மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள் ..........
“எவ்வளவோ உழைக்கிறேன், கஷ்டப்படுறேன், கோவிலுக்கு போறேன், சாமி கும்பிடுறேன் அப்படியிருந்தும் என்னோட பொருளாதார நிலைமையில எந்த முன்னேற்றமும் இல்ல. குறிப்பாக பணமே என்கிட்டே தங்கமாட்டேங்குது… முன்னை விட மோசமா இருக்கு! வீட்ல எல்லாருக்கும் அடுத்தடுத்து விபத்து, நோய் இப்படி ஏதாவது ஒன்னு வருது. நிம்மதியே இல்லை…” என்று நினைப்பவர்கள் கீழ்கண்டவற்றை அவசியம் தெரிந்துகொண்டு அவற்றை விலக்கவேண்டும்.
மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள் ..
1. தன்னம்பிக்கையற்றவர்கள்
2. கடமையைச் செய்யாதவர்கள்,
3. குலதர்மம் தவறியவர்கள்,
4. செய்ந்நன்றி மறந்தவர்கள்,
5. புலனடக்கம் இல்லாதவர்கள்,
6. பொறாமை கொண்டவர்கள்,
7. பேராசை கொண்டவர்கள்,
8. கோபம் கொள்பவர்கள்,
9. சான்றோரை மதிக்காதவர்கள்,
10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள்.
11. குரு நிந்தனை செய்பவர்கள்,
12. கால்நடைகளுக்கு ஊறு செய்பவர்கள்,
13. இறைச்சி உண்பவர்கள்,
14. விருந்தினரை உபசரிக்காதவர்கள்,
15. பொய் பேசுபவர்கள்,
16. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள்,
17. பிறர்மனை விரும்புகிறவர்கள்,
18. மனத்துணிவு அற்றவர்கள்,
19. அகத் தூய்மை அற்றவர்கள்,
20. புறத்தூய்மை அற்றவர்கள்.
21. கொடுஞ்சொல் பேசுகிறவர்கள்,
22. ஆணவம் கொண்டவர்கள்,
23. சோம்பேறியாய் இருப்பவர்கள்,
24. அழுக்கு ஆடை அணிபவர்கள்,
25. பகலில் உறங்குபவர்கள்,
26. பகலில் உடல் உறவு கொள்பவர்கள்,
27. பசுக்களை வதை செய்பவர்கள்,
28. விரதங்கள் மேற்கொள்ளாதவர்கள்,
29. நம்பிக்கை துரோகம் செய்பவர்கள்,
30. நகத்தால் புல்லைக் கிள்ளுபவர்கள்.
31. நீரில் கோலம் போடுபவர்கள்,
32. நிலத்தில் நகத்தால் கீறுபவர்கள்,
33. சந்தியா வந்தனங்கள் உள்ளிட்ட அவரவர் கடமைகளை செய்யாதவர்கள்
34. நித்திய அனுஷ்டானங்களைப் புறக்கணிப்பவர்கள்,
35. தெய்வத்தை நிந்தனை செய்பவர்கள்,
36. கல்வி கற்காதவர்கள்,
37. கற்றவழி நிற்காதவர்கள்,
38. வீண் சண்டை விரும்புகிறவர்கள்,
39. விவேகம் இல்லாதவர்கள்,
40. இரக்கம் அற்றவர்கள்.
41. பிறர் பொருளைக் களவாடுபவர்கள்,
42. தந்திரமாக ஏமாற்றுபவர்கள்,
43. உழைப்புக்கேற்ற ஊதியம் தராதவர்கள்,
44. திருமணத்தைத் தடை செய்பவர்கள்,
45. நீதி சாஸ்திரங்களைக் கற்க மறுப்பவர்கள்,
46. தற்புகழ்ச்சி கொள்பவர்கள்,
47. பிறரை ஏளனம் செய்பவர்கள்,
48. காலைக் கழுவாமல் வீட்டிற்குள் நுழைபவர்கள்,
49. ஈரக் காலோடு படுக்கையை மிதிப்பவர்கள்,
50. ஆடையின்றி நீராடுபவர்கள்.
51. எண்ணெய்க் குளியலன்று பகலில் உறங்குபவர்கள்,
52. வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பவர்கள்,
53. அந்தியில் தீபம் ஏற்றாதவர்கள்,
54. அந்திம வேளையில் உணவு உண்பவர்கள்,
55. தெய்வப் பிரசாதங்களைப் புறக்கணிப்பவர்கள்,
56. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள்,
57. கோள் மூட்டுபவர்கள்,
58. தீய பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள்.
59. வீட்டை அசுத்தமாக வைத்திருப்பவர்கள்
60. மது அருந்துபவர்கள்
இவை அனைத்தும் விலக்கப்பட வேண்டியவைகள். இவற்றை நீங்கள் மறந்தும் செய்யாதீர்கள். இவைகளை செய்தால் திருமகள் உங்கள் கிரகத்தில் தங்கமாட்டாள் என்பதுடன் இவை பாவச் செயல்களும் கூட. நம்மால் நிச்சயம் இவைகளை நிச்மகாலட்சுமி வாசம் என்றால் ஏதோ காசு பணத்தோடு மட்டும் முடிச்சு போட்டு பார்க்காதீர்கள். அது எல்லாவற்றுக்கும் மேலான ஒன்று.
மேற்கூறிய பாவச்செயல்களை கூசாமல் செய்துகொண்டு உலாவரும் எத்தனையோ பணக்காரர்களை நான் பார்க்கிறேனே என்று நீங்கள் சொன்னால்… அது உங்கள் அறியாமையே அன்றி வேறில்ல. காரணம்… செல்வம் என்பது வேறு… லக்ஷ்மி கடாக்ஷம் என்பது வேறு.
ஒருவன் செல்வந்தனாக இருப்பது அவன் பிராரப்த கர்மாக்களில் ஒன்று. அவ்வளவு தான். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் என்பது இறைவன் தரும் பரிசு.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. (குறள் 377)
என்பது வள்ளுவர் வாக்கு.
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.செல்வந்தர்களால் நிம்மதியாக ஒரு வேளை கூட சாப்பிட முடியாத அளவிற்கு உடலில் நோய்களின் ராஜ்ஜியம் இருக்கும். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்கள் செல்வத்தோடு நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பார்கள்.
ஒருவேளை செல்வந்தர்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால் புத்திரர்கள் நன்றாக இருக்கமாட்டாகள். பெற்றோர் பெயரை கெடுக்கும் பிள்ளைகளாக இருப்பார்கள்.
ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்களின் பிள்ளைகள் பெற்றோரில் பெயரை காப்பாற்றி அவர்கள் குடும்பத்திற்கே பெருமை சேர்ப்பார்கள்.
செல்வந்தர்கள் இல்லம் பெரிதாக இருந்தாலும் அதில் நிறைவு இருக்காது. லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்களின் இல்லம் உண்மையில் திருமகளின் வீடு போல இருக்கும்.
லக்ஷ்மி கடாக்ஷம் என்பது பரந்து விரிந்த பொருளை கொண்டது. புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்வினை, நுகர்ச்சி, அறிவு, அழகு, பொறுமை, இளமை, துணிவு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்ற 16 பேறுகளை குறிப்பது லக்ஷ்மி கடாக்ஷம்.
‘அதிர்ஷ்டம்’ யாருக்கு வேண்டுமானாலும் அடிக்கலாம். ஆனால் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ எல்லாருக்கும் கிடைக்காது.
No comments:
Post a Comment