைப்பில் தான் உள்ளது. அந்த தடையை தகர்த்து எறியலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அந்த தடையை தகர்த்து எறிந்து விடுவீர்கள்.
விளையாட்டு வீரர்களை எடுத்து கொள்ளுங்கள். எப்படி அவர்களால புதிய சாதனைகளை படைக்க முடிகின்றது. சாதனைகளை படைக்க முடியாது என்று அவர்கள் நினைத்தால் அவர்களால் புதிய சாதனைகளை உண்டாக்க முடியுமா?
எனவே எந்த தடையையும் மாற்று சிந்தனை மூலம் தகர்த்து எறிந்து விடலாம்.
ஒரு செயலில் நீங்கள் தோல்வியை சந்திக்கிறீர்கள் என்றால் அதற்க்கு என்ன காரணம். பல நாட்களாக பல வாரங்களாக பல வருடங்களாக தோற்று விடுவீர்கள் என்று உங்களுக்குள் சொன்னதின் விளைவாகத்தான் இருக்கும்.
தோல்வியை நான் நம்புவதில்லை என்று மாற்றி நினைத்து உங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டு இருங்கள். வெற்றி நிச்சயம்.
மாற்றி சிந்திப்பதற்கு உங்களுடைய மனம் ஒரு முக்கிய கருவியாகும். அந்த மனதை உங்களுக்கு சாதகமாக மாற்றி நினைப்பதற்கு ஒரு கருவி தேவை. அந்த கருவிதான் தியானம்.
தியானம் என்ற கருவியின் மூலமாகத்தான் உங்கள் மனதை மாற்றி நினைக்க வைத்து உங்கள் வெற்றியை அடையலாம்.
No comments:
Post a Comment